Published:Updated:

கேட்ஜெட்!

கேட்ஜெட்!
பிரீமியம் ஸ்டோரி
கேட்ஜெட்!

GADGETSஞா.சுதாகர்

கேட்ஜெட்!

GADGETSஞா.சுதாகர்

Published:Updated:
கேட்ஜெட்!
பிரீமியம் ஸ்டோரி
கேட்ஜெட்!
கேட்ஜெட்!

ஏசஸ் ஜென்புக் 3 (Asus ZenBook 3 UX390)

விலை:
ரூ.1,47,990 முதல்...

தனது ஜென்புக் நோட்புக்ஸ் வரிசையில் புதிதாக ஜென்புக் 3-ஐ அறிமுகம் செய்துள்ளது ஏசஸ் நிறுவனம். இதனை  ஆப்பிள் 12 இன்ச் மேக்புக்கின் விண்டோஸ் வெர்ஷன் போலவே வடிவமைத்திருக்கிறது ஏசஸ் நிறுவனம்.

இன்டெல் கோர் i7 பிராசஸர், விண்டோஸ் 10 ஆபரேட்டிங் சிஸ்டம், 12.5 இன்ச் டிஸ்ப்ளே, 9 மணி நேரம் தாக்குப் பிடிக்கும் 40 Whrs பேட்டரி, 16 ஜி.பி ரேம், 512 ஜி.பி எஸ்.எஸ்.டி, குவாட் ஸ்பீக்கர்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது ஜென்புக் 3.

இதன் சிறப்பு அம்சமே இதன் வடிவமைப்புதான். 910 கிராம் எடை மற்றும் 11.9 மி.மீட்டர் மட்டுமே தடிமன் கொண்ட இதன் ஸ்டைல் மற்றும் டிசைன் அழகாக இருக்கிறது. LED வெளிச்சத்துடன் இருக்கும் சிக்லெட் கீ-போர்டு, லேப்டாப்பை சுற்றியிருக்கும் கோல்டன் ரிம் ஆகியவை லேப்டாப்புக்கு நல்ல அழகைத் தருகின்றன.

இதில் ஒரே ஒரு யு.எஸ்.பி-சி போர்டு மட்டுமே இருக்கிறது. மற்ற போர்டுகளை நீக்கிவிட்டது ஏசஸ் நிறுவனம். அதற்கு பதில், யுனிவெர்சல் டாக்கை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் நமக்கு வேண்டிய மின்சக்தி பரிமாற்றம், டேட்டா பரிமாற்றம், எஸ்.டி கார்டு மற்றும் பென் டிரைவ்களை  இணைப்பது ஆகியவற்றை செய்துகொள்ள முடியும். ஆனால், இந்த யுனிவெர்சல் அடாப்டரை தனியாக வாங்க வேண்டுமா அல்லது கணினியுடனே வருமா என்பது பற்றி எதுவும் குறிப்பிட வில்லை.

இது மூன்று விதங்களிலும், மூன்று நிறங்களிலும் கிடைக்கிறது.

ப்ளஸ்:

* மெல்லிய டிசைன் மற்றும் ஸ்டைல்

* ஹைகுவாலிட்டி டிஸ்ப்ளே

மைனஸ்:


* விலை அதிகமாக இருக்கிறது

* கீ-போர்டு மற்றும் டச் பேட் இரண்டும் பயன்படுத்த கடினமாக இருக்கிறது

கேட்ஜெட்!

ஒன் ப்ளஸ் 3T (OnePlus 3T)

விலை:  64 ஜி.பி வெர்ஷன்: ரூ.29,999, 128 ஜி.பி வெர்ஷன்: ரூ.34,999.

ஏற்கெனவே வெளியாகி ஹிட் அடித்த ஒன் ப்ளஸ் 3 போனின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக வெளியாகியிருக்கிறது இந்த 3T. வடிவமைப்பில் இதன் முந்தைய வெர்ஷனைப் போலவே இருந்தாலும், போனின் உள்ளே மட்டும் சில மாற்றங்களைச் செய்திருக்கிறது ஒன் ப்ளஸ் நிறுவனம்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 821 பிராசஸர், 6 ஜி.பி ரேம், 64 மற்றும் 128 ஜி.பி திறன் கொண்ட நினைவகம், ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ, 5.5. இன்ச் டிஸ்ப்ளே, டூயல் சிம் வசதி, 4G LTE  வசதி  ஆகியவற்றைக் கொண்டுள்ளது ஒன்ப்ளஸ் 3T.

முந்தைய மாடலைவிட பிராசஸர், முன்பக்க கேமரா, பேட்டரி மற்றும் நினைவகங்களில் மட்டுமே மாறுதல்களைச் செய்துள்ளது ஒன்ப்ளஸ் நிறுவனம். 16 எம்.பி பின்பக்க கேமராவுடன், 16 எம்.பி முன்பக்க கேமராவும் இதில் இருக்கிறது.

முந்தைய போனில் இருந்த 3,000 mAh பேட்டரிக்குப் பதிலாக இதில் 3400 mAh பேட்டரி இருக்கிறது. இன்பில்ட் மெமரி 64 ஜி.பி வெர்ஷன் மற்றும் 128 ஜி.பி வெர்ஷன் என இரண்டு வகைகளில் கிடைக்கிறது. ஒரு நாளைக்குத் தேவையான மின்சக்தியை 30 நிமிடங்களில் பெறும் டேஷ் சார்ஜ் என்னும் தொழில்நுட்பமும் இதில் இருக்கிறது.

ப்ளஸ்:

* 6 ஜி.பி ரேம் மற்றும் அதிகரிக்கப்பட்ட நினைவகம்

* 16 எம்.பி திறன் கொண்ட கேமராக்கள்