Published:Updated:

கேட்ஜெட்!

கேட்ஜெட்!
பிரீமியம் ஸ்டோரி
கேட்ஜெட்!

GADGETSஞா.சுதாகர்

கேட்ஜெட்!

GADGETSஞா.சுதாகர்

Published:Updated:
கேட்ஜெட்!
பிரீமியம் ஸ்டோரி
கேட்ஜெட்!
கேட்ஜெட்!

ஒப்போ A57 (Oppo A57)

கேமரா எக்ஸ்பர்ட் பிராண்டான ஒப்போவின் புது வரவு இந்த A57. ஒப்போவின் முந்தைய மாடலான F1-s போன்றே தோற்றம் அளிக்கும் மிட் ரேஞ்ச் ஸ்மார்ட் போனாக இருக்கிறது இந்த ஒப்போ A57.

5. 2 இன்ச் டிஸ்ப்ளே, ஆக்டாகோர் பிராசஸர், 3 ஜி.பி ரேம், 32 ஜி.பி நினைவகம், ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ, 2,900 mAh பேட்டரி, இரு  சிம் வசதி, ஃபிங்கர்பிரின்ட் சென்சார் என மிட் ரேஞ்ச் போனுக்கு ஏற்ற அம்சங்களோடு அருமையாக இருக்கிறது A57.

இந்த போன் ஒரு செல்ஃபி எக்ஸ்பர்ட் என்பதால், முன்பக்கம் 16 எம்.பி, பின்பக்கம் 13 எம்.பி கேமராவைக் கொண்டிருக்கிறது. குறைந்த வெளிச்சம் உள்ள இடங்களிலும் கேமரா பெர்ஃபாமன்ஸில் குறைவைக்கவில்லை இதன் கேமரா. போன் மெமரியை மெமரி கார்டு மூலம் 256 ஜி.பி வரை நீட்டித்துக்கொள்ள முடியும். இரு சிம் என்றாலும் ஹைப்ரிட் ஸ்லாட் போல மெமரி கார்டு அல்லது சிம் கார்டு என சாய்ஸ் தராமல், டூயல் சிம் + மெமரி கார்டு கூட்டணிக்குக் கைகொடுக்கிறது தனி டெடிகேட்டட் ஸ்லாட்.

கேட்ஜெட்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

F1 எஸ் போலவே பில்ட் குவாலிட்டி, டிசைன் ஆகியவை ஒரே மாதிரி இருக்கின்றன. குயிக் சார்ஜிங் செய்வதற்கான வசதி இதில் இல்லை என்றாலும்கூட, நாள் முழுவதும் தாக்குப்பிடிக்கும் அளவுக்கு இருக்கிறது இதன் பேட்டரி திறன். கோல்டு கலர் ஆப்ஷன் மட்டும்தான் இதில் உண்டு.

ப்ளஸ்:

* கேமரா பெர்ஃபாமன்ஸ்
* ஃபிங்கர்பிரின்ட் சென்சாரின் வேகம்
* மெமரி கார்டுக்கான டெடிகேட்டட் ஸ்லாட்

மைனஸ்:

* கெப்பாசிட்டிவ் பட்டன்களில் பேக் லைட் இல்லை.

விலை:

* ரூ.14,990 முதல் கிடைக்கிறது.

கேட்ஜெட்!

ஹூவாவே மீடியாபேட் M3 டேப்லட் (Huawei MediaPad M3)

ஹூவாவே நிறுவனத்தின் ஸ்டைலிஷ் டேப்லட்தான் இந்த மீடியாபேட் M3. 8.4 இன்ச் ஐ.பி.எஸ் டிஸ்ப்ளே, 4 ஜி.பி ரேம், 32 ஜி.பி மெமரி, ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ, டூயல் ஸ்பீக்கர்ஸ், 5100 mAh பேட்டரி, ஃபிங்கர்பிரின்ட் சென்சார் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது மீடியாபேட் M3.

முன்பக்கம் மற்றும் பின்பக்கம் இரண்டிலும் 8 எம்.பி திறன்கொண்ட கேமராக்களைக் கொண்டுள்ளது. வீடியோகாலிங் செய்யும்போது, முன்பக்க கேமராக்களின் தரம் முக்கியம்; எனவே, முன்பக்க கேமராத் திறனை அதிகரித்திருக்கலாம். டேப்லட்டின் ஒலித் தரத்தை மேம்படுத்த, ஹர்மன் கர்டோன் நிறுவனத்துடன் இணைந்திருக்கிறது ஹூவாவே. அதன் பலனாக தரமான ஒலி நம் காதுகளுக்கு வந்துசேர்கிறது. அதிக ஒலி அளவில்கூட, துல்லியமான இசையை வெளிப்படுத்துகின்றன இதன் ஸ்பீக்கர்கள்.

மல்ட்டி டாஸ்க்கிங், கேம்ஸ் என எதற்கும் சளைக்காமல் இதன் செயல்பாடுகள் நச்சென இருக்கின்றன. 8.4 இன்ச் டிஸ்ப்ளே பெரிதாகவும், பார்க்க வசதியாகயும் இருந்தாலும், அதனால் டேப்லட்டின் எடையும் அதிகரித்துவிடுகிறது. டேப்லட்டுக்கு கவர் போடாமலே, ஹேண்டில் செய்யும் அளவுக்குக் கைகளுக்குள் கச்சிதமாகப் பொருந்துகிறது.

ப்ளஸ்:


* ஸ்டைலிஷான டிசைன்
* டூயல் ஸ்பீக்கர்ஸ் மற்றும் சவுண்ட் குவாலிட்டி
* டிஸ்ப்ளே பெர்ஃபாமன்ஸ்

மைனஸ்:

* கேமராக்களின் திறனை இன்னும் மேம்படுத்தி இருக்கலாம்