Published:Updated:

wipro: நிகரலாபம் ரூ.2,390 கோடி; பிரேசிலில் முதலீடு! - அசத்தும் விப்ரோ

விப்ரோ
விப்ரோ

கொரோனா காரணமாகப் பல்வேறு நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்து வரும் சூழலில் விப்ரோ நிறுவனம், அதைச் செய்யப்போவதில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.

காலாண்டு அறிக்கை:

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ நேற்று (14.7.2020) தனது ஜூன் மாத காலாண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தக் காலகட்டத்தில் ஒருங்கிணைந்த நிகரலாபம் என்பது 2,390 கோடி ரூபாயாக உள்ளது. இதுவே, கடந்த ஆண்டு இதே காலாண்டில் 2,388 கோடி ரூபாயாக இருந்தது. நிறுவனத்தின் ஜூன் காலாண்டில் ஒருங்கிணைந்த லாபம் 2.8 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

விப்ரோ
விப்ரோ

விப்ரோவின் தகவல் தொழில்நுட்ப சேவைகளின் வருவாய் இந்த ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் 14,596 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 14,351 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. விப்ரோ நிறுவனத்தின் மொத்த வருவாயில் (15,571 கோடி ரூபாய்) பெரிய அளவில் மாற்றங்கள் இல்லை.

கொரோனா பாதிப்பு உள்ளிட்ட பல சிக்கல்களை சந்தித்த இந்த காலகட்டத்திலும் விப்ரோ நிறுவனம் புதிதாக கஸ்டமர்களை ஈர்த்திருக்கிறது. இந்தக் காலாண்டில் மட்டும் 42 புதிய கஸ்டமர்களை விப்ரோ பெற்றிருக்கிறது. கொரோனா பரவல் காரணமாகத் தகவல் தொழில்நுட்பத்தின் தேவை வரும் காலத்தில் குறையலாம் என விப்ரோ தெரிவித்துள்ளது.

`கொரோனா கால்சென்டர்; இறுதிச் சடங்குக்கு ரூ.15,000' - ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு

உலகின் பல முன்னணி நிறுவனங்கள் தங்களின் செலவுகளைக் கடுமையாகக் கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளதால், அது தகவல் தொழில்நுட்ப துறையையும் பாதிக்கும் என விப்ரோ கருதுகிறது. வரும் காலங்களில் இதனால் தங்கள் நிறுவனமும் அதன் எதிர்வினைகளைச் சந்திக்கக் கூடும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், பிரேசில் நாட்டைச் சேர்ந்த IVIA Servicos de Informatica Ltd என்னும் நிறுவனத்தில் முதலீடு செய்து அந்நிறுவனத்தை முழுமையாகப் பெறவிருக்கிறது விப்ரோ.

விப்ரோ
விப்ரோ

கொரோனா காரணமாகப் பல்வேறு நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்து வரும் சூழலில் விப்ரோ நிறுவனம், அதைச் செய்யப்போவதில்லை என்று தெளிவு படுத்தியுள்ளது. அந்நிறுவன தலைவர் நிஸாத் பிரேம்ஜி, இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இதுவரை பணிநீக்க நடவடிக்கைகள் இல்லை என்றும், இனியும் அதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு