Published:Updated:

Inflation: அமெரிக்காவில் 40 ஆண்டுகள் இல்லாத அளவு உயர்ந்த பணவீக்கம்; நம்மையும் பாதிக்குமா?

Money (Representational Image)
News
Money (Representational Image)

உலகின் மிகப் பெரிய வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்காவில் 1982-ம் ஆண்டுக்குப் பின் முதல்முறையாக இந்த அளவுக்கு பணவீக்கம் அதிகரிக்க என்ன காரணம்? அமெரிக்காவின் பணவீக்கம் உயர்ந்திருப்பது இந்தியாவை எப்படிப் பாதிக்கும்?

உலக நாடுகள் பெரும் போராட்டத்துக்குப் பின்பு, கொரோனா தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்திய நிலையில், தற்போது பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கான திட்டத்தை வகுக்கவும், முக்கியமான கொள்கை மாற்றங்களைச் செய்யவும் தீவிரமாக செயலாற்றி வருகின்றன. இதற்கு முக்கியமான காரணம், பணவீக்கம்.

கடந்த நவம்பர் மாத‌த்தில் அமெரிக்காவின் சில்லறை விலை பணவீக்கம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.8 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இது 1982-ம் அண்டுக்குப் பின் பதிவான பணவீக்க விகிதங்களில் மிக அதிக அளவாகக் கருதப்படுகிறது.

கொரோனா காலத்தில் அமெரிக்காவில் பொருள்களின் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டும்வரும் நிலையில், பொருள்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. ஆனால், உற்பத்தியில் ஏற்பட்ட தொய்வு காரணமாக விநியோகச் சங்கிலியில் மந்தநிலை ஏற்பட்டதால் விலை அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Inflation (Representational Image)
Inflation (Representational Image)

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நவம்பர் மாதத்தைப் போலவே, கடந்த அக்டோபர் மாதத்திலும் அமெரிக்கா பணவீக்கம் 6.2% என்ற உச்சத்தைத் தொட்டது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் பணவீக்க விகிதம் அதிகரித்து வரும் இதே வேளையில், பல பொருளாதார வல்லுநர்கள் அமெரிக்காவின் சில்லறை பணவீக்கம் 7% வரையில் உயரும் எனக் கணித்துள்ளனர். நவம்பர் மாதம் அமெரிக்காவில் உணவு மற்றும் எரிபொருள் பணவீக்கம் 0.5% வரையில் அதிகரித்துள்ளது. இது தொடர்ந்து உயர்ந்தால், அமெரிக்கப் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்தியாவில் இது 4.48 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ``இந்த அதீத பணவீக்கத்தால் இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது நகர்ப்புற ஏழை மக்கள்தான். நடப்பு நிதியாண்டில் அதிகரித்துள்ள பணவீக்கத்தால் நகர்ப்புற ஏழை மக்கள் 7% வரையில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதேபோல், நகர்ப்புற பணக்காரர்கள் 6.4% என்கிற அளவில் பாதிக்கப் பட்டுள்ளனர். கிராமப்புறத்தில் இருக்கும் அனைத்துப் பிரிவு மக்களும் 5.9% என்கிற அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்" என இந்திய அரசு அமைப்பான என்.எஸ்.எஸ்.ஓ (National Sample Survey Office (NSSO) வெளியிட்ட தரவுகள் சொல்கின்றன.

நாகப்பன்
நாகப்பன்
பொருளாதார நிபுணர்

உலகின் மிகப் பெரிய வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்காவில் 1982-ம் ஆண்டுக்குப் பின் முதல்முறையாக இந்த அளவுக்கு பணவீக்கம் அதிகரிக்க என்ன காரணம், அமெரிக்காவின் பணவீக்கம் உயர்ந்திருப்பது இந்தியாவை எப்படிப் பாதிக்கும் எனப் பொருளாதார நிபுணர் வ.நாகப்பனிடம் கேட்டோம்.

பணவீக்க உயர்வுக்கான காரணங்கள்

``கடந்த 2020-ம் ஆண்டில் கொரோனா நோய்த் தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா இருந்தது. இந்தியாவைப் போலவே, அங்கும் அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளும் முடங்கின. உற்பத்தி, தேவை என அனைத்தும் ஒன்றுமில்லாமல் இருந்தது. ஆனால், கொரோனா மீட்சிக்குப் பிறகு, தேவைக்கு இணையான உற்பத்தியை அமெரிக்கா கொண்டிருக்கவில்லை. இதனால் தேவை அதிகரித்து, உற்பத்தி மற்றும் விநியோகத்தில் குறைவு காணப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதுமட்டுமன்றி, அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிக்க மிக முக்கியமான காரணம், எரிபொருள் விலையில் ஏற்பட்ட உயர்வு. மேலும், அதிகப்படியான ரியல் எஸ்டேட் விலையும் தற்போது நுகர்வோர் பணவீக்க உயர்வுக்கு முக்கியமான காரணமாக உள்ளது. இந்த நிலையில், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் தனது வட்டி விகிதத்தை உயர்த்தி நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

பணவீக்கம் என்பது...

Money (Representational Image)
Money (Representational Image)

மக்களின் வாங்கும் சக்தி குறைவதையே பணவீக்கம் என்கிறோம். வாங்கும் சக்தி எப்போது குறையும் என்று பார்த்தால், இரண்டு விதங்களில் நடக்கும். உதாரணமாக, ஒரு பொருள் தேவைக்கும் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டால், அந்தப் பொருளின் மதிப்பு குறையும். அதேபோல, அதிக அளவில் பணத்தை அச்சிட்டு வெளியிட்டால் பணவீக்கம் ஏற்படும்.

இதற்கு உதாரணமாக வெனிசுலா நாட்டை எடுத்துக் கொள்ளலாம். வெனிசுலா நாட்டு அரசு அதிக அளவில் பணத்தை அச்சடித்து வெளியிட்டது. அதன் காரணமாக வெனிசுலா பணத்தின் மதிப்பு குறைந்து அதிகப்படியான பணவீக்கத்துக்கு வித்திட்டது. இதன் காரணமாக வெனிசுலாவின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றது.

இரண்டாவது, நமது தேவைக்கும் குறைவாக ஒரு பொருள் உற்பத்தி செய்யப்பட்டால், அப்போதும் பணவீக்கம் ஏற்படும். பணம் என்பது நமது தேவைகளை நாம் நிறைவேற்றிக்கொள்ள நாம் பயன்படுத்தக்கூடிய ஒரு சாதனம். நம்முடைய தேவை இருக்கும் அளவுக்கு உற்பத்தி இல்லை எனில், நமது தேவையைப் பூர்த்தி செய்ய அதிகப்படியான பணத்தைக் கொடுத்து அந்தப் பொருளை வாங்க முயல்வோம். அதனால் ஒரு பொருளின் விலை உயர்ந்து பணத்தின் மதிப்பு குறைகிறது. இதனாலும் பணவீக்கம் ஏற்படுகிறது. அமெரிக்காவில் இப்போது இதுதான் நடந்திருக்கிறது.

வட்டி விகிதம் அதிகரிக்கும்!

அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால், அதைக் கட்டுப்படுத்த வட்டி விகிதம் அதிகரிக்கப்படும். மத்திய வங்கிகள் வட்டி குறைக்கும்போது பொருளாதார வளர்ச்சிக்கும் வர்த்தகத்துக்கும் ஏதுவான சூழ்நிலை உருவாகிற மாதிரி, வட்டி விகிதத்தை உயர்த்தும்போதும் பணம் புழங்குவது குறையும். இதனால் விலைவாசியானது தானாகவே கட்டுக்குள் வந்துவிடும்.

அமெரிக்காவில் பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவர, அமெரிக்க ஃபெட் அங்கு வட்டி விகிதத்தை உயர்த்தினால், இந்திய பங்குச் சந்தை, கடன் சந்தை, பத்திரங்கள் என அனைத்திலும் அதன் தாக்கம் இருக்கும். மேலும், ரூபாய் மதிப்பில் அதிக அளவிலான சரிவை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

Joe Biden
Joe Biden
Susan Walsh / AP Photo

கச்சா எண்ணெய் உள்ளிட்ட பல பொருள்களை நம் நாடு அதிக அளவில் இறக்குமதி செய்கிறது. ரூபாய் மதிப்பு சரியும்போது, அதிக விலை தந்து நாம் இந்தப் பொருள்களை வாங்க வேண்டி இருக்கும். இதனால், இறக்குமதிக்கான செலவுகள் அதிகரிக்கும். உலக அளவில் இப்படி விலைகள் அதிகரிக்கும்போது, அது அதிகமான இறக்குமதிப் பண வீக்கத்துக்கு வழிவகுக்கும். இதனால் இந்தியா மற்றும் இந்தியர்கள் இறக்குமதி செய்யும் அனைத்துப் பொருள்களின் விலை உயரும். இது இந்தியப் பொருளாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும்” என்றார் தெளிவாக.

இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் மொத்த விலை பணவீக்கம்!

மொத்த விற்பனை விலை அடிப்படையில் கணக்கிடப்படும் பொதுப் பணவீக்க விகிதம் (Wholesale Price Index (WPI)) நம் நாட்டில் கடந்த நவம்பர் மாதம் 16 ஆண்டுகளில் இல்லாத அளவாக, 14.23% ஆக உயர்ந்திருக்கிறது.