பிரீமியம் ஸ்டோரி
கேட்ஜெட்!

கூல்பேட் கூல் 1 (Coolpad Cool 1)

லீஈகோ (LeEco) மற்றும் கூல்பேட் கூட்டணியின் நடுத்தரமான விலைகொண்ட செல்போனாக வெளிவந்துள்ளது கூல்பேட் கூல் 1.

5.5 இன்ச் டிஸ்ப்ளே, 1.8GHz ஆக்டாகோர் பிராசஸர், 4 ஜி.பி ரேம், 32 ஜி.பி நினைவகம் ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ, 4000 mAh பேட்டரி, USB டைப் C போர்ட், டூயல் சிம் வசதி ஆகியவற்றைக் கொண்டுள்ளது கூல் 1.

இதன் முக்கியமான குறைபாடுகளில் ஒன்று, இதன் மெமரிதான். காரணம், இதன் 32 ஜி.பி நினைவகத்தை மெமரி கார்டு மூலம் நீட்டித்துக்கொள்ள முடியாது. டூயல் கேமராக்களோடு வரும் போன்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகின்றன. அந்த வரிசையில் இதுவும் இணைந்துள்ளது. கேமராவைப் பொறுத்தவரை, டூயல் எல்.இ.டி ஃப்ளாஷ் உடன் கூடிய, டூயல் 13 எம்.பி கேமரா, 8 எம்.பி முன்பக்க கேமராவைக் கொண்டுள்ளது.

கேட்ஜெட்!

4 ஜி.பி ரேம் என்பதால், பெர்ஃபாமன்ஸ், மல்ட்டி டாஸ்க்கிங் இரண்டிலும் ஓகே. பிரீமியம் போனுக்கான டிசைனில் இருக்கிறது இதன் ஸ்டைல். 3 ஜி.பி ரேம்/ 32 ஜி.பி மெமரி, 4 ஜி.பி ரேம்/ 32 ஜி.பி மெமரி என இரண்டு வேரியன்ட்களை அறிமுகம் செய்துள்ளது கூல்பேட். இதில் 3 ஜி.பி ரேம் வெர்ஷனை ரீடெயில் கடைகளிலும், 4 ஜி.பி வெர்ஷனை அமேசான் இணையத்திலும் தான் வாங்க முடியும்.

ப்ளஸ்:


* போனின் பில்ட் குவாலிட்டி

* பேட்டரி திறன்

மைனஸ்:

* 32 ஜி.பி.க்கு மேல் மெமரியை நீட்டித்துக்கொள்ள முடியாது

* இமேஜ் குவாலிட்டி

விலை: 

* ரூ.13,999 முதல் கிடைக்கிறது.

கேட்ஜெட்!

சாம்சங் கர்வ்ட் கேமிங் மானிட்டர் LC24FG70  (Samsung Curved Gaming Monitor LC24FG70)

இந்தியாவின் முதல் வளைந்த கேமிங் மானிட்டர், உலகின் அதிகம் வளைந்த கேமிங் மானிட்டர் என்றெல்லாம் சொல்லி, இந்த புதிய மானிட்டரை அறிமுகம் செய்துள்ளது சாம்சங் நிறுவனம். முழுக்க முழுக்க விளையாட்டுப்  பிரியர்களை மட்டுமே மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த மானிட்டர். 24 இன்ச் மற்றும் 27 இன்ச் டிஸ்ப்ளே என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது.

24 இன்ச் டிஸ்ப்ளே, 1 ms ரெஸ்பான்ஸ் டைம், 144 Hz ரெஃப்ரெஷ் ரேட், 3000:1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ, 1800 மி.மீ ரேடியஸ், குவான்டம் டாட் டெக்னாலஜி, இரண்டு கீல்கள் கொண்ட ஸ்டாண்ட் என விளையாடுவதற்்காக ஃபுல் ஃபார்மில் இருக்கிறது இந்த மானிட்டர்.

கேட்ஜெட்!

குவான்டம் டாட் டெக்னாலஜியினால் டிஸ்ப்ளே நிறம் மற்றும் துல்லியம் அருமை . நீண்ட நேரம் பார்த்தாலும்கூட கண்களுக்கு அயர்ச்சி தராத தன்மை ஆகியவை சிறப்பு. நமக்கு ஏற்ற கோணங்களில் அமைத்துக் கொள்ளவும், போர்ட்ரெய்ட் மற்றும் வெர்ட்டிகல் என இரண்டு வடிவங்களிலும் மாற்றிடவும் உதவுகிறது ஆர்ம் ஸ்டாண்ட். ஆனால், சிறிய அதிர்வுகளுக்குக்கூட ஆடுவது இதன் மைனஸ்.

இதில் பில்ட் இன் ஸ்பீக்கர்கள் இல்லை என்பதால், இயர்போன் அல்லது எக்ஸ்டெர்னல் ஸ்பீக்கர்ஸ் நிச்சயம் அவசியம். யு.எஸ்.பி ஹப் கிடையாது.

ப்ளஸ்:

* ஸ்டைலிஷ் டிசைன்

* டிஸ்ப்ளே திறன் மற்றும் துல்லியம்

* எளிதான மெனு ஆப்ஷன்கள்

மைனஸ்:  விலை

விலை :

* LC24FG70 மாடல் - ரூ. 35,000

* LC27FG70 மாடல் - ரூ. 42,000 முதல் கிடைக்கிறது

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு