Published:Updated:

`கொரோனா வைரஸால் உலகப் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும்!'- எச்சரிக்கும் ஐ.எம்.எஃப்

உலகப் பொருளாதார வளர்ச்சி
உலகப் பொருளாதார வளர்ச்சி

சீனாவின் கொரோனா வைரஸ் பாதிப்பு, உலக சுகாதாரத்துக்கு மட்டுமல்ல, உலகப் பொருளாதாரத்துக்கும் மாபெரும் பங்கத்தை விளைவித்திருக்கிறது.

உலகின் மிகப்பெரிய இரு பொருளாதார நாடுகள் சீனா மற்றும் அமெரிக்கா. இவ்விரு நாடுகளுக்கு இடையே மாபெரும் வர்த்தகப் போர் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதனால் மற்ற உலகநாடுகள் பலவும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. மிக முக்கியமாக, இந்தியா பொருளாதார அளவில் பாதிப்பைச் சந்தித்திருக்கிறது. இந்த நிலையில், சீனாவின் கொரோனா வைரஸ் பாதிப்பு, உலக சுகாதாரத்துக்கு மட்டுமல்ல, உலகப் பொருளாதாரத்துக்கும் மாபெரும் பங்கத்தை விளைவித்திருக்கிறது.

`2020-ல் உள்நாட்டு உற்பத்தி 6.7-லிருந்து 5.8 சதவிகிதமாகக்  குறையும்' - மூடிஸ் கணிப்பு!

இந்த நிலையில், `இந்த வைரஸ் பாதிப்பு, நடப்பு 2020-ம் ஆண்டில் உலகத்தின் பொருளாதார வளர்ச்சியை, மிகவும் பாதிக்கும்" என்று இன்டர்நேஷனல் மானிட்டரி ஃபண்ட் (IMF) நிறுவனத்தின் தலைவர் 'Kristalina Georgievia' தெரிவித்துள்ளார்.

இதுவரை சீனா மற்றும் ஒருசில நாடுகளிலும் சேர்த்து, கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,874 பேர். மொத்தம் 73,336 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சீனாவுடன் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் மேற்கொள்வதற்கு மற்ற உலக நாடுகள் பயந்துபோயிருக்கின்றன. குறிப்பாக சீனா-இந்தியாவுக்கு இடையேயான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது.

Kristalina Georgievia
Kristalina Georgievia

துபாயில் நடைபெற்ற உலகப் பெண்களுக்கான மாநாட்டில் பேசிய ஐ.எம்.எஃப் தலைவர், ``கொரோனா வைரஸ் சீனாவில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வைரஸைப் பற்றி முழுமையாக அறிய முடியவில்லை. அதை, சீனா எவ்வாறு கையாளப் போகிறது. மற்ற நாடுகளுக்கு அது பரவுமா என்ற பல கேள்விகள் உள்ளதால், இந்த நோய் தாக்கத்தால் ஏற்படப்போகும் பொருளாதார இழப்பு பற்றி முழுமையாகக் கணிக்க முடியாது என்றாலும் அதனால் பாதிப்பு அபரிமிதமாக இருக்கும் என்று கூற முடியும்.

அதற்குச் சாட்சியாக தற்போது, சுற்றுலா மற்றும் போக்குவரத்துத் துறைகள் வெகுவாகப் பாதிப்படைந்துள்ளன. தற்போதைய நிலவரப்படி 0.1% முதல் 3.3% வரை உலகப் பொருளாதார வளர்ச்சி குறையலாம் என்று IMF எதிர்பார்க்கிறது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு