Published:Updated:

உலகப் பொருளாதாரத் தேக்கநிலை... இந்தியாவையும் பாதிக்குமா?

உலகப் பொருளாதாரம்
பிரீமியம் ஸ்டோரி
உலகப் பொருளாதாரம்

உலகப் பொருளாதாரம்

உலகப் பொருளாதாரத் தேக்கநிலை... இந்தியாவையும் பாதிக்குமா?

உலகப் பொருளாதாரம்

Published:Updated:
உலகப் பொருளாதாரம்
பிரீமியம் ஸ்டோரி
உலகப் பொருளாதாரம்

சுதாகரன் பேரம்பலம்

கொரோனா, அதன் பின்னர் உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு, அதனால் ஏற்பட்ட எண்ணெய் விலை ஏற்றம் மூலப்பொருள்களின் விலை அதிகரிப்பு எனப் பல சம்ப வங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாகவே தொடர்ந்து உலகை அச்சுறுத்துவதாகவே இருக்கிறது.

இதன் காரணமாக இலங்கை போன்ற நாடுகளின் பொருளாதாரமே ஆட்டம் கண்டு திவாலாகியிருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் சில லத்தீன் அமெரிக்க நாடு களில் நிலைமை மோசமாகி வருகிறது. உலகம் பொருளா தாரத் தேக்க நிலைக்குள் (Stagflation) போய்க்கொண்டு இருப்பதே பலதரப்பினரையும் கவலை கொள்ள வைக்கும் செய்தி.

2022-ன் பிற்பகுதி தொடங்கி நீண்ட காலத் துக்குப் பொருளாதாரத் தேக்கநிலை இருக்கலாம் என்று உலக வங்கி, உலகப் பொருளாதார அமைப்பு போன்றவற்றின் பொருளா தார நிபுணர்கள் தெரிவிக் கிறார்கள்.

பொருளாதார வீழ்ச்சி குறுகிய காலமே இருக்கும். ஆனால், பொருளாதாரத் தேக்கநிலை மூன்று வருடங் களோ, ஐந்து வருடங்களோ நீண்ட காலத்துக்கு நிலவக் கூடியது. 1970-ம் ஆண்டுவந்த தேக்கநிலை பத்து வருடங்கள் நீடித்தது. பொருளாதார தேக்கநிலை என்றால் என்ன என்று பார்ப்போம்.

உலகப் பொருளாதாரத் தேக்கநிலை... இந்தியாவையும் 
பாதிக்குமா?

Stagnation + Inflation என்ற சொற்கள் இணைந்து உருவா னதுதான் stagflation. Stagnation என்பது ஒரு நாட்டின் பொருளாதாரம் அப்படியே மந்தநிலையில் தேக்கமடைந்து நிற்பதைக் குறிக்கும். பொருளாதார வளர்ச்சி விகிதம் நீண்ட காலத்துக்கு மிகக் குறைவாக (1% அல்லது 2% என) இருக்கும். மக்கள், வேலை இழப்பார்கள்; பொருள்கள், சேவை களுக்கான தேவை குறையும். பணவீக்கம் (Inflation) என்பது எல்லா நாடுகளிலும் அதிகரித்து வருகிறது. சராசரி யாக 2.9 சதவிகிதமான இருந்த உலகின் பணவீக்கம், இந்த வருட இறுதிக்குள் 6.7 சதவிகித மாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்கம் என்பது இரு முக்கியமான காரணங்களால் வரலாம். ஒன்று, பொருள் களுக்கான தேவை அதிகரிப்பால் வரும்; இன்னொன்று, எரிபொருள் விலையேற்றம், மூலப்பொருள்களின் விலை அதிகரிப்பால் உற்பத்திச் செலவுகள் அதிகரித்து, பொருள்களின் விலை உயர்வதால் வரும். பொருளா தாரத் தேக்கநிலையும் பணவீக்கமும் ஒரே நேரத்தில் வருவது மிக அரிதான வாய்ப்பு. இதற்கு முன்பு 1971-1982 காலகட்டத்தில் இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் அப்படி நடந்திருக்கிறது. அந்தக் காலத்தில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் (OPEC) கச்சா எண்ணெயின் விலையை ஒரேயடியாக உயர்த்தியதால், உலகப் பொருளாதாரமே தேக்கநிலை அடைந்தது.

உலகப் பொருளாதாரத் தேக்கநிலை... இந்தியாவையும் 
பாதிக்குமா?

பொருளாதாரத் தேக்கநிலை என்பது வணிகங் களுக்கு குறிப்பாக, சிறு வணிகங்களுக்கு நெருக்கடியை உருவாக்குகிறது. மூலப்பொருள்களின் விலை அதிகரிக்கும்போது, ​​நிறுவனங்கள் பொருள்களின் விலையை உயர்த்தவேண்டிய கட்டாயமும் போட்டியும் ஏற்படும். பொருளாதாரத் தேக்கநிலையின் போது, மக்கள் வேலையின்றி இருப்பார்கள். அவர்களின் ஊதியம் அதிகரிப்பு குறைவாகவே இருக்கும். அதனால் வாடிக்கையாளர்களால் அதிக விலை தந்து பொருள்களை வாங்க முடியாது. அப்போது ஊதியத்தை உயர்த்தப் பணியாளர்கள் போராடுவார்கள். இதனால் நிறுவனங்களின் செலவு அதிகரித்து, மீண்டும் பொருளின் விலையை உயர்த்தும் கட்டாயம் ஏற்படும். இது ஒரு சுழற்சியாக மீண்டும் மீண்டும் நடந்து எல்லோருக்கும் கெடுதல் ஏற்படும்.

உலகின் பல நாடுகளில் பொருளாதாரத் தேக்க நிலையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டாலும், இந்தியாவில் அந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது முக்கியமான கேள்விதான். அண்மையில் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதத்துக்குமேல் இருக்கும் என்று சொல்லியிருக்கிறார். உலகப் பொருளாதாரத் தேக்க நிலையால் இந்தியாவின் வளர்ச்சி கொஞ்சம் குறையுமே தவிர, வளர்ச்சியானது தடைபட்டு நின்றுவிட வாய்ப்பில்லை.

இந்தத் தேக்கநிலையை மனதில்கொண்டு, தொழிலைத் திட்டமிட்டால், இனி வரப்போகும் கடினமான சூழ்நிலையைக் கஷ்டம் இல்லாமல் கடந்து வர முடியும்!