முன்பெல்லாம் ஒரு தொழில் துவங்குவதாக இருந்தால் அந்தப் பகுதியில் வரும் பத்திரிகைகளில் பெரிய விளம்பரம் அளிக்க வேண்டும். ஊர் முழுவதும் போஸ்டர், விளம்பர போர்டுகள் வைக்க வேண்டும் என்ற நிலை இருந்தது.

புதிதாக ஒரு தொழில் துவங்கப்பட்டுள்ளது என்பது குறைந்தபட்சம் அந்தப் பகுதியில் உள்ள ஒரு 5,000 பேருக்காவது தெரிந்திருந்தால்தான் அந்தத் தொழில் அந்தப் பகுதியில் நல்ல வரவேற்பை பெற முடியும். ஆனால் இன்று அப்படியில்லை உலகமே கணினி மயமாகிவிட்டது.

திருச்சியில் குறிப்பிட்ட பகுதியில் ஒரு தொழில் துவங்கப்பட்டால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கு மட்டும் உங்கள் விளம்பரத்தை கொண்டு போய் சேர்க்க முடியும். அதுவும், உங்கள் தயாரிப்பு 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் விரும்புகிற தயாரிப்பு என்று குறிபிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் கொண்டு போய் சேர்க்க முடியும் என்கிற அளவுக்கு சாத்தியமாகியுள்ளது டிஜிட்டல் மார்க்கெட்டிங்.

ஒரு ஃபேஸ்புக் கணக்கு இருந்தால் போதும், உங்கள் பொருளை உங்கள் இடத்துகே வந்து வாங்கிச் செல்வார்கள். ஒரு ஜி-மெயில் கணக்கு இருந்தால் போதும் உங்கள் தயாரிப்பை யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம் என்ற நிலையை உருவாக்கியுள்ளது இந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் முறை.

டிஜிட்டல் மார்க்கெட்டிங்:

பொருட்களை இணையதளம் மூலமாக நேரடியாக விற்கவோ, அல்லது தயாரிப்புகளை வாங்க ஆன்லைனில் இருந்து விசாரிக்கவோ, அல்லது இது போன்ற ஒரு தொழில் இந்த இடத்தில் உள்ளது என்பதை கூறி பொருளை ஆன்லைனில் சந்தைப்படுத்துவது தான் டிஜிட்டல் மார்க்கெட்டிங். பல வழிகளில் சந்தைப்படுத்த முடியும். அதில் பெரும்பாலான நபர்களால் பயன்படுத்தப்படுவது கூகுள் அட்வர்ட்ஸ் (adwords) மற்றும் சோஷியல் மீடியா மார்க்கெட்டிங் தான்.

கூகுள் அட்வர்ட்ஸ்:

இதன் மூலம் இரண்டு விதமான விளம்பரங்களை செய்ய முடியும். ஒன்று நாம் கூகுளில் தேடும் போது வரக்கூடிய விளம்பரங்கள், நாம் கூகுளில் விவரங்களை தேடும் போது அதற்கான விளம்பரங்கள் இடம்பெறுவது போன்ற விளம்பரங்கள். இன்னொன்று நாம் பார்க்கும் தளங்களில் நாம் தேடும் விஷயத்துக்கு ஏற்ற அது தொடர்பான விளம்பரங்கள். இங்கு விளம்பரத்துக்கு நாம் செலவிடும் தொகை நாம் சாதாரணமாக பத்திரிகை, இதர விளம்பரங்களுக்கு செய்வதை விட மிக குறைவு. மேலும் இதில் நாம் இலக்காக நிர்ணயிக்கும் நபர்களை எளிதில் சென்றடைந்துவிடலாம்.

சோஷியல் மீடியா:

ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் தயாரிப்பை பொறுத்தமான வயதினருக்கு, விரும்பும் பகுதிகளை சேர்ந்தவர் களுக்கு கொண்டு சேர்க்க முடியும். இதற்கான செலவும் க்ளிக் செய்வதற்கு ஏற்றவாறும், விளம்பரத்தை பார்ப்பதற்கு ஏற்றவாறும் வசூலிக்கப்படுகிறது. இருப்பதிலேயே குறைவான கட்டணம் இந்த விளம்பரங்களில் தான்.

இந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் இன்றைய தொழில்முனைவோருக்கு எப்படி உதவியாக இருக்கும் என்று சென்னையிலுள்ள O3M நிறுவனத்தின் ஒருங்கிணைப்பா ளர் அருணிடம் கேட்டோம்.

‘’இன்று மற்ற மார்க்கெட்டிங் முறைகளை விட டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொழில் முனைவோருக்கு பயனளிப்பதாக உள்ளது. இந்த மார்க்கெட்டிங் முறையை மேற்கொண்டால் சரியான பகுதியில் உள்ள நபர்களை சென்றடைய முடியும். உதாரணமாக சென்னை அண்ணா சாலையில் காலணி கடை துவங்கப்படுகிறது என்றால் அதனை சுற்றியுள்ள அனைவருக்கும் அந்த விஷயம் போய் சேர வேண்டும் என்கிற அளவுக்கு விளம்பரம் செய்ய வேண்டும்.

இந்த விளம்பரங்கள் மூலம் மூன்று வகையாக ஒரு தொழில்முனைவோர் பயன்பெற முடியும். முதலில் இந்த விளம்பரங்கள் மூலம் நேரடியாக உங்கள் தயாரிப்பை வாங்க வைக்க முடியும். உங்கள் நிறுவனத்துக்கு இணையதளம் இருந்தால் அந்த தளத்தில் பொருட்கள் இருக்கும் பக்கத்தில் ஆர்டர் செய்து வாங்க வைக்க இது உதவும்.

இரண்டாவது உங்கள் தயாரிப்பு பற்றிய விவரங்களை மட்டும் அளித்து உங்கள் தயாரிப்பு பற்றிய விவரத்தை உங்களிடம் தொடர்பு கொண்டு வாங்க வைப்பது. மூன்றாவது உங்கள் தயாரிப்பை முழுக்க முழுக்க மக்கள் மத்தியில் பிரபல படுத்த அளிக்கப்படும் விளம்பரங்கள்.
சிடிசி - உங்கள் தயாரிப்பை பற்றிய தகவலை க்ளிக் செய்தால் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும்

சிபிஎம்- உங்கள் விளம்பரத்தை பார்த்தாலே கட்டணம் வசூலிக்கப்படும்.

சிபிஏ - உங்கள் தயாரிப்பை வாங்கினால் அதற்கு மட்டும் கட்டணம் வசூலிக்கப்படும்.

இது தவிர நீங்கள் எத்தனை பேருக்கு உங்கள் விளம்பரத்தை காட்ட வேண்டும், எந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு காட்ட வேண்டும் என பல மாதிரியாக உங்கள் விளம்பரங் களுக்கான கட்டணத்தை உங்கள் வசதிகேற்ப மாற்றியமைத்து கொள்ளலாம் . இதனை சரியாக செய்தால் விளம்பரத்துக்கென ஆட்களை நியமிக்கும் செலவும் மிச்சமாகும். சரியான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்ட விளம்பரங்கள் உங்கள் தயாரிப்பை சரியான வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்க்கும் என்றார்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் தனது தொழிலில் சிறப்பாக செயல்படும் வில்வா க்ளோத்திங்ஸ் நிறுவனர் கோபிநாத் ரவிராஜனிடம் கேட்டோம். ‘‘டிஜிட்டல் மார்க்கெட்டிங் இன்றைய தொழில்முனைவோர் அவசியம் செய்ய வேண்டிய விஷயங்களில் ஒன்று. தொழில் செய்யும் இடம் என்று ஒன்று இல்லாமலே நமது தொழிலை எளிதாக செய்ய இது உதவும்.

ஆரம்பத்தில் எங்கள் தயாரிப்பான ட்ரெஸ்களை வாடிக்கையாளரிடம் சேர்க்க ஒரு அலுவலகம் அமைக்கலாம் என்று நினைத்தோம். ஆனால் ஒரு குடோன் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டோம். காரணம், அதில் தயாரிப்புகளை ஸ்டோர் செய்து தற்போது வாடிக்கையாளர்களை பெருமளவு டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் ஈர்ப்பதால் எங்களுக்கு அலுவலகம் தேவைப்படவில்லை. அதுமட்டுமின்றி மற்ற விளம்பரங்களில் ஒருமுறை விளம்பரத்தை கொடுத்துவிட்டால் மாற்ற முடியாது. இங்கு தினசரி விளம்பரத்தை மாற்ற முடியும். இடத்தை, வாடிக்கையாளரை எப்போது வேண்டுமானாலும் மாற்றியமைக்கலாம் என்பது இதில் உள்ள பிளஸ்” என்றார்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பது தொழிலுக்கானது மட்டுமல்ல சமீபத்தில் தேர்தல் சமயத்தில் அனைத்து கட்சிகளும் அதிகம் நம்பியது டிஜிட்டல் விளம்பரங்களைதான். ஃபேஸ்புக், ட்விட்டர், யூ-ட்யூப் என விளம்பரங்கள் மூலம் எளிதில் மக்களை சென்றடைந்துவிட முடியும். ஸ்மார்ட் போன்களின் வருகை அதிகரித்துள்ளதால் மக்களை நேரடியாக சென்றடைய முடியும். இதில் பெரிய பலன் என்னவென்றால் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்பவர்கள் விரைவாக பொருளை எதிர்பார்ப்பதால் அருகில் உள்ள நிறுவனங்கள் எளிதில் ஆர்டர்களை பெற முடியும். அவர்கள் நம்பிக்கையை பூர்த்தி செய்து விரைவாக டெலிவரி செய்தாலே போதும் தொழில் சக்ஸஸ் தான்.

இனி அமெரிக்க குளிர்பானத்தோடு லோக்கல் சோடா நிறுவனம் போட்டியிட முடியும். பிராண்டட் டி-ஷர்ட்டுகளை திருப்பூர் டி-ஷர்ட்டுகள் தோற்கடிக்க இந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் சாத்தியம் உண்டு.