Published:Updated:

இந்த இரண்டில் உங்கள் வருமானம் எப்படிப்பட்டது? பணம் பண்ணலாம் வாங்க - 2

Rupee ( Image by Free stock photos from www.rupixen.com )

ஒரே பாடல்; ஓஹோ என்ற வாழ்க்கை என்பதெல்லாம் நிழல் மட்டுமே. உண்ணாத பகல்களும், உறங்காத இரவுகளுமே தொழில் முனைவோரின் நிஜம்.

இந்த இரண்டில் உங்கள் வருமானம் எப்படிப்பட்டது? பணம் பண்ணலாம் வாங்க - 2

ஒரே பாடல்; ஓஹோ என்ற வாழ்க்கை என்பதெல்லாம் நிழல் மட்டுமே. உண்ணாத பகல்களும், உறங்காத இரவுகளுமே தொழில் முனைவோரின் நிஜம்.

Published:Updated:
Rupee ( Image by Free stock photos from www.rupixen.com )

எந்த ஒரு பயணமும் முதல் அடியில்தான் தொடங்குகிறது என்பார்கள். பர்சனல் ஃபைனான்ஸைப் பொறுத்தவரை வருமானம்தான் அந்த முதல் அடி. வரவு இன்றி செலவு இல்லை; சேமிப்பு இல்லை; ஏன், வாழ்க்கையே இல்லை. பொதுவாக வருமானம் இரண்டு வழிகளில் வரக்கூடும்.

1. தொழில்

2. வியாபாரம்.

முதலில் தொழிலைப் பார்ப்போம்.

Money
Money

தொழில்:

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அரசு வேலைகள், வங்கிகள், தொழிற்சாலைகள், சாஃப்ட்வேர் கம்பெனிகள் போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளில் வேலை பார்க்கும் இந்தியர்கள் வெறும் 17 சதவிகிதம் பேர் மட்டுமே. வேலை நேரம், சம்பளம், ஊதிய உயர்வு, நிரந்தரப் பணி, பென்ஷன் வசதிகள் போன்ற எல்லாமே இந்தத் துறைகளில் முன்கூட்டியே திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளன. சிறந்த கல்வித் திறனால் நல்ல சம்பளம் பெறும் இந்த 17 சதவிகிதத்தினர், ரிடையர் ஆகும்வரை வேறு வேலைகள் பற்றி சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. தங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள வேலையைத் திறமையாக முடிப்பதும், தங்கள் திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்வதுமே இவர்களை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்தும். தேவை என்றால் நண்பர்களுடன் கார் ஷேரிங், ரூம் ஷேரிங் போன்றவற்றில் ஈடுபட்டு தங்கள் வருமானத்தைப் பெருக்கலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தொழில்துறையிலுள்ள மீதி 83 சதவிகிதத்தினருக்கு நிரந்தரப் பணி, ஊதிய உயர்வு என்பது போன்ற எதுவுமே நிச்சயமில்லை. அதிலும் கொரோனாவுக்குப் பின் இவர்கள் அவதி சொல்லத் தரமன்று. ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு போன்றவை இவர்களை விளிம்பு நிலைக்குத் தள்ளியுள்ளது. பலரும் கிக் எகானமியை (Gig Economy) நோக்கித் திரும்பியுள்ளனர். (ஒரே வேலையை நம்பி இராமல், சில பல பகுதி நேர வேலைகளைச் செய்வதே கிக் எகானமி). ஓலா ஓட்டுபவர், ஸ்விக்கியிலும் இருப்பார். இன்ஷூரன்ஸ் ஏஜன்டாக இருப்பவர் வீட்டுத் தரகராகவும் இருப்பார். ஆன்லைனில் வேலை செய்யப் பயிற்சி உள்ளவர், ஆன்லைன் டியூஷன், பிளாக் எழுதுதல், சிறு கம்பெனிகளுக்கு கணக்கெழுதுதல் போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருமானத்தை அதிகரிக்கிறார். சில மாணவர்களும் இதில் ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்கள்.

Office
Office
Image by RAEng_Publications from Pixabay

வியாபாரம்:

வேலையில் ஈடுபட்டு சம்பாதிப்பவர்களைவிட தொழில் முனைவோர் மற்றும் வியாபாரிகள் தங்கள் வருமானத்தைப் பலமடங்கு பெருக்க வாய்ப்புள்ளது. உதாரணமாக, சமீப காலத்தில் பெரும் கோடீஸ்வரராகியுள்ள வேலுமணி அவர்களை எடுத்துக்கொள்ளலாம். 20 வருடங்களுக்கு முன் வெறும் இரண்டே லட்சத்தில் தொடங்கப்பட்ட தைரோகேர் கம்பெனியை இன்று ரூ. 4,500 கோடிக்கு விற்றிருக்கிறார். நிலமற்ற ஏழையான தந்தைக்கும், எருமைகளை வளர்த்து பால் வியாபாரம் செய்த தாய்க்கும் பிறந்த இவர், இன்று பல கோடிகளுக்கு அதிபதி.

``அது அவர் அதிர்ஷ்டம்; நமக்குத்தான் தலையெழுத்து சரியில்லையே” என்று புலம்புவோருக்கு ஒரு வார்த்தை. இவர் போன்று வெற்றி பெற்ற பலரும் தங்கள் சௌகரியங்களைத் துறந்து நேரம், காலம் பாராமல் வேலையில் ஈடுபடுகின்றனர். இரவு, பகலாக உழைப்பதால் மட்டுமே வென்றுவிட முடியாது. எதில் நம் உழைப்பைச் செலவிடுகிறோம் என்பதும் முக்கியம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரியல் எஸ்டேட் துறையில் வெல்ல உதவும் முறையை `ரிச் டாட் புவர் டாட்' என்ற புத்தகத்தில் வெளியிட்டு உலகப் புகழ் பெற்றார் ராபர்ட் கியோசகி.

``குறைந்த விலையில் கிடைக்கும் பழைய வீடுகளை வாங்கி இங்கு ஒரு ஜன்னல், அங்கு ஒரு கதவு என்று புதுமைப்படுத்தி பெரிய லாபம் பார்க்கலாம்; சில வீடுகளை முறையாக சுத்தம் செய்தாலே அவற்றின் மதிப்பு உயரும்; இன்னும் சில வீடுகளுடன் ஃப்ரீயாகக் கிடைக்கும் காலி இடம், வீட்டைவிட மதிப்பு வாய்ந்ததாக மாறும் வாய்ப்பு உண்டு” என்பது அவர் கண்டறிந்த சூட்சுமம்.

Ratan Tata
Ratan Tata

ரத்தன் டாடா போன்று பிறக்கும்போதே கோடீஸ்வரர்களாகப் பிறந்தவர்கள் மிகச் சொற்பம். சாதாரண பின்புலத்தில் இருந்து கிளம்பி இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர்கள் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, ஹெச்.சி.எல் சிவ நாடார் போன்றோர். இவர்களின் கனவு இவர்களை உறங்கவிடவில்லை. ஒரே பாடல்; ஓஹோ என்ற வாழ்க்கை என்பதெல்லாம் நிழல் மட்டுமே. உண்ணாத பகல்களும், உறங்காத இரவுகளுமே தொழில் முனைவோரின் நிஜம்.

இன்றைய தலைமுறையினர் பலரும் இதைப் புரிந்து கொண்டுள்ளார்கள். வேலை செய்து சம்பாதித்ததை சேமித்து, தொழில் முயற்சிகளில் ஈடுபடும் பல சாஃப்ட்வேர் இன்ஜினீயர்களைப் பார்க்க முடிகிறது. வருமானம் என்பது பர்சனல் ஃபைனான்ஸின் அடிநாதமாக இழையோடுவதால் அதீத முக்கியத்துவம் பெறுகிறது. திங்கள்கிழமை இன்னொரு வகையான வருமானத்தைப் பார்ப்போம்.

பர்சனல் ஃபைனான்ஸ் கலையை உங்களுக்கு சொல்லித்தரும் புதிய தொடர். திங்கள், புதன், வெள்ளிதோறும் காலை 9 மணிக்கு. உங்கள் விகடன்.காமில்..!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism