Published:Updated:

`இதில் முதலீடு செய்தால் ஆபத்து!' இந்திய முதலீட்டாளர்களுக்கு ஜீரோதா நிதின் காமத் எச்சரிக்கை

கிரிப்டோகரன்சி

அமெரிக்காவை தளமாக கொண்ட காயின்பேஸ் நிறுவனம், மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிமாற்றத் தளமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இதில் முதலீடு செய்யும் இந்தியர்களை எச்சரித்துள்ளார், ஜீரோதாவின் நிதின் காமத்.

ஆன்லைன் பங்கு வர்த்தக நிறுவனமான ஜீரோதா (Zerodha) இணை நிறுவனர் நிதின் காமத், அமெரிக்க கிரிப்டோகரன்சி பரிமாற்ற தளத்தை இயக்கும் `காயின்பேஸ் குளோபல்' (Coinbase Global) நிறுவனத்தில் முதலீடு செய்யும் இந்திய முதலீட்டாளர்களை எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவை மையமாகக் கொண்ட காயின்பேஸ் நிறுவனம், மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிமாற்றத் தளமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இதில் முதலீடு செய்யும் இந்தியர்களை எச்சரித்துள்ளார், நிதின் காமத்.

கிரிப்டோகரன்சி
கிரிப்டோகரன்சி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏப்ரல் 2021 ல் இந்த நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு நடந்தது. அந்த விலையிலிருந்து தற்போது 78% சரிந்துள்ளது. முதல் காலாண்டில் இந்த நிறுவனத்தின் கிரிப்டோகரன்சி புரோக்கரேஜ் ஒரு வருடத்திதுக்கு முன்பு இருந்ததை விட 27% சரிந்ததுள்ளதாக இந்த வாரம் அறிவித்தது. நிறுவனத்தின் மொத்த இழப்பு முதல் காலாண்டில் 430 மில்லியன் அமெரிக்க டாலர்.

மேலும் தற்போது ஆக்ட்டிவ் யூசர்களின் எண்ணிக்கையும் குறைவதாக காயின்பேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. காயின்பேஸ் திவாலானால் வாடிக்கையாளர்களின் சொத்துகள் ஆபத்தில் சிக்கக் கூடும். எனவே காயின்பேஸில் முதலீடு செய்யும் இந்திய கிரிப்டோ முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நிதின் காமத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism