Published:Updated:

கேட்ஜெட்!

கேட்ஜெட்!
பிரீமியம் ஸ்டோரி
கேட்ஜெட்!

GADGETSஞா.சுதாகர்

கேட்ஜெட்!

GADGETSஞா.சுதாகர்

Published:Updated:
கேட்ஜெட்!
பிரீமியம் ஸ்டோரி
கேட்ஜெட்!
கேட்ஜெட்!

கூல்பேட் நோட் 3S (Coolpad Note 3S)

நோட் சீரிஸில் தொடர்ந்து பட்ஜெட் மொபைல்களை வெளியிட்டுவரும் நிறுவனமான கூல்பேட், தற்போது புதிதாக நோட் 3S-ஐ அறிமுகம் செய்துள்ளது.

5.5 இன்ச் டிஸ்ப்ளே, 1.36GHz ஆக்டாகோர் பிராசஸர், 3 ஜி.பி ரேம், 32 ஜி.பி மெமரி, ஃபிங்கர் பிரின்ட் சென்சார், ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ, 2500mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது நோட் 3S.

டூயல் எட்ஜ் கர்வ்ட் கிளாஸ் டிஸ்ப்ளே, அலுமினியம் அலாய் சேசிஸ் ஆகியவற்றுடன் பிரீமியம் போனுக்கான கவர்ச்சியுடன் இருக்கிறது. 32 ஜி.பி மெமரியை, மெமரி கார்டு மூலம் நீட்டித்துக்கொள்ள முடியும். ஆனால், அதற்கு டூயல் சிம்மில் ஒன்றை நீங்கள் இழக்க வேண்டியிருக்கும். ஏனெனில், இதில் இருப்பது ஹைப்ரிட் சிம் ஸ்லாட்.

3 ஜி.பி ரேமுக்கேற்ப பெர்ஃபாமன்ஸ் ஓகே என்றுதான் சொல்லவேண்டும். பின்பக்கம் 13 எம்.பி மற்றும் முன்பக்கம் 5 எம்.பி கேமராவைக் கொண்டுள்ளது. அளவான வெளிச்சத்தில் தரமான புகைப்படங்களை எடுக்க முடிகிறது.

இதில் இருக்கும் இன்னொரு மைனஸ், இதன் பேட்டரி திறன். 2500mAh என்பது இந்த பட்ஜெட் போன்களில் குறைவு. கோல்டு மற்றும் வெள்ளை என இரு நிறங்களில் கிடைக்கிறது.

ப்ளஸ்:

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

* போனின் ஸ்டைல் மற்றும் டிசைன்

* கேமராவின் வேகம் மற்றும் செயல்பாடு

மைனஸ்:

* மிகவும் குறைவான திறன் கொண்ட பேட்டரி

* சிறப்பம்சங்கள் குறைவு

* ஹைப்ரிட் சிம் ஸ்லாட்

விலை:

* ரூ.9,999 முதல் கிடைக்கிறது

கேட்ஜெட்!

அசூஸ் ஜென்ஃபோன் 3S மேக்ஸ் (Asus ZenFone 3s Max)

அதிக திறனுள்ள பேட்டரி வரிசையில் இடம்பிடிக்கும் வகையில் புதிதாக ஜென்ஃபோன் 3S மேக்ஸைக் களமிறக்கியுள்ளது அசூஸ் நிறுவனம். 5.2 இன்ச் டிஸ்ப்ளே, 1.5GHz ஆக்டாகோர் பிராசஸர், 3 ஜி.பி ரேம், 32 ஜி.பி மெமரி, ஆண்ட்ராய்டு நௌகட், டூயல் சிம் வசதி, 5000mAh பேட்டரி, ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனர் என ஃபுல்ஃபாமில் இருக்கிறது இந்த போன்.

இந்த போனின் பெரும்பலமே இதன் பேட்டரி திறன் தான். அத்துடன் இந்த போன் மூலம் இன்னொரு போனுக்கு சார்ஜ் ஏற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் வசதியும்  இதில் இருக்கிறது. ஒடிஜி (OTG) கேபிள் உதவியுடன் இந்த போனையே நீங்கள் பவர்பேங்காகப் பயன்படுத்த முடியும். ஆனால், இதில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இல்லை.

டூயல் டோன் எல்இடி ஃப்ளாஷ் உடன் கூடிய 13 எம்.பி பின்பக்க கேமரா மற்றும் 8 எம்.பி முன்பக்க கேமரா ஆகியவை இதில் இருக்கின்றன. மெட்டல் பாடியுடன் வடிவமைப்பிலும், பில்ட் குவாலிட்டியிலும் நன்றாக இருக்கிறது. போனில் இன்பில்ட்டாகவே அதிகமான ஆப்ஸ்கள் இருக்கின்றன. இதனைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

சாண்ட் கோல்டு மற்றும் கறுப்பு என இரு நிறங்களில் கிடைக்கிறது. நௌகட் அப்டேட், நல்ல பில்ட் குவாலிட்டி மற்றும் ஹெவி பேட்டரியுடன் கூடிய போன் வேண்டும் என்பவர்கள் இதற்கு டிக் அடிக்கலாம்.

ப்ளஸ்:

* 5000 mAh திறன்கொண்ட பேட்டரி

* ஆண்ட்ராய்டு நௌகட் ஆபரேட்டிங் சிஸ்டம்

* ரிவர்ஸ் சார்ஜிங் வசதி

மைனஸ்:

* ஹைப்ரீட் சிம் ஸ்லாட்

* அதிகமான இன்பில்ட் ஆப்ஸ்கள்

* சராசரியான கேமரா பெர்ஃபாமன்ஸ்

விலை:

* ரூ.14,999 முதல் கிடைக்கிறது

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism