Published:Updated:

கேட்ஜெட்!

கேட்ஜெட்!
பிரீமியம் ஸ்டோரி
கேட்ஜெட்!

GADGETSஞா.சுதாகர்

கேட்ஜெட்!

GADGETSஞா.சுதாகர்

Published:Updated:
கேட்ஜெட்!
பிரீமியம் ஸ்டோரி
கேட்ஜெட்!
கேட்ஜெட்!

ஆப்பிள் மேக்புக் ப்ரோ 2016 - 13 இன்ச் (Apple MacBook Pro 2016 - 13 inch)

விலை:
13 இன்ச் டச் பேட் இல்லாத வகை: ரூ.1,29,900

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

13 இன்ச் டச் பேட் உள்ள வகை (256 ஜி.பி மெமரி): ரூ.1,55,900

13 இன்ச் டச் பேட் உள்ள வகை (512 ஜி.பி மெமரி): ரூ.1,72,900

ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட லேப்டாப்தான் மேக்புக் ப்ரோ 2016. இது 13 இன்ச் மற்றும் 15 இன்ச் டிஸ்ப்ளே என இரண்டு அளவுகளில் கிடைக்கின்றன. இரண்டு வகைகளிலும் டச் பேட் மற்றும் டச் ஐ.டி சென்சார் இருப்பது மற்றும் இல்லாமல் இருப்பது, 256 ஜி.பி மெமரி, 512 ஜி.பி மெமரி இருப்பது என நான்கு வகைகளில் கிடைக்கின்றன. இப்படி மொத்தம் ஆறு வித்தியாசங்களில்  மேக்புக் ப்ரோ கிடைக்கின்றன. இவற்றைப் பொறுத்து விலையும் ஒவ்வொன்றுக்கும் இடையே  மாறுபடுகிறது.

13 இன்ச் மற்றும் டச்பேட் கொண்ட வகையைப் பொறுத்தவரை, 13.3 இன்ச் ஐ.பி.எஸ் டெக்னாலஜி கொண்ட டிஸ்ப்ளே, 2.9GHz டூயல் கோர், இன்டெல் i5 பிராஸசர், 256 மற்றும் 512 ஜி.பி மெமரி, 8 ஜி.பி ரேம், இன்டெல் ஐரிஸ் கிராபிக்ஸ் 550, நான்கு யு.எஸ்.பி-C போர்ட்ஸ், டச்பேட் மற்றும் டச் சென்சார், 720p ஃபேஸ்டைம் HD கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இதன் குறிப்பிடத்தகுந்த அம்சம், டச்பேட்தான். நமது கீ-போர்டில் இருக்கும் ஃபங்ஷனல் பட்டன்களுக்குப் பதிலாக இதனைச் சேர்த்துள்ளது ஆப்பிள். இதன் மூலம் டிராக் பேட் உதவியின்றி ஆப்ஸ்களை இயக்க முடிகிறது. வால்யூம், டிஸ்ப்ளே வெளிச்சம் உள்ளிட்ட சிஸ்டம் கன்ட்ரோல், சாட்டிங்கில் இமோஜிக்கள், F1 முதல் F12 வரையிலான ஃபங்ஷன் பட்டன்கள், ஃபேஸ் டைம் அழைப்புகளை நிர்வகிப்பது போன்ற விஷயங்களைச் செய்யலாம். இந்த டச் பேட் இல்லாத மேக்புக்கும் கிடைக்கிறது.

டிசைன் மற்றும் வடிவமைப்பைப் பொறுத்தவரை, ஆப்பிளின் கைவண்ணம் தெரிகிறது. கீ-போர்டின் பட்டர் ஃப்ளை மெக்கானிசம், இரண்டு மடங்கு பெரிதான டிராக் பேட் ஆகியவை பயன்படுத்த எளிதாக இருக்கின்றன.

ப்ளஸ்:

*மிகவும் திறன்மிக்க டிஸ்ப்ளே மற்றும் அதன் தரம்.

*மெலிதான மற்றும் அழகான டிசைன்.

*பயன்படுத்த எளிதான டச் பேட் மற்றும் டிராக் பேட்.

மைனஸ்:

*டச் பேட் இல்லாத வகையை விட, அது இருக்கிற வகையின் விலை அதிகம்.

*நாம் அதிகம் பயன்படுத்தும் மெமரி கார்டு ஸ்லாட் இதில் இல்லை.

கேட்ஜெட்!

லெனோவா K6 நோட்  (Lenovo K6 Note

விலை :

3 ஜி.பி ரேம்/32 ஜி.பி மெமரி: ரூ.13,999

4 ஜி.பி ரேம்/64 ஜி.பி மெமரி: ரூ.15,499

K6 பவரைத் தொடர்ந்து, அறிமுகம் செய்யப்பட்ட போன்தான் லெனோவா K6 நோட். வடிவமைப்பு மற்றும் தோற்றத்தில் அதைப்போலவே தோற்றம் அளிக்கிறது. 5.5 இன்ச் டிஸ்ப்ளே, 1.4 GHz குவால்காம் ஸ்னாப் டிராகன் ஆக்டோகோர் பிராசஸர், 4000 mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ, 3 ஜி.பி மற்றும் 4 ஜி.பி ரேம், 32/64 ஜி.பி மெமரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது லெனோவா K6 நோட்.

கெபாசிட்டிவ் பட்டன்களுக்கு இதில் பேக்லைட் கிடையாது. டூயல் சிம் என்றாலும், ஹைப்ரிட் ஸ்லாட் என்பதால், மெமரி கார்டு பயன்படுத்துவதும் கஷ்டம்தான். முன்பக்க 8 எம்.பி கேமரா மற்றும் பின்பக்கம் 16 எம்.பி திறன்கொண்ட கேமராக்களைக் கொண்டுள்ளது. இதன் ஃபெர்பார்மன்ஸ் கொஞ்சம் சுமார்தான். விர்ச்சுவல் ரியாலிட்டி அனுபவத்துக்கான தியேட்டர் மேக்ஸ் 3.0 டெக்னாலஜியும் சப்போர்ட் செய்கிறது நோட் K6. ஆனால், இதனைப் பயன்படுத்த தனியாக VR ஹெட்செட் வாங்க வேண்டும். 4000 mAh பேட்டரி திறன் என்றாலும், சார்ஜ் ஏறுவதில் சாதாரண வேகம்தான். டிசைன் மற்றும் வடிவமைப்பில் புதுமைகள் எதுவும் இல்லை.

3 ஜி.பி ரேம்/32 ஜி.பி மெமரி மற்றும் 4 ஜி.பி ரேம்/64 ஜி.பி மெமரி என இரு வகைகளில் கிடைக்கின்றன.  கோல்ட், சில்வர், டார்க் க்ரே என மூன்று நிறங்களில் கிடைக்கின்றன. இதனை ஆஃப் லைன் மார்க்கெட்டில் மட்டுமே களமிறக்க முடிவுசெய்துள்ளது லெனோவா. எனவே, ஆன்லைனில் கிடைக்காது.

ப்ளஸ்:

போன் பில்ட் குவாலிட்டி. 

போனின் பெர்ஃபார்மன்ஸ். 

ஸ்பீக்கர்களின் திறன் மற்றும் செயல்பாடு.

மைனஸ்:

டிஸ்ப்ளே பாதுகாப்பு அம்சங்கள் இல்லை. 

கேமரா திறனை மேம்படுத்தியிருக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism