Published:Updated:

கேட்ஜெட்!

கேட்ஜெட்!
பிரீமியம் ஸ்டோரி
கேட்ஜெட்!

GADGETSஞா.சுதாகர்

கேட்ஜெட்!

GADGETSஞா.சுதாகர்

Published:Updated:
கேட்ஜெட்!
பிரீமியம் ஸ்டோரி
கேட்ஜெட்!
கேட்ஜெட்!

மைக்ரோமேக்ஸ் டூயல் 5 (Micromax Dual 5)

பட்ஜெட் போன்களில் பட்டையைக் கிளப்பும் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் பிரீமியம் செக்மென்ட் போன் டூயல் 5.

5.5 இன்ச் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே, 1.4GHz ஆக்டாகோர் பிராசஸர், 4 ஜி.பி ரேம், 128 ஜி.பி மெமரி, ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனர், ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ, 4G வோல்டே, 3200mAh பேட்டரி, யு.எஸ்.பி டைப் C போர்டு, ஐஆர் பிளாஸ்டர் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது மைக்ரோமேக்ஸ் டூயல் 5.

கேமராவைப் பொறுத்தவரை, பின்புறம் டூயல் டோன் ஃப்ளாஷ் உடன் கூடிய, டூயல் 13 எம்.பி கேமராக்கள் இருக்கின்றன. முன்பக்கம் 13 எம்.பி திறன்கொண்ட கேமரா இருக்கிறது. குயிக் சார்ஜிங் 3.0 வசதி இருப்பதால், பேட்டரி 0 முதல் 100 சதவிகிதத்தை அடைய 45 நிமிடமே போதும் என்கிறது மைக்ரோமேக்ஸ்.

பாதுகாப்புக்காக கொரில்லா கிளாஸ் 3, முழு மெட்டல் பாடி டிசைன் என வடிவமைப்பில் நேர்த்தியாக இருக்கிறது. இதன் கெப்பாசிட்டிவ் பட்டன்களில் பேக்லைட் இல்லை என்பது ஒரு சிறு குறை. ஹைப்ரிட் சிம் ஸ்லாட் என்றாலும், இதன் மெமரி அளவு 128 ஜி.பி என்பதால், மெமரி கார்டு பற்றி கவலைப்படத் தேவையில்லை.

மேலும், இதன் மெமரியை 128 ஜி.பி அளவுக்கு நீட்டித்துக்கொள்ளவும் முடியும். பெர்ஃபாமன்ஸில் எந்தக் குறையும் வைக்காதபடி இருக்கிறது டூயல் 5.

ப்ளஸ்

 *128 ஜி.பி அளவு கொண்ட நினைவகம்.

 * நேர்த்தியான டிசைன் மற்றும் பில்ட் குவாலிட்டி.

 * ஃபிங்கர்பிரின்ட் சென்சாரின் வேகம்.

 * கேமரா பெர்ஃபாமன்ஸ்.

மைனஸ்

* இன்னும் இதில் இருப்பது மார்ஷ்மல்லோதான். நௌகட் இல்லை.

விலை  ரூ.24,999

கேட்ஜெட்!

மோட்டோ G5 ப்ளஸ் (Moto g5 plus)

மோட்டோ G சீரிஸில் புதிதாக இணைந்துள்ளது, இந்த G5 ப்ளஸ்.

5.2 இன்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர், 16 ஜி.பி / 32 ஜி.பி மெமரி, 3 ஜி.பி / 4 ஜி.பி ரேம், ஆண்ட்ராய்டு நௌகட், 3000 mAh பேட்டரி, ஃபிங்கர்பிரின்ட் ரீடர், டூயல் சிம் வசதி என ஃபுல்ஃபாமில் இருக்கிறது மோட்டோ G5 ப்ளஸ்.

அலுமினியம் பாடியுடன், ஸ்டைலிஷாக இருக்கிறது இதன் டிசைன். கேமராவைப் பொறுத்தவரை, 12 எம்.பி ரியர் கேமரா மற்றும் 5 எம்.பி முன்பக்க கேமராவைக் கொண்டிருக்கிறது. ஆறு மணி நேரத்துக்கான சார்ஜை, 15 நிமிடத்தில்  செய்யும் டர்போ சார்ஜிங் ஆப்ஷன் இதில் உள்ளது. ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் ஓ.எஸ் ஆன நௌகட் இருப்பது சிறப்பு.

கேமிங், மீடியா என மல்ட்டிடாஸ்க்கிங்கில் பாஸ் மார்க் வாங்குகிறது. அதேசமயம், போனில் அதிக வெப்பத்தையும் உணர முடிகிறது. 3 ஜி.பி ரேம்/ 16 ஜி.பி மெமரி, 4 ஜி.பி ரேம் / 32 ஜி.பி மெமரி என இதில் இரண்டு மாடல்களை வெளியிட்டுள்ளது மோட்டோ. லூனார் க்ரே மற்றும் ஃபைன் கோல்டு என இரு நிறங்களில் இந்த போன் கிடைக்கிறது.

ப்ளஸ்

* ஆண்ட்ராய்டு நௌகட் ஓ.எஸ்.

* டிசைன் மற்றும் பில்ட் குவாலிட்டி.

மைனஸ்

* குறைவான வெளிச்சத்தில்,

* கேமரா பெர்ஃபாமன்ஸ்.

விலை

* 3 ஜி.பி ரேம் /16 ஜி.பி மெமரி மாடல்: ரூ. 14,999

* 4 ஜி.பி ரேம் /32 ஜி.பி மெமரி மாடல்: ரூ.16,999 முதல் கிடைக்கிறது.