Published:Updated:

கேட்ஜெட்!

கேட்ஜெட்!
பிரீமியம் ஸ்டோரி
கேட்ஜெட்!

GADGETSஞா.சுதாகர்

கேட்ஜெட்!

GADGETSஞா.சுதாகர்

Published:Updated:
கேட்ஜெட்!
பிரீமியம் ஸ்டோரி
கேட்ஜெட்!

லெனோவா K6 பவர் (Lenova k6 power)

கேட்ஜெட்!


விலை: ரூ.9,999

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லெனோவா நிறுவனத்தின் புதிய போனாக சந்தைக்கு வந்துள்ளது லெனோவா K6 பவர். பெயருக்கு ஏற்றபடியே 4000 mAh பேட்டரி கூடுதல் திறனுடன் வந்திருக்கிறது K6 பவர். இதில் 5 இன்ச்  முழு ஹெச்.டி டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், ஆக்டாகோர் 1.4 GHz பிராசஸர், 3 ஜி.பி ரேம், 32 ஜி.பி நினைவகம் ஆகியவை இருக்கின்றன.

இதன் கேமரா பின்பக்கம் 12 எம்.பி மற்றும் முன்பக்க கேமரா 8 எம்.பி திறன் கொண்டது.

இந்த போனின் ஹைலைட்டே இதன் பேட்டரிதான். 4000 mAh திறன் கொண்டது என்பதால், பேட்டரி குறைவதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்கிறது லெனோவா. இதன் ஆக்டிவ் ஸ்டாண்ட்பை நேரம் 649 மணி நேரம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ஒருமுறை சார்ஜ் போட்டால் இரண்டு நாட்களுக்கு கவலைப்பட வேண்டாம்.

ஜியோமி ரெட்மி 3S-க்குப் போட்டியாக களமிறங்கியிருக்கும் இது, மெட்டாலிக் டிசைன் உள்பட பல கோணங்களில் ரெட்மி 3 சீரிஸ் போன்களின் தோற்றத்தை அளிக்கிறது. சில்வர், கோல்டு, டார்க் க்ரே என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதனை ஃப்ளிப்கார்ட்டில் மட்டுமே வாங்க முடியும்.

ப்ளஸ்:

* பேட்டரி திறன்.

* 13 எம்.பி பின்பக்க கேமரா மற்றும் 8 எம்.பி முன்பக்க கேமரா.

* 3 ஜி.பி ரேம்.

HP ப்ரோபுக் x360 11 G1 எஜுகேஷன் எடிஷன் (HP ProBook x360 11 G1 education edition)

கேட்ஜெட்!

குழந்தைகளுக்காகவும், பள்ளி செல்லும் மாணவர் களுக்காகவும் மட்டுமே ஒரு புதிய லேப்டாப்பை அறிமுகப் படுத்தியுள்ளது ஹெச்.பி.நிறுவனம். குழந்தைகள் பயன்படுத்த ஏற்ற வகையில் இருப்பதோடு, டேப்லெட் மற்றும் லேப்டாப் என இரு வகைகளில் இதனைப் பயன்படுத்த முடியும் என்பது இதன் இன்னொரு சிறப்பு.

குழந்தைகள் கையில் கேட்ஜெட் என்றாலே நாம் பயப்படக் காரணம், பாதுகாப்பின்மைதான். அதனால் திரவங்கள், கீறல்கள் எதனாலும் பாதிக்கப்படாத அளவுக்கு இதனை வடிவமைத்துள்ளது ஹெச்.பி. அதேபோல, ஒரு நோட்டைக் கையில் வைத்திருப்பதுபோல, இந்த லேப்டாப்பில் எழுதவும், வரையவும் முடியும்.

விண்டோஸ் 10 ஆபரேட்டிங் சிஸ்டம், இன்டெல் செலிரான் அல்லது பென்டியம் பிராசஸர், 11.6 இன்ச் டிஸ்ப்ளே, டூயல் கேமரா, 8 ஜி.பி ரேம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது இந்த லேப்டாப். 11 மணி நேரம் வரை இதன் பேட்டரி தாங்கும். தண்ணீர் சிந்தினாலும் பாதிக்கப்படாதவாறு கீ-போர்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

குழந்தைகளின் கல்விக்காக மட்டுமே வடிவமைக்கப் பட்டிருப்பதால், மற்ற லேப்டாப்களில் எதிர்பார்க்கும் எல்லா விஷயங்களையும் இதில் எதிர்பார்க்க முடியாது. டிசம்பர் 16-ம் தேதி முதல் இது விற்பனைக்கு வருகிறது. விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை!

ப்ளஸ்:

* டேப்லெட், லேப்டாப், ஸ்டேன்ட், டென்ட் என நான்கு விதமாக இதனைப் பயன்படுத்த முடியும்.

* டூயல் கேமரா வசதி இருப்பதால், டேப்லெட் போலவே இதனைப் பயன்படுத்த முடியும்.

* தரமான மற்றும் வலிமையான வடிவமைப்பு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism