Election bannerElection banner
Published:Updated:

`இந்தியாவில் முடிவுக்கு வந்தது உபர் ஈட்ஸ்!’- உரிமையை வாங்கிய ஜொமேட்டோ #Zomato

ஜொமேட்டோ
ஜொமேட்டோ

உபர் ஈட்ஸ் நிறுவனத்துடன் இணைப்பில் இருந்த உணவகங்கள், டெலிவரி பார்டர்கள் மற்றும் பயனாளர்கள் இனி ஜொமேட்டோ நிறுவனத்தில் இணைக்கப்படுவார்கள்

இந்தியாவில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் ஸ்விக்கி, உபர் ஈட்ஸ் மற்றும் ஜொமேட்டோ ஆகிய நிறுவனங்கள் முன்னணியில் இருந்துவந்த நிலையில், உபர் இந்தப் போட்டியிலிருந்து விலகி உள்ளது. இந்தியாவில் உபர் ஈட்ஸ் நிறுவனத்தை அதன் போட்டி நிறுவனமான ஜொமேட்டோ நிறுவனம் வாங்கியுள்ளது.

இதன் மூலம் இன்று முதல் உபர் ஈட்ஸ் நிறுவனம் தனது சேவைகளை நிறுத்துகிறது. உபர் ஈட்ஸ் நிறுவனத்துடன் இணைப்பில் இருந்த உணவகங்கள், டெலிவரி பார்டர்கள் மற்றும் பயனாளர்கள் இனி ஜொமேட்டோ நிறுவனத்தில் இணைக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

`இந்தியாவில் முடிவுக்கு வந்தது உபர் ஈட்ஸ்!’- உரிமையை வாங்கிய ஜொமேட்டோ #Zomato

கடந்த சில மாதங்களாக உபர் ஈட்ஸ் நிறுவனம் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வந்ததாகவும், இதைத் தொடர்ந்து ஸ்விக்கி மற்றும் ஜொமேட்டோ நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்திவந்ததாகவும் கூறப்பட்ட நிலையில், ஜொமேட்டோ நிறுவனம் உபர் நிறுவனத்தை வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்காக ஜொமேட்டோ நிறுவனம் சுமார் 350 மில்லியன் அமெரிக்க டாலரை உபர் நிறுவனத்துக்கு வழங்குகிறது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 2,500 கோடி ரூபாய். எனினும் உரிமை கைமாறியதற்கான தொகை அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக ஜொமேட்டோ சி.இ.ஓ கோயல் கூறுகையில், ``உணவக தேடுதலிலும் உணவு டெலிவரியிலும் 500 இந்திய நகரங்களில் உள்ள எங்களின் சேவையை நினைத்துப் பெருமை கொள்கிறோம். இந்த வணிகம், எங்களை மேலும் பலப்படுத்தும்” என தெரிவித்துள்ளார். ஜொமேட்டோவில் 1.5 மில்லியன் உணவகங்களில் தகவல்கள் உள்ளதும் மாதத்துக்கு 70 மில்லியன் பயனாளர்களுக்கு சேவைகளை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

டெலிவரி நபர்
டெலிவரி நபர்

உபர் சி.இ.ஓ, ``இந்தியா ஊபருக்கு மிகச் சிறந்த சந்தை. எங்களின் வாகன சேவையில் தொடர்ந்து கவனம் செலுத்த உள்ளோம். ஜொமேட்டோ நிறுவனத்தில் வளர்ச்சியைக் கண்டு பெருமை கொள்கிறோம். அவர்கள் இந்த வெற்றிப் பயணத்தை தொடர வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு