Published:Updated:

30 நிமிடத்துக்கு ₹5... 20 கோடி வாடிக்கையாளர்கள்... சைக்கிள் வாடகையிலும் கோடீஸ்வரன் ஆகலாம்!

உலகம் முழுவதிலும் 200 - க்கும் மேற்பட்ட நகரங்களில் மொபைக் இயங்கிவருகிறது. தொடங்கிய 3 வருடங்களிலேயே பல வெளிநாடுகளில் மொபைக் தனது தடத்தைப் பதித்துள்ளது. சீனாவில் மட்டுமல்லாமல் கிரேட் பிரிட்டன், இத்தாலி, லண்டன் மற்றும் மலேசியாவிலும்அதிகாரபூர்வமாக மொபைக்கை விரிவுபடுத்தப்படுத்தியுள்ளது.

30 நிமிடத்துக்கு ₹5... 20 கோடி வாடிக்கையாளர்கள்... சைக்கிள் வாடகையிலும் கோடீஸ்வரன் ஆகலாம்!
30 நிமிடத்துக்கு ₹5... 20 கோடி வாடிக்கையாளர்கள்... சைக்கிள் வாடகையிலும் கோடீஸ்வரன் ஆகலாம்!

ஊருக்குச் சென்றாக வேண்டும். தொலைதூரம் என்பதால் பேருந்தை பிடித்துச் சென்று விடலாம். பயண இலக்கை இன்னும் அடையவில்லை. கால்களை நம்பலாம் என்றால்,  நடந்து செல்லும் தூரமும் இல்லை. சரி, ஒரு ஆட்டோவையோ, டாக்ஸியையோ பிடித்துச் செல்லலாம் என்றால் கேட்கும் விலையில் நெஞ்சடைப்பே வந்துவிடும். சரி, இதற்கு என்ன தான் தீர்வு? பணமும் செலவாகக் கூடாது, பயணிக்க வண்டியும் கிடைத்தால் எப்படி இருக்கும்? பயணத்தின்போது ஒரு வாகனத்தை எடுத்து ஓட்டிவிட்டு எங்கு வேண்டுமானாலும் விடலாம் என்றால் எப்படி இருக்கும்?  இந்த வேலையைத் தான்  மொபைக் ( Mobike)   செய்து வருகிறது.  நகர்ப்புறக் குறுகிய பயணங்களை நிறைவேற்றுவதற்கான ஒரு பகிர்வு சேவை தான் இந்த மொபைக்.  பயணத்தின்போது குறிப்பிட்ட இடத்தை அடைந்தாலும் சில மைல் தூரம்  நடந்து செல்ல வேண்டியிருக்கும். அந்த நேரத்தில் உங்கள் கண்கள் ஒரு ஆட்டோவையோ அல்லது டாக்ஸியையோ தேட ஆரம்பிக்கும். ஆனால் அப்படி இல்லாமல்   உங்களால் எந்த நேரத்திலும் எப்போதுவேண்டுமானாலும் சட்டப்படி வாகனத்தை  நிறுத்த முடியும் ,ஓட்டவும் முடியும். சீனாவிலுள்ள பெய்ஜிங்கை தலைமையிடமாக கொண்டு 27 ஜனவரி 2015 - ல் மொபைக் நிறுவனம் தொடங்கப்பட்டது. மொபைக் என்றதும் பைக்கோடு சம்பந்தப்படுத்துகிறீர்களா?  இல்லை. மொபைக், ஒரு சைக்கிள் பகிர்வு அமைப்பு. 

தற்போது உலகம் முழுவதிலும் 200 - க்கும்  மேற்பட்ட நகரங்களில் மொபைக்  இயங்கிவருகிறது.  தொடங்கிய 3 வருடங்களிலேயே பல வெளிநாடுகளில் மொபைக் தனது தடத்தைப் பதித்துள்ளது.  சீனாவில் மட்டுமல்லாமல் கிரேட் பிரிட்டன், இத்தாலி, லண்டன் மற்றும் மலேசியாவிலும்அதிகாரபூர்வமாக மொபைக்கை விரிவுபடுத்தப்படுத்தியுள்ளது.

வாடகை சைக்கிள் போல தெரிகிறதா?  ஆமாம் கிட்டத்தட்ட அப்படித்தான். ஆனால் இது அது இல்லை என்பதுதான் சரியாக இருக்கும்.  ஒவ்வொரு மொபைக் சைக்கிளிலும் உள்ள மின்னணு சக்கரப் பூட்டு இணையத்தினால் கட்டுப்படுத்தப்படுகிறது. இது ஜெனரேட்டரால் இயக்கப்படுகிறது. 

மொபைக் சைக்கிள்கள் இரண்டு வடிவங்களில் உள்ளன. இவற்றின் பூட்டுக்களை திறக்க QR குறியீட்டின் ஸ்கேன் தேவைப்படுகிறது.  ஸ்கேன் சரியாக இருந்தால் மட்டுமே உங்களால் வண்டியை ஓட்ட முடியும்.  

1. கிளாஸிக் மொபைக் ( Classic mobike)  :

இதனை பெரும்பாலும் மொபைக் என்றே அழைக்கின்றனர். முற்றிலும் அலுமினியத்தால் செய்யப்பட்ட V  வடிவ அமைப்புடன் எளிதில் துளையிட முடியாத டயர்களை கொண்டுள்ளது. 72 கோண அளவில் உலோக ராடுகள் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் பூட்டுகள் கைப்பிடியின் அடிப்பகுதியில் அமைந்துள்ளது. வாடகைதாரர்கள் QR குறியீட்டை அங்கு ஸ்கேன் செய்யலாம். பிறரைக் கவரும் வகையில் மொபைக் மிதிவண்டிகளின் இருக்கை, கைப்பிடி, பூட்டுகளுக்குக் கறுப்பு நிறமும், சக்கரங்களுக்கு ஆரஞ்சு நிறமும் பூசப்படுகிறது.  இந்த கிளாசிக் மொபைக்கின்   வாடகை 30 நிமிடங்களுக்குச் சீன மதிப்பில் 1 யுவான் ஆகும். இந்திய மதிப்பில் 10 ரூபாய் 29 பைசா தேவைப்படும்.

இதை உபயோகித்தவர்கள் இவற்றின் எடை அதிகமாக இருப்பதாகவும், பொருட்களை எடுத்துசெல்வதற்கு  மிதிவண்டியில் இருக்கும் கூடை இல்லை என்றும் சொல்லியிருக்கிறார்கள். 

 2. மொபைக் லைட் ( Mobike Lite)  :

மொபைக் லைட்,  generation - 2 என்றும் அழைக்கப்படுகிறது. கிளாசிக் மொபைக்கை போல் இல்லாமல் எடை குறைவாக,  தினமும் உபயோகிக்கக் கூடிய வகையில் பொருத்தமானதாக உள்ளது. சைக்கிளை முற்றிலும் மாற்றியமைத்து சக்கரம் சுழல்வதற்கு வழக்கமான சங்கிலிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, பயனர்களின் குற்றச்சாட்டை நீக்க , அவர்களின் உடைமைகளை எடுத்து செல்வதற்கு வலைபின்னல் போல உலோகத்தால் செய்யப்பட்ட கூடையும் இணைக்கப்பட்டுள்ளது. கிளாசிக் சைக்கிளின் வாடகையை ஒப்பிடும் போது மைக்ரோ லைட்டின் வாடகை குறைவுதான். அதாவது 30 நிமிடங்களுக்கு 0.5 யுவான் மட்டுமே பெறப்படுகிறது.  

மொபைக்கை பயன்படுத்த நீங்கள் செய்ய வேண்டியவை :
முதலில் மொபைக் பயன்பாட்டை ( Mobike app) பதிவிறக்கம் செய்ய வேண்டும்.  பிறகு உங்களை அடையாளப்படுத்த தொலைபேசி எண், தேசிய அடையாள அட்டை எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். சீன மக்கள் இல்லாதவர்களுக்கு பாஸ்போர்ட் அடையாளம் காணுதல் மற்றும் சரிபார்த்தல் நடைபெறுகிறது. 14 வயதிற்குக் கீழ் உள்ளவர்கள் மொபைக்கை பயன்படுத்தமுடியாது. அப்படி அவர்கள் உபயோகிக்க முற்பட்டாலும், அடையாள எண்ணைக் கொண்டு வயதைத் தீர்மானித்து நிராகரிக்கப்பட்டு விடுகின்றனர். 

சைக்கிளை பயன்படுத்த பயனர் Scan & Ride என்ற கறுப்பு நிற பொத்தானை அழுத்த வேண்டும். QR Code - ஐ காட்டிய பிறகு, சரியாக உள்ளதெனில் இந்த ஆப் மெல்லிய பீப் என்ற ஒலியை எழுப்பும். வெற்றிகரமான ஸ்கேனிங்கிற்கு பிறகு திரையில் Progress bar எனத் தோன்றும். அதாவது பூட்டுகளைத் திறந்து முன்னேறிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதைக் குறிக்கிறது. உங்களுக்கு முழுமையாக சைக்கிளின்  பூட்டு திறக்கப்பட்டு விட்டால்  Tuk என்ற சத்தத்தை மூன்று முறை எழுப்புகிறது. அதுமட்டுமல்லாமல் உங்கள் பயன்பாட்டில் ( App) 100%   பூட்டு திறக்கப்பட்டதை உணர்த்த "வெற்றிகரமாக திறந்துவிட்டீர்கள் " என்று அறிவிக்கப்படும்.  இதுவரை எத்தனை முறை சைக்கிளை பயன்படுத்தியுள்ளீர்கள், பயணத்தின் தூரம், எவ்வளவு நேரம் சைக்கிள் ஓட்ட செலவழிக்கப்பட்டது, மிதிவண்டியைப் பயன்படுத்திய போது வெளியிடப்பட்ட ஆற்றல் இவை அனைத்தையும் உங்களுக்கு காண்பிக்கின்றது. 

 Ali pay  மற்றும் We chat pay மூலம்,  மொபைக் ஆன்லைன் பரிவர்த்தனைகளை மட்டுமே ஏற்றுக்கொள்கிறது. மொபைக் சேவையை நீங்கள் பெறுவதற்கு உங்கள் இருப்பில் 299 யுவான் இருக்க வேண்டும். இது பதிவு கட்டணம், இதைத் தவிர்த்து பயனர் எப்போதும் 1 யுவான் பணத்தை வைத்திருக்க வேண்டும். 

பயணம் முடிந்த பிறகு கைகளால் பூட்ட ( Manual lock)  வேண்டும். சரியாக பூட்டிவிட்டால் சிறிய பீப் சத்தம் தோன்றும். பிறகு பயணத்தின் முடிவில் உங்கள் பணம் பெறப்பட்ட பின்னர் தொடர்ந்து மூன்று பீப் எனும் சத்தங்கள் வரும். பயனர்கள் சைக்கிளை எப்படி பயன்படுத்தினார்கள் என்பதைக் காட்ட அவர்களுக்கு மதிப்பெண்களும் வழங்கப்படுகிறது. 
 
  உலகளவில் 200 மில்லியன் மக்கள் மொபைக்கை பயன்படுத்துகின்றனர். மூன்று வருடங்களிலேயே இவ்வளவு பயனர்களை மொபைக்  கொண்டுள்ளது குறிப்பிடதக்கது.