பிரீமியம் ஸ்டோரி
கேட்ஜெட்ஸ் ஸ்கேன்

ரிகோ தீட்டா எஸ்.சி (Ricoh Theta SC)

விலை: 300 டாலர்

360 டிகிரி கேமராக்களுக்கு பெயர் பெற்றது ரிகோ நிறுவனம். ஏற்கெனவே வெளியிடப்பட்ட தீட்டா மற்றும் தீட்டா S வரிசை கேமராக்கள் ஹிட் அடிக்க, அந்த வரிசையில் தற்போது புதிதாக ஒரு கேமராவை அறிமுகம் செய்துள்ளது ரிகோ நிறுவனம்.

மிகக் குறைந்த எடையில் சிறிதாக இருப்பதால் கையாள்வதற்கும், எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்லவும் எளிதாக இருக்கிறது. வெள்ளை, பிங்க், நீலம், பழுப்பு என நான்கு நிறங்களில் கிடைக்கிறது. 14 எம்.பி கேமரா லென்ஸ், 102 கிராம் எடை, 260 போட்டோக்கள் வரை தாங்கும் லித்தியம் அயன் பேட்டரி, 8 ஜி.பி மெமரி கார்டு ஆகியவற்றைக் கொண்டுள்ளது தீட்டா எஸ்.சி.

இதில் 360 டிகிரி போட்டோக்கள் மட்டுமில்லாமல், ஹெச்டி தரத்தில் (1920 x 1080) ரெசல்யூஷனில் வீடியோவும் எடுக்க முடியும். இதில் அதிகபட்சம் ஐந்து நிமிடங்கள் வரை வீடியோ எடுக்க முடியும். இதில் எடுக்கும் வீடியோக்களை உடனே மொபைலில் பார்க்கவும் அல்லது நேரடியாக சமூக வலைதளங்களில் பதிவேற்றவும் முடியும். இதில் எடுக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை மேலும் மெருகூட்டவேண்டும் என்றால், தீட்டா + ஆப் மூலம் எடிட் செய்யலாம்.

எளிதாக இதனை ஆன் செய்து போட்டோ எடுக்கவும், வீடியோ எடுக்கவும் முடியும். தீட்டா ஆப் இதனை இயக்க உதவுகிறது. இதனால் 360 டிகிரி கேமரா என்றாலும்கூட, கையாள எளிதாக இருக்கிறது. இவை இந்தியாவில் எப்போது விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்படவில்லை; விரைவில் வரலாம்.

ப்ளஸ்:

* எளிதான வடிவமைப்பு

* கையாள எளிதாக இருக்கிறது.

ஹூவாவே ஹானர் 8 (Huawei Honor 8)

கேட்ஜெட்ஸ் ஸ்கேன்

விலை:  29,999 ரூபாயில் இருந்து கிடைக்கிறது.

ஹானர் 8 என்னும் புதிய மொபைலை அறிமுகம் செய்திருக்கிறது ஹூவாவே நிறுவனம். ஆக்டோகோர் பிராசஸர், 153 கிராம் எடை, 5.2 இன்ச் டிஸ்ப்ளே, 4 ஜி.பி. ரேம், 32 ஜி.பி மெமரி, 12 எம்.பி பின்புற கேமரா, 8 எம்.பி முன்புற கேமரா,  EMUI 4.1, 3000mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது ஹானர் 8. இதன் 12 எம்.பி டூயல் லென்ஸ் பின்பக்க கேமரா மிகத் துல்லியமான படங்களை எடுப்பது இதன் ஹைலைட்.

இதில் இருக்கும் ஃபிங்கர் பிரின்ட் சென்சார், மற்றவைகளைவிட வேகமாகச் செயல்பட முடியும் என்கிறது ஹூவாவே. கைரேகையை கணிக்க, இதற்கு 0.4 நொடிகள் போதும்.

ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோவில் இயங்கும் இந்த போனின், சார்ஜ் வேகமும் கொஞ்சம் அதிகம். முப்பது நிமிடத்தில் 47% வரை பேட்டரி சார்ஜ் ஆகிவிடும். ஐ-கேர் மோடில் வைத்து, மொபைல் பயன் படுத்தினால் நமது கண்களுக்கு வரும் நீல ஒளியினைக் குறைத்து, கண் எரிச்சலைக் குறைத்துக்கொள்ளும் ஆப்ஷனும் இதில் இருக்கிறது.

4 ஜி.பி ரேம் என்பதால், ஒரே நேரத்தில் பல ஆப்ஸ்களை இயக்கும் போதோ, கேம்ஸ் விளையாடும்போதோ  சூடாகாமல் இருக்கிறது. மெட்டல் ஃபினிஷால் ஆன, மொபைல் டிசைனால் போனின் ஸ்டைல் தனித்து தெரிகிறது.

4G வோல்டே வசதி போன்களுக்கு மவுசு ஏறிவரும் நிலையில், இதில் அந்த வசதி இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

ப்ளஸ்:

* டிஸ்ப்ளே திறன், துல்லியம்

* திறன்வாய்ந்த கேமரா

* பெர்ஃபார்மன்ஸ் மற்றும் ஸ்டைல்

மைனஸ்:


* விலை அதிகம்

* 4G வோல்டே வசதி இல்லை.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு