Published:Updated:

கேட்ஜெட்!

கேட்ஜெட்!
பிரீமியம் ஸ்டோரி
News
கேட்ஜெட்!

GADGETSஞா.சுதாகர்

கேட்ஜெட்!

லெனோவா P2  (Lenovo P2)

P2 என்னும் புதிய போனை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது லெனோவா. ஒரு செல்போனில் அடிப்படையாக இருக்கவேண்டிய அத்தனை அம்சங்களும் இதில் உள்ளன.

வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் இல்லை என்றாலும் கூட, மெட்டல்பாடி கொண்டு டிசைன் செய்யப்பட்டுள்ளதால், பிரீமியம் போனுக்கான தோற்றம் இருக்கிறது. கேமராவைப் பொறுத்தவரை, பின்பக்கம் 13 எம்.பி மற்றும் முன்பக்கம் 5 எம்.பி கேமராவைக் கொண்டுள்ளது.

இந்த போனின் சிறப்பம்சம், இதன் பேட்டரி திறன்தான். 5100 mAh பேட்டரி என்பதால், சார்ஜிங் பற்றிய கவலை வேண்டாம். அத்துடன் 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே, 10 மணி நேரம் வரை தாங்கும் அளவுக்கு பேட்டரி சார்ஜ் ஆகிவிடும் என்கிறது லெனோவா. பேட்டரி திறன் அதிகம்  என்றாலும், போனின் எடையும் அதிகமே (177 கிராம்).

ஃபிங்கர் பிரின்ட் சென்சார் துல்லியமாக வேலை செய்கிறது. பேட்டரி குறைவாக இருக்கும் நேரங்களில் கைகொடுக்க அல்ட்ரா பவர் சேவிங் மோட் வசதி இருக்கிறது. டூயல் சிம் வசதி என்றாலும், இதில் இருப்பது ஹைப்ரிட் சிம் ஸ்லாட். பெர்ஃபாமன்ஸைப் பொறுத்தவரை, எந்தவித தடங்கல்களும் இன்றி சிறப்பாக இயங்குகிறது P2. ஷாம்பெயின் கோல்ட், கிராபைட் க்ரே என இரண்டு நிறங்களில் கிடைக்கும் இது, தற்போது ஃப்ளிப்கார்ட்டில் மட்டுமே கிடைக்கிறது.

ப்ளஸ்:
 
* அதிகத் திறன் வாய்ந்த பேட்டரி மற்றும் குயிக் சார்ஜிங் வசதி.

* ரேம் மற்றும் பெர்ஃபாமன்ஸ்.

* விரைந்து செயல்படும் ஃபிங்கர் பிரின்ட் ஸ்கேனர்.

மைனஸ்:

* ஹைப்ரிட் சிம் ஸ்லாட்.

* போனுடன் வரும், ஹெட்போனின் தரம்.

விலை:


* 3 ஜி.பி மாடல்: ரூ 16,999

* 4 ஜி.பி மாடல்: ரூ 17,999

கேட்ஜெட்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நூபியா N1 (Nubia N1)

திறன்மிகுந்த பேட்டரி மற்றும் கேமராவுடன் களமிறங்கிய பட்ஜெட் போன் நூபியா N1. டூயல் சிம் வசதி, 5.5 இன்ச் டிஸ்ப்ளே, 3 ஜி.பி ரேம், 32 ஜி.பி நினைவகம், ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ, 5000mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இதன் சிறப்பம்சம், பேட்டரி மற்றும் கேமரா ஆகிய இரண்டும்தான். பேட்டரியைப் பொறுத்தமட்டில், 5000mAh திறன்கொண்டது என்பதால், சாதாரணமாகப் பயன்படுத்துபவர்களுக்கு மூன்று நாட்கள் வரை தாங்கும் என்கிறது நூபியா. கேமராவைப் பொறுத்தவரை, முன்பக்கம் மற்றும் பின்பக்கம் என இருபக்கமும் 13 எம்.பி திறன் கொண்ட கேமராக்களைக் கொண்டுள்ளது.

அலுமினியம் ஃபினிஷ் கொண்ட மெட்டல் பாடி டிசைன் என்றாலும், இதன் டிசைன் முழுக்க ஏற்கெனவே இருக்கும் போன்களின் வடிவமைப்பைப் போலவே உள்ளது. சிவப்பு நிறத்தில் மின்னும் ஹோம் பட்டனுடன், முன்பக்க டிசைன் அழகாக இருக்கிறது. நமது ஆப்ஸ்களை ஸ்ப்ளிட் ஸ்க்ரீன் வசதி மூலம், இரு திரைகளாகப் பிரித்துப் பயன்படுத்தும் வசதி இதில் இருக்கிறது. இதனால் ஒரே நேரத்தில் இரு ஆப்ஸ்களை நம்மால் இயக்க முடியும். ஹைப்ரிட் ஸ்லாட் கொண்ட போன்களின் வரிசையில் இதுவும் ஒன்று.

அதிக வெளிச்சம், துல்லியம் காரணமாக டிஸ்ப்ளே திறன் பயன்படுத்த அருமையாக இருக்கிறது. இவற்றைத் தவிர, இந்த பட்ஜெட் போன்களில் இருக்கவேண்டிய, எந்த சிறப்பம்சங்களும் இதில் இல்லை. நீண்ட நேர பேட்டரி திறன் கொண்டவர்களுக்கு மட்டுமே நூபியா நல்ல சாய்ஸ்.

ப்ளஸ்:

* 5000mAh திறன் கொண்ட பேட்டரி.

* கேமரா மற்றும் அதன் செயல்பாடு.

விலை:

* ரூ.11,999 முதல் கிடைக்கிறது.