Published:Updated:

கேட்ஜெட்!

கேட்ஜெட்!
பிரீமியம் ஸ்டோரி
கேட்ஜெட்!

GADGETSஞா.சுதாகர்

கேட்ஜெட்!

GADGETSஞா.சுதாகர்

Published:Updated:
கேட்ஜெட்!
பிரீமியம் ஸ்டோரி
கேட்ஜெட்!
கேட்ஜெட்!

ஜியோமி ரெட்மி 4A (Xiaomi Redmi 4A)

ரெட்மி சீரிஸ் மொபைல் போன்களால் மார்க்கெட்டில் ஏற்கெனவே ஹிட் அடித்த ஜியோமி, குறைந்த விலை கொண்ட ரெட்மி 4A என்கிற மாடலை புதிதாகக் களமிறக்கியுள்ளது.

5 இன்ச் டிஸ்ப்ளே, 1.4GHz பிராசஸர், 2 ஜி.பி ரேம், 16 ஜி.பி மெமரி, டூயல் சிம் வசதி, 3120 mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ எனக் குறைந்த பட்ஜெட்டில் நிறைவாக இருக்கிறது இந்த ரெட்மி 4A. ஜியோமியின் இன்னொரு ஹிட் மாடலான ரெட்மி ப்ரைமுக்கும் இதற்கும் 1,000 ரூபாய்தான் வித்தியாசம்.

இதன் வடிவமைப்பு, பாலி கார்பனேட் பாடியுடன், ரெட்மி 3S போலவே இருக்கிறது. பின்பக்கம் 13 எம்பி மற்றும் முன்பக்கம் 5 எம்பி கேமராவைக் கொண்டுள்ளது. 

டூயல் சிம் வசதி கொண்ட இதில் இருப்பது ஹைப்ரிட் ஸ்லாட். எனவே, மெமரியை நீட்டிக்க விரும்பினால், ஒரு சிம் மட்டுமே பயன்படுத்த முடியும். ஒரு சிம் மட்டுமே 4ஜி வசதி கொண்டுள்ளது. இன்னொரு சிம்மில் 2ஜி அழைப்புகள் மட்டும்தான்.
உங்கள் போனை ரிமோட் ஆக்கி, சில கேட்ஜெட்களை கன்ட்ரோல் செய்வதற்கான ஐஆர் பிளாஸ்டரும் இதில் உள்ளது. பட்ஜெட் கருதி, இதில் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் வைக்கப்படவில்லை. 2 ஜி.பி என்றாலும், ஹெவி பெர்ஃபாமன்ஸில் கொஞ்சம் பின்வாங்குகிறது. ஆனால், என்ட்ரி லெவல் ஆண்ட்ராய்டு பயனாளர் களுக்கு, சரியான பட்ஜெட்டில், சரியான சாய்ஸ் இந்த 4A. கோல்ட், ரோஸ் கோல்ட், டார்க் க்ரே என மொத்தம் மூன்று நிறங்களில் கிடைக்கிறது இந்த போன்.

ப்ளஸ்:

* குறைந்த விலை

* 4G வோல்டே வசதி மற்றும் டூயல் சிம்

* பேட்டரி திறன்

* டிஸ்ப்ளே செயல்பாடு

மைனஸ்:

* டூயல் சிம் ஸ்லாட்

* 16 ஜி.பி மெமரி என்றாலும், பயன்படுத்த முடிவது

* 10 ஜி.பி., க்கும் குறைவாகத்தான்

விலை:

 ரூ.5,999 முதல் கிடைக்கிறது.

கேட்ஜெட்!

ஒப்போ F3 ப்ளஸ் (Oppo F3 Plus)

டூயல் ஃப்ரன்ட் கேமரா வசதியுடன், ஒப்போ நிறுவனத்திலிருந்து வந்திருக்கும் மற்றுமொரு செல்ஃபி எக்ஸ்பெர்ட் மொபைல் இந்த F3 ப்ளஸ். 6 இன்ச் டிஸ்ப்ளே, 1.95GHz பிராசஸர், 4 ஜி.பி ரேம், ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ, 4000 mAh பேட்டரி, டூயல் சிம் வசதி, ஃபிங்கர் பிரின்ட் சென்சார் என கலக்கல் காம்போவாக இருக்கிறது ஒப்போ F3 ப்ளஸ்.

தனது வலிமையான ஏரியாவான கேமராவில் இந்தமுறை சில மாற்றங்களைச் செய்துள்ளது ஒப்போ. டூயல்டோன் எல்.இ.டி ஃப்ளாஷ் உடன் கூடிய 16 எம்.பி பின்பக்க கேமரா இடம்பெற்றுள்ளது. டூயல் ஃப்ரன்ட் கேமரா என்பதால், 16 எம்.பி மற்றும் 120 டிகிரி வைட் ஆங்கிளுடன் 8 எம்.பி கேமரா ஆகியவை முன்பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் தனியாகவும், குழுவாகவும் செல்ஃபி எடுக்க பக்காவாக இருக்கிறது F3 ப்ளஸ்.

டிஸ்ப்ளேயின் பாதுகாப்புக்காக, கொரில்லா கிளாஸ் 5 மற்றும் ஸ்டைலுக்காக 1.78 மி.மீ மட்டுமே இருக்கும் குறுகிய விளிம்புகள் என அழகாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அதேசமயம், பின்பக்க டிசைன் மொத்தமும் மற்ற ஒப்போ F சீரிஸ் போன்களைப் போன்றுதான் இருக்கிறது.

இதன் 64 ஜி.பி மெமரியை 256 ஜி.பி வரை, மெமரி கார்டு உதவியுடன் நீட்டித்துக் கொள்ளலாம். இதில் இருப்பது ஹைப்ரிட் ஸ்லாட்.

போனை விரைவாக சார்ஜ் செய்ய vocc பிளாஷ் மினி சார்ஜர், அடாப்டர் போனுடன் கிடைக்கும். இதன்  மூலம் 5 நிமிடங்களில் 2 மணி நேரம் அளவுக்குப் பேசுவதற்கு சார்ஜ் செய்துகொள்ள முடியும் என்கிறது ஒப்போ. மல்ட்டிடாஸ்க்கிங், பிரவுஸிங், வீடியோ என எல்லா பெர்ஃபாமன்ஸுக்கும் ஈடுதருகிறது. இந்த விலைக்கு இன்னும் கொஞ்சம் போனை மெருகேற்றி இருக்கலாம்.

ப்ளஸ்:

* ப்ரீமியம் டிசைன், பில்ட் குவாலிட்டி மற்றும் தரம்.

* டூயல் ஃப்ரன்ட் கேமரா.

* பேட்டரி திறன்.

மைனஸ்:

* ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோதான் இன்னும் உள்ளது.

விலை:


* ரூ.30,990 முதல் கிடைக்கிறது.