Published:Updated:

பட்ஜெட் 2022: `நடுத்தர மக்கள் தங்கம் வாங்க புதிய முறை!' - அறிவிப்பை வெளியிடுமா அரசு?

தங்கம்

வங்கிகளின் வட்டி விகிதக் குறைப்புகளும், பங்குச் சந்தையின் சமீபத்திய பிரபலமும் இளம் தலைமுறையை வங்கிகளிடமிருந்து தூரப்படுத்தியுள்ளன. ஆகவே, வங்கித்துறை தலைவர்களும் நிபுணர்களும் கோல்ட் சேவிங்ஸ் அக்கவுன்ட் திட்டத்தை முன்வைக்கின்றனர்.

பட்ஜெட் 2022: `நடுத்தர மக்கள் தங்கம் வாங்க புதிய முறை!' - அறிவிப்பை வெளியிடுமா அரசு?

வங்கிகளின் வட்டி விகிதக் குறைப்புகளும், பங்குச் சந்தையின் சமீபத்திய பிரபலமும் இளம் தலைமுறையை வங்கிகளிடமிருந்து தூரப்படுத்தியுள்ளன. ஆகவே, வங்கித்துறை தலைவர்களும் நிபுணர்களும் கோல்ட் சேவிங்ஸ் அக்கவுன்ட் திட்டத்தை முன்வைக்கின்றனர்.

Published:Updated:
தங்கம்

வரும் பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் கூட்டம் நிகழவிருக்கிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கும் மூன்றாவது பட்ஜெட் இது. கொரோனாவின் கோரத் தாண்டவம் மக்களின் உடல் நலத்தையும், பொருளாதாரத்தையும் ஒருங்கே நசுக்கிய பின் வரும் முதல் பட்ஜெட் என்பதால், மத்தியதர மக்களின் எதிர்பார்ப்பு வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. நிறுவனங்களும் துறைகளும்கூட பல எதிர்பார்ப்புகளை முன்வைக்கின்றன. குறிப்பாக, வங்கித் துறை கோல்ட் சேவிங்ஸ் சார்ந்த ஒரு புதுமையைப் புகுத்த விரும்புகிறது.

Gold
Gold
Image by 8180766 from Pixabay

துறைகளின் எதிர்பார்ப்புகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

1. உள்கட்டமைப்பு வேலைகள் அதிகரித்தால், வேலை வாய்ப்பு அதிகரிக்கும்; போக்குவரத்து போன்றவை மேம்படும் என்பதால், அந்தத் துறைக்கு அரசாங்கம் அதிகப் பணம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

2. ஹோட்டல் துறை மற்றும் விமானச் சேவைத் துறை கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு மிகப் பெரிய இழப்புகளை சந்தித்து வருவதால், அவற்றுக்கு வரி விலக்குகள் மூலம் உயிரூட்ட வேண்டும்.

3. எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி, சார்ஜிங் மற்றும் உபயோகத்தை ஊக்குவிக்க அது சார்ந்த நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகள் வழங்கப்பட வேண்டும். எலெக்ட்ரிக் வாகனக் கடன்களுக்கு வட்டி விகிதம் குறைக்கப்படவேண்டும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

4. ஹெல்த் இன்ஷூரன்ஸ் வாங்கும்படி மக்களை ஊக்குவிக்க அதன் ஜி.எஸ்.டி வரியை 5 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும்.

5. இந்தியாவில் பிளாக்செயின் டெக்னாலஜி, கிரிப்டோகரன்சி போன்ற புதிய முறைகளின் எதிர்காலம் என்ன என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

6. கொரோனா காலத்தில் பணக்காரர்களுக்கு மேலும் பணம் பெருகியது; ஏழைகள் அவதி இன்னும் அதிகரித்தது. இதைச் சமன் செய்ய முன்பு போல் செல்வ வரி மற்றும் வாரிசுரிமையாகப் பெற்ற பணத்துக்கு (Wealth & Inheritance Tax) வரி விதிக்கப்பட வேண்டும்.

7. வொர்க் ஃப்ரம் ஹோம் நடைமுறை இன்னும் தொடரும் என்பதால், அது தொடர்பான வசதிகளுக்காக மக்கள் செய்யும் செலவுகளுக்கு வரிக்குறைப்பு செய்ய வேண்டும்.

Gold (Representational Image)
Gold (Representational Image)
Photo by vaibhav nagare on Unsplash

வங்கித் துறையின் எதிர்பார்ப்பு – கோல்ட் சேவிங்ஸ் திட்டம்

மியூச்சுவல் ஃபண்ட் வருகைக்குப் பின் வங்கிகளின் டெபாசிட்டுகள் குறைய ஆரம்பித்துள்ளன. வங்கிகளின் ஐந்து வருட கால டாக்ஸ் சேவிங் ஃபிக்ஸட் டெபாசிட்டுகளும், இ.எல்.எஸ்.எஸ்.ஸுடன் போட்டி போட இயலவில்லை. வங்கிகளின் வட்டி விகிதக் குறைப்புகளும், பங்குச் சந்தையின் சமீபத்திய பிரபலமும் இளம் தலைமுறையை வங்கிகளிடமிருந்து தூரப்படுத்தியுள்ளன. ஆகவே, வங்கித்துறை தலைவர்களும் நிபுணர்களும் கோல்ட் சேவிங்ஸ் அக்கவுன்ட் திட்டத்தை முன்வைக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏன் தங்கம்?

தங்கத்தின் மீது மனிதனுக்கு இருக்கும் மோகம் 40,000 வருடப் பழசு என்று குகை ஓவியங்கள் நிரூபித்துள்ளன. அதிலும் இந்தியர்களின் தங்க தாகம் உலகம் அறிந்தது. இவ்வுலகில் உள்ள தங்கத்தில் இருபது சதவிகிதம் (சுமார் 25000 டன்) இந்தியாவின் வீடுகளிலும், கோயில்களிலும் தூங்குகிறது. இது அமெரிக்காவில் உள்ளதைப் போல் இரண்டு மடங்கு. ஆனாலும், நம் தங்க தாகம் தீராததால் வருடா வருடம் 700 டன் முதல் 900 டன் வரை தங்கம் இறக்குமதி செய்கிறோம். இது நம் பொருளாதாரத்தையும், ரூபாயின் வலிமையையும் பதம் பார்க்கிறது. இதைச் சரிசெய்ய நமது அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த பின்னும் 2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை உள்ள காலகட்டத்தில் 38 பில்லியன் டாலர் அளவுக்கு தங்க இறக்குமதி நடந்துள்ளது.

Gold
Gold
Photo by vaibhav nagare on Unsplash

அரசாங்கம் முன்வைத்த தீர்வு

இப்படி நாட்டின் பொருளாதாரத்தை அசைத்துப் பார்க்கும் நமது தங்க தாகத்துக்கு ஒரு தீர்வாக அரசாங்கம் அறிமுகப்படுத்திய விஷயம்தான் பேப்பர் தங்கம்! கோல்ட் இடிஎஃப், கோல்ட் மியூச்சுவல் ஃபண்ட், சாவரின் கோல்ட் பாண்ட் இவையெல்லாம் பேப்பர் தங்கத்தின் வெவ்வேறு வடிவங்கள். இவற்றின் முக்கிய அம்சம் – தரம் மற்றும் விலையில் வெளிப்படைத்தன்மை மற்றும் லாக்கர் வாடகை, செய்கூலி, சேதாரம் போன்ற அதிகப்படி செலவுகள் இல்லாமை.

பேப்பர் தங்கத்தில் சாவரின் கோல்ட் பாண்ட் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. அவசரமாகத் தங்கம் தேவைப்படாதவர்கள் தங்கள் முதலீட்டை இதில் செய்யும்பட்சத்தில், அரசு வருடத்துக்கு 2.50% வட்டி தருவதோடு, எட்டு வருட இறுதியில் அன்றைய தங்க மதிப்பையும் தருகிறது. இன்று இது தங்க முதலீட்டுத் திட்டங்களில் முன்னணி வகிக்கிறது.

சாவரின் கோல்ட் பாண்டின் குறைகள்

இதை அரசாங்கம் வெளியிடும்போது மட்டுமே வாங்க முடியும் என்பது கீழ் மற்றும் மத்திய தர மக்களுக்கு சிரமமான விஷயம். அந்த நேரத்தில் கையில் பணம் இருக்க வேண்டும்; தங்கம் விலை சாதகமாக இருக்க வேண்டும் என்பன போன்ற பல கவலைகள் அவர்களுக்கு உண்டு. தங்கம் வாங்குவதில் விவசாயிகளின் பங்கும் அதிகம். விதை வாங்க, உரம் போட என்று பணம் தேவைப்படும் நேரங்களில் தங்களிடம் உள்ள தங்கத்தை அடகு வைத்துப் பணம் பெற்று, அறுவடை முடிந்து கையில் பணம் வந்தபின் கடனை அடைப்பது கிராமப்புறத்தில் சகஜம். ஆகவே, தங்கம் வாங்குவதில் அவர்களும் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், கிராமப்புற மக்களுக்கு அரசாங்கத்தின் சாவரின் கோல்ட் பாண்டுகள் சற்று எட்டாக் கனியாகவே உள்ளன.

Gold (Representational Image)
Gold (Representational Image)

வங்கிகள் தர விரும்பும் கோல்ட் சேவிங்ஸ் திட்டம்

மேற்கண்ட குறைகளைக் களையும் அதே நேரத்தில் வங்கிகளையும் பலப்படுத்த விரும்பும் நிபுணர்கள் கோல்ட் சேவிங்ஸ் திட்டத்தை முன்மொழிகின்றனர். அந்தத் திட்டத்தின் முதல்கட்ட அம்சங்கள்:

1. இந்த அக்கவுன்ட்டில் வருடம் முழுக்க என்றைக்கு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.

2. மினிமம் முதலீடு ஒரு கிராம் தங்கத்தின் அன்றைய விலை. முதலீட்டை கிராம் கணக்கில் உயர்த்தலாம்.

3. எப்போது வேண்டுமானாலும் அன்றைய தங்கத்தின் விலைக்கு முதலீட்டை திரும்பப் பெறலாம்.

4. சாவரின் கோல்ட் பாண்ட் போல சிறிய அளவு வட்டியும் தரப்படலாம்.

இதை இன்னும் சற்று ஆழமாகச் சிந்தித்து விரிவாகச் செயல்படுத்தினால், இந்தியா முழுவதும் உள்ள மக்கள் வங்கிகளிலேயே தங்கத்தைச் சேமிக்க முடியும். இதனால் மக்களுக்கும் வசதி; வங்கிகளுக்கும் லாபம்; அரசாங்கத்தின் தங்க இறக்குமதி கட்டுப்பாடு நோக்கமும் நிறைவேறும்.

தற்போது இந்தத் தங்க அக்கவுன்டின் சாவி, நிதியமைச்சர் கையில் உள்ளது. அவர் ``திறந்திடு சீசேம்” என்று கூறப்போகிறாரா என்பது பட்ஜெட் அன்று தெரியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism