பிரீமியம் ஸ்டோரி

வாரந்தோறும் ஏதேனும் ஒரு பிராண்டில் இருந்து குறைந்தது ஒரு மொபைல் போனாவது புதிதாக சந்தைக்கு வந்துவிடுகிறது. இதனால் தற்போது புதிதாக மொபைல் வாங்க வேண்டுமென்றால் ஆப்ஷன்களுக்கு பிரச்னையே இல்லை. ஆனால், எதைத் தேர்வுசெய்வது என்பதில்தான் பலருக்கும் சிக்கல். அவர்களுக்குக் கைகொடுக்கவே இந்தக் கட்டுரை.

இன்றளவும் புதிய மொபைல் போன் என்றாலே பலரும் ஒதுக்கும் பட்ஜெட் தொகை 10,000 ரூபாய்தான். பத்தாயிரம் ரூபாய்க்கு குறைவான மொபைல்கள்தான் மார்க்கெட்டில் குபீர் ஹிட் அடிக்கின்றன. அப்படி நல்ல ரெவ்யூஸ் குவித்துவரும் மொபைல்களின் தொகுப்பு இங்கே...

கேட்ஜெட்!

மோட்டோ E3 பவர்

3500 mAh பேட்டரியுடன் வந்திருக்கும் ரியல் பவர் பாண்டிதான் இந்த E3 பவர்.  5 இன்ச் டிஸ்ப்ளே, 2 ஜி.பி ரேம், 16 ஜி.பி மெமரி, ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ,  8 எம்.பி ரியர் கேமரா, 5 எம்.பி முன்பக்க கேமரா, 3500 mAh பேட்டரி என டிரேட்மார்க் மோட்டோ டச்சுடன் இருக்கிறது E3 பவர்.

ப்ளஸ்

* பேட்டரித் திறன், சரியான விலை.

மைனஸ்

* கேமரா, மெதுவான சாஃப்ட்வேர் அப்டேட்ஸ்.

விலை ₹ 7,999

கேட்ஜெட்!

ரெட்மி 3S ப்ரைம்

ஜியோமிதான் சி.எஸ்.கே என்றால், இந்த போன்தான் அந்த டீமின் தோனி. 5 இன்ச் டிஸ்ப்ளே, 1.4GHz ஆக்டாகோர் பிராஸசர், 3 ஜி.பி ரேம், 32 ஜி.பி மெமரி, 4100 mAh பேட்டரி, ஃபிங்கர் பிரின்ட் சென்சார், 13 எம்.பி ப்ரைமரி கேமரா, 5 எம்.பி முன்பக்க கேமரா என கலக்குகிறது ரெட்மி 3S ப்ரைம்.

 ப்ளஸ்

* டிசைன், சரியான விலை, பேட்டரித் திறன், டிஸ்ப்ளே குவாலிட்டி.

 மைனஸ்

* சிம் கார்டுக்கு, ஹைப்ரிட் ஸ்லாட்.

விலை  ₹ 8,999

கேட்ஜெட்!

லெனோவா K6 பவர்

லெனோவா நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஹிட் இந்த போன். 5 இன்ச் டிஸ்ப்ளே, 1.4 GHz ஆக்டாகோர் பிராஸசர், 32 ஜி.பி மெமரி, ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ, 13 எம்.பி ரியர் கேமரா, 8 எம்.பி முன்பக்க கேமரா, 4000 mAh பேட்டரி என எல்லா ஏரியாவிலும் அசத்துகிறது K6 பவர். 3 ஜி.பி ரேம், 4 ஜி.பி ரேம் என இரண்டு வகைகளில் கிடைக்கிறது.

ப்ளஸ்

* பில்ட் குவாலிட்டி, டிசைன், நல்ல பேட்டரி, பெர்ஃபாமன்ஸ்.

மைனஸ்


* கேமரா திறனில் கொஞ்சம் பின்தங்கிவிடுகிறது.

விலை

3 ஜி.பி வெர்ஷன்: ₹ 9,999
4 ஜி.பி வெர்ஷன்: ₹ 10,999

கேட்ஜெட்!

ரெட்மி நோட் 4

ஜியோமி களமிறக்கிய லேட்டஸ்ட் மாடல் இது. 5.5 முழு ஹெச்.டி டிஸ்ப்ளே, 2.0GHz பிராசஸர், ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ, MIUI 8,  4G டூயல்சிம் வசதி, 4100mAh திறனுடைய பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது ரெட்மி நோட் 4. கேமராவைப் பொறுத்தவரை, பின்பக்கம் 13 எம்.பி மற்றும் முன்பக்கம் 5 எம்.பி கேமராவைக் கொண்டுள்ளது.

2 ஜி.பி ரேம் /32 ஜி.பி மெமரி, 3 ஜி.பி ரேம்/32 ஜி.பி மெமரி மற்றும் 4 ஜி.பி ரேம்/64 ஜி.பி மெமரி என மொத்தம் மூன்று மாடல்களில் கிடைக்கிறது இந்த நோட் 4.

ப்ளஸ்


* பில்ட் குவாலிட்டி, கேமரா பெர்பார்மன்ஸ், சரியான விலை.

மைனஸ்


* ரெட்மி ப்ரைம் போலவே இதிலும் இருப்பது, ஹைப்ரிட் சிம் ஸ்லாட்.

விலை

2 ஜி.பி ரேம்/32 ஜி.பி மெமரி மாடல் - ₹ 9,999
3 ஜி.பி ரேம்/32 ஜி.பி மெமரி மாடல் - ₹ 10,999
4 ஜி.பி மெமரி/64 ஜி.பி மெமரி மாடல் - ₹ 12,999

கேட்ஜெட்!

மோட்டோ G4 ப்ளே

5 இன்ச் டிஸ்ப்ளே, 1.2 GHz குவாட்கோர் பிராஸசர், 2 ஜி.பி ரேம், 16 ஜி.பி மெமரி, 8 எம்.பி பின்பக்க கேமரா, 5 எம்.பி முன்பக்க கேமரா, ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ. 2800 mAh பேட்டரி என எல்லாப் பொருத்தங்களும் இதிலும் இருக்கின்றன. கேமரா பிரியர்களுக்கு இதில் பெரிய ஆப்ஷன்கள் எல்லாம் இல்லை என்பதால் அவர்களுக்கு இந்த போன் பொருந்தாது.

ப்ளஸ்

* விலைக்கு ஏற்ற வசதிகள், பில்ட் குவாலிட்டி என தனது ஏரியாவில் மோட்டோ ஸ்ட்ராங்.

மைனஸ்

* ரேம் மற்றும் கேமரா ஆகியவை போதாது.

விலை ₹ 8,999

கேட்ஜெட்!

ஜியோமி ரெட்மி 4A

6,000 ரூபாய் பட்ஜெட், அசத்தல் வசதிகள் என மார்க்கெட்டில் புது என்ட்ரி கொடுத்துள்ளது ரெட்மி 4A. 5 இன்ச் டிஸ்ப்ளே, 1.4GHz பிராஸசர், 2 ஜி.பி ரேம், 16 ஜி.பி மெமரி, டூயல் சிம் வசதி, 3120 mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ என குறைந்த பட்ஜெட்டில் நிறைவாக இருக்கிறது ரெட்மி 4A.

ப்ளஸ்

* குறைந்த விலை.
* 4G வோல்டே வசதி மற்றும் டூயல் சிம்
* பேட்டரித் திறன்

மைனஸ்

* டூயல் சிம் ஸ்லாட்.
* 16 ஜி.பி மெமரி என்றாலும், அதில் நாம் பயன்படுத்த முடிவது 10 ஜி.பி-க்கும் குறைவாகத்தான்.

விலை ₹ 5,999 முதல் கிடைக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு