பிரீமியம் ஸ்டோரி

குல்லக் (Gullak)

ங்கள் வீட்டு வரவு செலவுகளை மட்டும் குறித்து வைத்துக்கொள்ளும் ஆப்பாக இல்லாமல், டிஜிட்டல் அசிஸ்டன்ட்டாகவே இருக்கிறது இந்த ஆப். உங்கள் மொபைல் இன்பாக்ஸில், போன் வாங்கியது முதல் இன்று வரை எக்கச்சக்கமாக மெசேஜ்கள் வந்துகொட்டியிருக்கும். வங்கி மெசேஜ்கள், ஷாப்பிங் மெசேஜ்கள், டிக்கெட் புக் செய்த மெசேஜ்கள் என உங்கள் இன்பாக்ஸ் முழுக்க நிரம்பியிருக்கும். அந்த தகவல்களைப் படித்து அதன் மூலமே உங்களது வரவு செலவு விவரங்களை நொடிப் பொழுதில் கணக்கிட்டுக் காட்டிவிடுகிறது இந்த ஆப்.  

கேட்ஜெட்!

உங்கள் எஸ்எம்எஸ்களைப் படித்து, உங்களின் வங்கிக் கணக்கு விவரங்கள், அவற்றில் இருக்கும் பணத்தின் மதிப்பு, மீதித் தொகை, உங்கள் வங்கிக் கணக்குகளில் இருக்கும் மொத்த இருப்புத்தொகை என அத்தனை விவரங்களையும் காட்டிவிடுகிறது.

உதாரணத்துக்கு, உங்களுக்கு சம்பளம் வந்துவிட்டது என்றால், உங்களுடைய சம்பளம் உங்களது கணக்கில் வரவாக வைக்கப்படும். ஒரு சினிமா டிக்கெட்டுக்கு ஆன்லைனில் புக் செய்தால், அந்த மெசேஜையும் படித்து அந்தத் தொகையை செலவாக உங்கள் கணக்கில் குறித்துக்கொள்ளும். ஏடிஎம்-ல் பணம் எடுத்தாலும் இதே மாதிரி செயல்படுகிறது. இதனால் உங்கள் வரவு செலவு விவரங்களை நீங்களே பதிவு செய்ய வேண்டிய அவசியம் இதில் இல்லை. இவற்றில் அடங்காத விஷயங்களை மட்டும் நீங்கள் குறித்துக்கொண்டால் போதுமானது.

வடிவமைப்பிலும், செயல்படும் விதத்திலும் அருமையாக இருக்கிறது இந்த ஆப். ஒரு மாதத்தில் அல்லது வாரத்தில் நீங்கள் செய்த செலவு, செலவு செய்த விதம் ஆகிய அனைத்தையும் இதன் மூலம் நீங்கள் எளிதாகப் பார்க்கலாம். இந்த வசதிகள் அனைத்துமே இந்த ஆப்பின் ப்ளஸ்.

இதுமட்டுமின்றி, பட்ஜெட் திட்டமிடுவது, எந்தெந்த விஷயங்களுக்கு எவ்வளவு செலவு செய்தோம் என அறிந்துகொள்வது, பில் தொகைகளைத் திட்டமிட்டு செலுத்துவது, கடைசிப் பரிவர்த்தனை விவரங்களைப் பார்ப்பது உள்ளிட்ட மற்ற ஆப்ஷன்களும் இதில் இருக்கின்றன.

எளிதான, அதே சமயம் ஸ்மார்ட்டான இந்த ஆப்,  பட்ஜெட் பிளானர் வேண்டுபவர்களுக்கு ஒரு நல்ல சாய்ஸ்.

கேட்ஜெட்!

ட்ரைகவுன்ட் (Tricount)

குழுவாக செலவு செய்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கக்கூடிய எளிதான ஆப்தான் இந்த ட்ரைகவுன்ட். சுற்றுலா செல்பவர்கள், ஒன்றாகத் தங்கியிருப்பவர்கள், ஏதேனும் திட்டமிட்ட செலவுகள் ஆகியவற்றின்போது, குழுவில் இருக்கும் அனைவருமே செலவு செய்வோம். ஆனால், யார் எவ்வளவு செலவு செய்தார்கள், யார், யாருக்கு  பணம் தர வேண்டும், மொத்தச் செலவு எவ்வளவு என எந்த விஷயமுமே நமக்கு தெரியாது; அல்லது சரியாகக் கணக்கிட மிகவும் கடினமாக இருக்கும். ‘அந்த வேலையை என்னிடம் விட்டுவிடுங்கள்’ எனச் சொல்கிறது இந்த ஆப்.

உதாரணமாக, மூன்று நண்பர்கள் ஒரு சுற்றுலா செல்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். போக்குவரத்து, தங்கும் விடுதிகள், உணவு என அனைத்துச் செலவுகளையும் மூவருமே செய்வார்கள். ஒவ்வொருவரும் ஒரு தொகையை செலவிடுவார்கள். ஒருவர் செய்யும் செலவு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும்.

ஆனால், அந்தப் பயணத்தின் இறுதியில் மூவருமே ஒரே தொகையை செலவு செய்ய வைப்பதுதான் இந்த ஆப்பின் பணி. யார் அதிகமாக செலவு செய்துள்ளார்களோ, அவருக்குக் குறைவாக செலவு செய்தவர் எவ்வளவு தரவேண்டும் என இந்த ஆப் சொல்லிவிடும். இந்த லாஜிக்தான் இந்த ஆப்பின் சக்சஸ் பாயின்ட்.

ஒரு குழுவில் 30 பேர் வரை இதில் சேர்க்க முடியும். அத்துடன் இந்த ஆப்பை, குழுவில் உள்ள அனைவருமே ஒரே நேரத்தில் பயன்படுத்தி, தங்கள் செலவு விவரங்களை இதில் பதிவு செய்யலாம். குழுவில் இருக்கும் மற்றவர்கள் செய்யும் செலவு விவரங்கள் தானாக உங்கள் போனில் சிங்க் ஆகிவிடும்.

கணினியிலும் இதனைப் பயன்படுத்தலாம். குழுவை உருவாக்குபவர் அந்த லிங்க்கை, நண்பருக்கு அதனைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். அந்த இணைப்பு மூலம் குழுவில் புதியவர்கள் இணைந்துகொள்ளலாம்.
பயன்படுத்த மிக எளிமையாக இருக்கிறது இந்த ஆப். திட்டமிட்டப் பணிகளை அல்லது பயணங்களை, நிறைவாக முடிப்பதற்கு இந்த ட்ரைகவுன்ட் கைகொடுக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு