Published:Updated:

கேட்ஜெட்!

கேட்ஜெட்!
பிரீமியம் ஸ்டோரி
கேட்ஜெட்!

GADGETSஞா.சுதாகர்

கேட்ஜெட்!

GADGETSஞா.சுதாகர்

Published:Updated:
கேட்ஜெட்!
பிரீமியம் ஸ்டோரி
கேட்ஜெட்!
கேட்ஜெட்!

சாம்சங் கேலக்ஸி C9 ப்ரோ (Samsung Galaxy C9 Pro)

விலை : ரூ.36,900 முதல்.

6 ஜி.பி ரேம் என்ற ஹைலைட்டுடன் புதிய போனாக, கேலக்ஸி C9 ப்ரோவை இந்தியச் சந்தைக்குக் கொண்டுவந்துள்ளது சாம்சங் நிறுவனம்.

6 இன்ச் சூப்பர் அமோலெட் (AMOLED) டிஸ்ப்ளே, 6 ஜி.பி ரேம், 64 ஜி.பி நினைவகம், 1.9 GHz ஆக்டாகோர் பிராஸசர், 4000 mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ OS, யு.எஸ்.பி- C போர்ட், டூயல் சிம் வசதி என எல்லா ஏரியாவிலும் சிக்ஸர் அடிக்கிறது இந்த C9 ப்ரோ.

கேட்ஜெட்!

கேமராவைப் பொறுத்தவரை, இருபக்கமும் 16 எம்.பி கேமராக்கள் இருக்கின்றன. இதன் நினைவகம் 64 ஜி.பி திறன் கொண்டது. இதனை மெமரி கார்டு மூலம் 256 ஜி.பி வரை நீட்டித்துக்கொள்ளலாம். வடிவமைப்பைப் பொறுத்தவரை, முழு மெட்டாலிக் பாடியுடன், ப்ரீமியம் போனுக்கான ஸ்டைலுடன் இருக்கிறது. 6 ஜி.பி ரேம் என்பதால், மல்டிடாஸ்க்கிங் மற்றும் பெர்பார்மன்ஸில் குறை இருக்காது என்கிறது சாம்சங். 4000 mAh பேட்டரி என்பதுடன், ஃபாஸ்ட் சார்ஜிங் செய்யும் ஆப்ஷனும் என்பதால், பேட்டரி பற்றியும் கவலைப்பட வேண்டாம்.

கறுப்பு மற்றும் கோல்ட் என இரு நிறங்களில் கிடைக்கிறது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு ஜனவரி 27-ம் தேதி முதல் தொடங்கி இருக்கிறது. பிப்ரவரி மாதத்தின் பாதியில் இருந்து ரீடெய்ல் ஸ்டோர்களிலும் கிடைக்கும்.

ப்ளஸ்:

 *  6 ஜி.பி ரேம் மற்றும் 64 ஜி.பி நினைவகம்.

 *  டூயல் ஃப்ளாஷ் மற்றும் 16 எம்.பி கொண்ட பின்பக்க கேமரா.

மைனஸ்:


 * முன்பக்க கேமராவில் ஃப்ளாஷ் இல்லை.

கேட்ஜெட்!

ரெட்மி நோட் 4 (Redmi Note 4)

விலை:

   *  2 ஜி.பி ரேம்/32 ஜி.பி மெமரி  ரூ.9,999

  
*  3 ஜி.பி ரேம்/32 ஜி.பி மெமரி ரூ.10,999

  
*  4 ஜி.பி ரேம்/64 ஜி.பி மெமரி  ரூ.12,999 முதல் கிடைக்கிறது.

ந்தியாவின் மிட்ரேஞ்ச் மொபைல் மார்க்கெட்டில் குறைவான விலை, அதிக சிறப்பம்சங்கள் என்ற காம்போவில் வெளிவந்து ஹிட் அடித்த, ஜியோமி ரெட்மி நோட் வரிசையில் அடுத்ததாகக் களமிறங்க உள்ளது ரெட்மி நோட் 4.

5.5 முழு ஹெச்.டி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 625, ஆக்டாகோர் 2.0 GHz பிராஸசர், 2/3/4 ஜி.பி ரேம், 32 மற்றும் 64 ஜி.பி அளவுடைய நினைவகம், ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ, MIUI 8, 4G டூயல்சிம் வசதி, 4100 mAh திறனுடைய பேட்டரி ஆகிய வசதிகளைக் கொண்டுள்ளது ரெட்மி நோட் 4.

2 ஜி.பி ரேம்/32 ஜி.பி மெமரி, 3 ஜி.பி ரேம்/32 ஜி.பி மெமரி மற்றும் 4 ஜி.பி ரேம்/64 ஜி.பி மெமரி என மொத்தம் மூன்று வித்தியாசமான வகைகளில்  கிடைக்கிறது நோட் 4. மெமரி கார்டு மூலம் இதன் மெமரியை 128 ஜி.பி வரை இதில் நீட்டித்துக்கொள்ள முடியும். ஆனால், டூயல் சிம் அல்லது மெமரி கார்டு என ஒன்றை மட்டுமே டிக் செய்ய முடியும்.

வடிவமைப்பினைப் பொறுத்தவரை, மெட்டாலிக் பாடியுடன், தனது நோட் 3 போலவே இருக்கிறது. பின்பக்கம் 13 எம்.பி மற்றும் முன்பக்கம் 5 எம்.பி கேமராவைக் கொண்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 625 பிராஸசர் மற்றும் 4100 mAh பேட்டரி காம்போவினால், மின்சக்தி விரைவில் குறைவதில்லை. MIUI 8 இன்டர்ஃபேஸ் நிறைய சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. இதன் மூலம் ஒரே போனில் இரண்டு புரொபைல்களை உருவாக்க முடியும். ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற ஆப்ஸ்களை, ஒரே போனில் இரண்டாகப் பிரித்து, இருவேறு கணக்குகளை நிர்வகிக்க முடியும்.

போனில் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் ப்ரீ-லோடட் ஆப்ஸ்களின் எண்ணிக்கை குறைத்திருக்க லாம். சரியான விலையில், சிறப்பம்சங்களைக் குறையாமல் பெற விரும்புபவர்களுக்கு ரெட்மி நோட் 4 நல்ல சாய்ஸ்.

ப்ளஸ்:

  *   பில்ட் குவாலிட்டி மற்றும் டிசைன்.

  *   பேட்டரி திறன் மற்றும் செயல்பாடு.

  *   பிராஸசர் பெர்ஃபாமன்ஸ்.

மைனஸ்:


  *   ஹைப்ரிட் சிம் ஸ்லாட்.

  *  ஃபாஸ்ட் சார்ஜிங் செய்யும் வசதி இல்லை.