விவோ V5 ப்ளஸ் (Vivo V5 Plus)

நன்கு செல்ஃபி எடுக்கக்கூடிய எக்ஸ்பர்ட் கேமராக்கள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் வரிசையில் புதிய, செம கெத்து என்ட்ரியாக வந்திருக்கிறது விவோ V5 ப்ளஸ்.

5.5 இன்ச் டிஸ்ப்ளே, 2.0GHz ஆக்டாகோர் பிராசஸர், 4 ஜி.பி ரேம், 64 ஜி.பி நினைவகம், ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ, 3055mAh பேட்டரி திறன், டூயல் சிம் வசதி, கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு என காம்பினேஷனே கலக்கலாக இருக்கிறது இந்த விவோ V5 ப்ளஸில்.

செல்ஃபி எக்ஸ்பர்ட் என்ற பெயருக்கு நியாயம் செய்யும் வகையில், போனில் இரண்டு முன்பக்க கேமராக்கள் இருக்கின்றன. 20 எம்பி மற்றும் 8 எம்பி என டூயல் கேமராக்கள் உங்கள் செல்ஃபி தரத்துக்கு கேரன்டி தருகின்றன. பின்பக்கம் 16 எம்.பி திறன்கொண்ட கேமரா இருக்கிறது. ஃபிங்கர்பிரின்ட் சென்சார் ஹோம் பட்டனில் இடம்பெற்றுள்ளது.

வடிவமைப்பைப் பொறுத்தவரை, பிரீமியம் போனுக்கான டிசைனைக் கொண்டிருக்கிறது. அதுவும் ஐபோன் 7-னின் ஒன்றுவிட்ட சித்தி பிள்ளைப் போல இருக்கிறது இந்த விவோ V5. இதில் இன்பில்ட்டாகவே கூகுள் டுயோ (Duo), ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற ஆப்ஸ்கள் இருக்கின்றன. எனவே, கூடுதலான ஆப்ஸ்களை டவுன்லோடு செய்யவேண்டிய தேவை குறைவே. V5 ப்ளஸ் கோல்ட் நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது.

ப்ளஸ்:

* பிரீமியம் போனுக்கான வடிவமைப்பு.

* 4 ஜி.பி ரேம் மற்றும் பெர்ஃபாமன்ஸ்.

* முன்பக்கத்தில் இருக்கும் டூயல் கேமராக்கள்.

விலை:

* ரூ.27,980 முதல் கிடைக்கிறது.

லெனோவா பேப் 2 ப்ரோ (Lenovo Phab 2 Pro)

உலகின் முதல் கூகுள் டேங்கோ ஸ்மார்ட்போன் என்ற அங்கீகாரத்துடன் சந்தைக்கு வந்துள்ளது லெனோவா பேப் 2 ப்ரோ.

6.4 இன்ச் டிஸ்ப்ளே, 1.8GHz ஆக்டாகோர் பிராசஸர், 4 ஜி.பி ரேம், 64 ஜி.பி நினைவகம், ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ, 4050 mAh பேட்டரி திறன் என எல்லாவற்றிலும் ஓகே சொல்ல வைக்கிறது பேப் 2 ப்ரோ.

8 எம்.பி முன்பக்க கேமரா, டூயல்டோன் ஃப்ளாஷ் உடன் கூடிய 16 எம்.பி பின்பக்க கேமரா ஆகியவை உடனடியாக நம் கவனத்தை ஈர்க்கின்றன.

இந்த போனின் சிறப்பம்சமே, கூகுளின் முதல் டேங்கோ போன் என்பதுதான். கூகுளின் ஆகுமென்டட் ரியாலிட்டி சேவைதான் இந்த டேங்கோ. போக்கிமான் கோ-வில் எப்படி இல்லாத பிக்காச்சூவை, உங்கள் மொபைல் திரையிலும், நிஜத்திலும் இணைத்துக் காட்டுகிறதோ, அதைப் போலவே இந்த போன் மூலம் நாம் சாதாரணமாகப் பார்க்கும் விஷயங்களைக்கூட ஆகுமென்டட் ரியாலிட்டியாக (AR) மாற்ற முடியும். இதற்காக சில இன்பில்ட் ஆப்ஸ்களைக் கொடுத்துள்ளது லெனோவா. அதற்கு மேலும் தேவையான ஏஆர் ஆப்ஸ்களை கூகுள் ப்ளே ஸ்டோர் மூலமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும். இதற்கான பிரத்யேக சென்சார்கள் இதில் உள்ளன.

டிஸ்ப்ளே சாதாரண ஸ்மார்ட்போன்களில் இருந்து தனித்துத் தெரியும்படி பெரிதாக இருக்கிறது. மல்ட்டி மீடியா பிரியர்களுக்கு இது ஓகே. மற்றவர்களுக்கு, அளவில் மிகப் பெரிதாக இருப்பதுபோல இருக்கிறது. இதனால் எடையும் அதிகமாக இருக்கிறது.

இந்தியாவில் ஷாம்பெயின் கோல்ட் நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது. இதனை ஃப்ளிப்கார்ட் இணைய தளத்தில் மட்டுமே வாங்க முடியும்.

ப்ளஸ்:

* 6.4 இன்ச் டிஸ்ப்ளே

* கூகுள் டேங்கோ AR வசதி.

மைனஸ்:

* ஹைப்ரிட் சிம் ஸ்லாட்.

* போனின் எடை அதிகம்.

* AR வசதியை பயன்படுத்தும்போது, பேட்டரி திறன் வெகுவாகக் குறைகிறது.

விலை:

* ரூ.29,990 முதல் கிடைக்கிறது.