Published:Updated:

கேட்ஜெட்ஸ் ஸ்கேன்

கேட்ஜெட்ஸ் ஸ்கேன்
பிரீமியம் ஸ்டோரி
கேட்ஜெட்ஸ் ஸ்கேன்

GADGETSஞா.சுதாகர்

கேட்ஜெட்ஸ் ஸ்கேன்

GADGETSஞா.சுதாகர்

Published:Updated:
கேட்ஜெட்ஸ் ஸ்கேன்
பிரீமியம் ஸ்டோரி
கேட்ஜெட்ஸ் ஸ்கேன்
கேட்ஜெட்ஸ் ஸ்கேன்

விவோ V5

விலை:ரூ.17,980 முதல் கிடைக்கிறது.

செல்ஃபி பிரியர்களை குறிவைத்து புதிதாக அறிமுகம் ஆகியிருக்கிறது விவோ v5. ஒரு ஸ்மார்ட் போனில் இருக்கவேண்டிய அத்தனை அடிப்படை அம்சங்களும் இதில் உண்டு.

இது செல்ஃபி பிரியர்களுக்கானது என்பதால், அதற்கேற்றபடி கேமராக்களை டிசைன் செய்துள்ளது. பின் கேமரா 13 எம்.பி மற்றும் முன் கேமரா 20 எம்.பி. எனவே, செல்ஃபி எடுக்க மிகத் துல்லியமாக இருக்கிறது. மூன்லைட் செல்ஃபி என்னும் ஆப்ஷன் இதில் இருக்கிறது. இதன் மூலம் குறைந்த வெளிச்சத்திலும் தரமான போட்டோ எடுக்க முடியும்.

மேலும் இதில் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் மூலம் வெறும் 0.2 நொடிகளில், விரைவாக அன்லாக் செய்யலாம். ஒரே நேரத்தில் மெசேஜ் அனுப்பவும், வீடியோ பார்க்கவும் முடியும் வகையில் மொபைல் திரையை இரண்டாக பிரிக்க ஸ்ப்ளிட் ஸ்க்ரீன் வசதியும் இருக்கிறது. போட்டோகளை அழகுபடுத்த ஃபேஸ்பியூட்டி 6.0 இதில் இருக்கிறது. செல்ஃபி எக்ஸ்பர்ட் மொபைல் விரும்பிகள் விவோ v5-க்கு டிக் அடிக்கலாம்.

ப்ளஸ்:

1. கேமரா திறன்

2. பெர்ஃபார்மன்ஸ்

கேட்ஜெட்ஸ் ஸ்கேன்

ஏசர் ஸ்விஃப்ட் 7

விலை : ரூ.99,999 முதல் கிடைக்கிறது.

லகின் மிக மெலிதான லேப்டாப் என தனது புதிய ஸ்விஃப்ட் 7 மாடலை அறிமுகம் செய்துள்ளது ஏசர் நிறுவனம். இதன் தடிமன் ஒரு செ.மீ.க்கும் குறைவு. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் 9.98 மி.மீ.
 13.3 இன்ச் டிஸ்ப்ளே, விண்டோஸ் 10 ஆபரேட்டிங் சிஸ்டம், 9 மணி நேரம் தாங்கும் பேட்டரி, 1.2 GHz ஐ-5 பிராசஸர், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 திரை, டால்பி பிரீமியம் ஆடியோ, 1.1 கி.கிராம் எடை, ஹெச்.டி வெப்கேம்  ஆகியவற்றைக் கொண்டுள்ளது ஸ்விஃப்ட் 7.

மற்ற லேப்டாப்களோடு ஒப்பிடுகையில், இதன் டச் பேட் கொஞ்சம் அகலமாக இருப்பதால், கையாள எளிதாக  இருக்கிறது. 8 ஜி.பி ரேம் மற்றும் 256 ஜி.பி சாலிட் ஸ்டேட் டிரைவ் என்பதால் கேம்ஸ், மல்டி மீடியா எனப் பல விஷயங்களுக்கு கைகொடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

வெளியே கறுப்பு மற்றும் உள்ளே தங்க நிறம்,  அழகான டிசைன் என பார்த்தவுடன் கவர்வதுபோல இருக்கிறது இதன் வடிவமைப்பு. அலுவலக வேலைகளை மட்டும் செய்வதற்கு என்றால் இந்த லேப்டாப் நல்ல சாய்ஸ்.

ப்ளஸ்:


நிறம், வடிவமைப்பு,எடை, ஸ்டைல் என முழு லேப்டாப் டிசைன், 2. 8 ஜி.பி ரேம் மற்றும் ஸ்பீக்கர்ஸ்

மைனஸ்:

பெர்ஃபார்மன்ஸ்