Published:Updated:

பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல `பொருளாதார சுதந்திரம்'... பெண்கள் கவனத்துக்கு!

பெண் - ஆண்
பெண் - ஆண்

பொருளாதார சுதந்திரம் என்பது பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல. சுயமரியாதை, தன்னம்பிக்கை, அதிகாரமளித்தல், வளர்ச்சி அனைத்தும் அடங்கியது.

பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் இருக்க வேண்டியதன் அவசியத்தை விளக்குகிறார் முதலீட்டு ஆலோசகர் ரேணு மகேஸ்வரி.

``ஒரு பெண் தனக்கென்று ஒரு பர்ஸை கையில் வைத்திருக்காதவரை யாரையாவது சார்ந்தே ஆக வேண்டும் - அமெரிக்காவில் பெண்களுக்கு ஓட்டுரிமை பெற்றுத்தந்த போராளி எலிசபெத் கேடி ஸ்டேன்டனின் வார்த்தைகள் இவை.

பெண்ணுக்குப் பொருளாதாரத்தில் சுதந்திரம் இல்லாதவரை பாலின சமத்துவம் சாத்தியமே இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு பொருளாதார விவகாரங்களில் பெண்கள் குறித்து நாங்கள் நடத்திய ஓர் ஆய்வில் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் குடும்பத்தில் பொருளாதார விவகாரங்களைப் பற்றிப் பேசுவதில் தன்னம்பிக்கை இல்லாதவர்களாக இருந்தனர். பணத்தைப் பற்றிப் பேசுவதற்கு குடும்பத்தினரின், சமூகத்தின் ஒப்புதல் தேவைப்படுகிறது என்பது இளம்பெண்களின் கருத்தாக இருந்தது.

பணம்
பணம்
representational image

பெற்றோரின் வளர்ப்பு முறையில் ஏற்படும் தாக்கம் இதில் வெளிப்படுகிறது. பெண் குழந்தைகளை வீட்டு வேலைகளைச் செய்யப் பழக்கினார்கள். ஆண் குழந்தைகள் பொருளாதாரம் பற்றிப் பேசுவதை உற்சாகப்படுத்தினர். குடும்பத்தின் பொருளாதார நிர்வாகத்திலும் ஆண்கள் பொறுப்பேற்பதையே விரும்புகிறோம். பல தலைமுறைகளாக இந்த நிலை தொடர்ந்ததால் பெண்களுக்கு பொருளாதார நிர்வாகத்தில் சம்பந்தமில்லை என்ற மனத்தடை இருக்கிறது.

பொருளாதார சுதந்திரம் என்பது பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல. சுயமரியாதை, தன்னம்பிக்கை, அதிகாரமளித்தல், வளர்ச்சி அனைத்தும் அடங்கியது. பொருளாதார சுதந்திரம் இல்லாத பெண்ணின் வாழ்க்கை கடினமானதுதான்" என்கிறார்.

அன்பின் பிணைப்பால் அப்பாவையோ, கணவரையோ, மகனையோ சார்ந்திருப்பது தவறல்ல. எந்தச் சூழலிலும் சுதந்திரமாகச் செயல்படக்கூடிய தன்னம்பிக்கையும் பெண்களுக்கு அவசியம்.

- எல்லோர் மனத்திலும் இடம்பிடித்த சின்னத்திரை பிரபலம் ஒருவர் திடீர் உடல்நலக் குறைவால் இளவயதில் அண்மையில் தவறிவிட்டார். இரண்டு குழந்தைகள், மனைவி எனச் சிறிய குடும்பம். அவருடன் பணியாற்றிய பிரபலங்கள் தங்கள் துயரத்தைப் பகிர்ந்துகொண்டபோது பலரும் குறிப்பிட்ட ஒரு விஷயம்... ``அவர் மனைவிக்கு வெளி உலகமே தெரியாது. அவரும் குழந்தைகளும்தான் அவங்களுக்கு உலகம். வீட்டை நிர்வகிச்சது எல்லாம் அவர்தான். இப்போ அவர் மனைவியை நினைச்சா பாவமா இருக்கு."

குடும்பத் தலைவிகளில் மட்டுமல்ல, ஆணுக்கு நிகராக... ஏன் ஆணைவிட அதிகமாகவே படித்து கை நிறைய சம்பாதிக்கும் பெண்களிடமும் இந்த நிலை நீடிக்கிறது. `என் வீட்டுக்காரர் இல்லாம ஒரு கைக்குட்டைகூட வாங்கப்போனது இல்ல', `கணக்கு வழக்கெல்லாம் எனக்குச் சரிப்பட்டு வராது... எல்லாம் அவருதான்' எனப் பெருமையாகப் பேசும் பல பெண்களைப் பார்த்திருப்போம்.

பெண்
பெண்

இந்தப் போக்கு ஏற்படுத்தும் பாதக விளைவுகள் மட்டுமின்றி, சார்ந்திருப்பதில் உள்ள தவறு, குழந்தை வளர்ப்பிலேயே செய்ய வேண்டிய மாற்றம், அனுபவ ரீதியிலான வழிகாட்டுதல்கள் ஆகியவற்றுடன், பொருளாதார சுதந்திரத்துக்கு பெண்கள் கவனத்தில்கொள்ள வேண்டிய 8 ஆலோசனைகளை முழுமையாக அவள் விகடன் இதழில் அறிய > `கணக்கு வழக்கெல்லாம் எனக்குச் சரிபட்டு வராது... எல்லாம் அவருதான்!' - இது, பெருமையல்ல... சிறுமை https://bit.ly/2EWa9MN

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு