Published:Updated:

கேட்ஜெட்!

கேட்ஜெட்!
பிரீமியம் ஸ்டோரி
News
கேட்ஜெட்!

GADGETSஞா.சுதாகர்

கேட்ஜெட்!

ரிலையன்ஸ் லைஃப் F1s(Reliance Lyf F1s)

விலை:

Ajio இணையதளத்தில் உண்மையான விலை ரூ.20,249 எனவும்,

50% சலுகையில் ரூ.10,999 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜியோ 4G வருகைக்குப் பின்பு, 4G வசதியுடன் கூடிய பல பட்ஜெட் போன்களை வரிசையாகக் களமிறக்கி வருகிறது ரிலையன்ஸ் நிறுவனம். தற்போது அந்த வரிசையில் F1s-ஐ அறிமுகம் செய்துள்ளது அந்த நிறுவனம்.

5.2 இன்ச் டிஸ்ப்ளே, 3 ஜி.பி ரேம், ஆண்ட்ராய்டு 6.0, 3000 mAh பேட்டரி, 32 ஜி.பி நினைவகம், டூயல் சிம் வசதி, கால் பேசிக்கொண்டிருக்கும்போதே டெக்ஸ்ட் (Text), இமேஜ் மற்றும் ஃபைல்களை அனுப்பக்கூடிய ‘ரிச் கம்யூனிகேஷன் சர்வீஸ்’ ஆகியவற்றைக் கொண்டுள்ளது ரிலையன்ஸ் F1s.

கேமராவைப் பொறுத்தவரை, இருபக்கமும் ஃபிளாஷ் இருக்கிறது. பின்பக்கம் 16 எம்.பி, முன்பக்கம் 5 எம்.பி கேமராவைக் கொண்டுள்ளது. டூயல் சிம் வசதி இருந்தாலும், ஒரே நேரத்தில் இரண்டிலும் 4G வசதியை பயன்படுத்த முடியாது. ஒரு சிம்மில் 4G-யும் இன்னொன்றில் 2G-யும் பயன்படுத்தலாம்.

இதில் இருப்பது ‘ஹைப்ரீட் சிம் ஸ்லாட்’ என்பதால், மெமரி கார்டு போட வேண்டுமானால், ஒரு சிம் மட்டுமே பயன்படுத்த முடியும். ஒரு மணி நேரத்தில் 60% வரை விரைவாக சார்ஜ் செய்யக்கூடிய யு.எஸ்.பி டைப்-c போர்டு இருக்கிறது.

இதனை ரிலையன்ஸின் இணையதளமான    Ajio-வில் மட்டுமே வாங்க முடியும். பிளாக், கோல்டு, க்ரே என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

ப்ளஸ்:

* வசதிகள் மற்றும் பெர்ஃபாமன்ஸ்.

மைனஸ்:

* ஒரே நேரத்தில் இரு 4G சிம்களை பயன்படுத்த முடியாது. மேலும், ஹைப்ரீட் ஸ்லாட் கொண்டுள்ளது.

* சிறப்பம்சங்கள் குறைவு என்பதால், விலை அதிகம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கேட்ஜெட்!

அசூஸ் ஜென்ஃபோன் கோ 4.5(Asus Zenfone Go 4.5)

விலை:

ரூ.6,999 முதல் கிடைக்கிறது.

புதிய பட்ஜெட் போனாக மார்க்கெட்டில், ஜென்ஃபோன் கோ 4.5-ஐக் களமிறக்கியுள்ளது அசூஸ் நிறுவனம்.

4.5 இன்ச் டிஸ்ப்ளே, 1GHz குவாட்கோர் பிராசஸர், ஆண்ட்ராய்டு 6.0, 1 ஜி.பி ரேம், 8 ஜி.பி நினைவகம், 2070mAh ரிமூவல் பேட்டரி, டூயல் சிம் வசதி ஆகியவற்றைக் கொண்டுள்ளது ஜென்ஃபோன் கோ.

டூயல் சிம் என்றாலும், ஒரு நேரத்தில் ஒரு சிம்மில் மட்டுமே 4G வசதியை பயன்படுத்த முடியும். இன்னொரு சிம்மில் 2Gதான். கேமராவைப் பொறுத்தவரை, திறன் குறைவுதான். 8 எம்.பி பின்பக்க கேமரா, 2 எம்.பி முன்பக்க கேமரா மட்டுமே கொண்டிருப்பது ஏமாற்றம். வடிவமைப்பைப் பொறுத்தவரை, மெட்டாலிக் ஹேர் பினிஷ் கொண்டிருக்கிறது. நான்கு நிறங்களில் கிடைக்கிறது.

இதில் வால்யூம் பட்டன்கள் பக்கவாட்டில் இல்லாமல், பின்பக்கத்தில் இருக்கின்றன. 8 ஜி.பி மட்டுமே இன்டர்னல் மெமரி இருக்கிறது. மெமரி கார்டு மூலம் 128 ஜி.பி அளவுக்கு நீட்டித்துக்கொள்ள முடியும். அதேபோல, கூகுள் டிரைவில் 100 ஜி.பி அளவுக்கான இடத்தை இரண்டு வருடங்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது அசூஸ்.

ப்ளஸ்:


* போனின் வடிவமைப்பு

மைனஸ்:

* இந்த விலை உடைய போனுக்கு உரிய சிறப்பம்சங்கள் மிகவும் குறைவு.

* கேமரா, நினைவகம், ரேம் போன்றவற்றை இன்னும் மேம்படுத்தியிருக்கலாம்.