Published:Updated:

கேட்ஜெட்!

கேட்ஜெட்!
பிரீமியம் ஸ்டோரி
கேட்ஜெட்!

GADGETSஞா.சுதாகர்

கேட்ஜெட்!

GADGETSஞா.சுதாகர்

Published:Updated:
கேட்ஜெட்!
பிரீமியம் ஸ்டோரி
கேட்ஜெட்!
கேட்ஜெட்!

எல்ஜி G6 (LG G6)

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மொபைல் வேர்ல்டு மாநாட்டில் எல்.ஜி நிறுவனம் அறிமுகம் செய்த மொபைல் போன், இப்போது  விற்பனைக்கு வந்துள்ளது. 5.7 இன்ச் QHD டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 821 பிராசஸர், 64 ஜி.பி மெமரி, 4 ஜி.பி ரேம், 3,300 mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு நௌகட் ஓ.எஸ், IP68 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் என டெக் உலகின் டிரெண்ட்டுக்கேற்ப இருக்கிறது எல்.ஜி. G6.

டிஸ்ப்ளே டிசைனில் நல்ல மதிப்பெண் வாங்குகிறது எல்.ஜி. 5.7 இன்ச் டிஸ்ப்ளேவில் விளிம்புப் பகுதி குறைவாகவும், டிஸ்ப்ளே அதிகமாகவும் இருப்பதால், பெரிய போன் என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. டிஸ்ப்ளே பெர்ஃபாமன்ஸிலும் எந்தக் குறையும் வைக்கவில்லை. இதற்காக ஹோம் பட்டன் மற்றும் ஃபிங்கர்பிரின்ட் சென்சார் பின்பக்கத்துக்கு நகர்ந்துள்ளன. மற்றபடி போனின் வடிவமைப்பில் பெரிதாக எந்த மாற்றங்களும் இல்லை.

வைட் ஆங்கிள் லென்ஸுடன் கூடிய 13 எம்.பி டூயல் ரியர் கேமராக்களைக் கொண்டுள்ளது. முன்பக்கம் 5 எம்.பி கேமரா இருக்கிறது. கேமராவின் செயல்பாடும் திருப்தியாக இருக்கிறது.

ஆனால், ரூ.55,000 என்கிற விலைக்கேற்ற சிறப்பம்சங்கள் இல்லை. பிளாட்டினம் மற்றும் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது இது.

பிளஸ்

* டிஸ்ப்ளே பெர்ஃபாமன்ஸ் சூப்பர்

* டூயல் ரியர் கேமராவின் திறன்

மைனஸ்

* சிறப்பம்சங்களைப் பொறுத்து பார்த்தால், விலை கொஞ்சம் அதிகம்

* சாதாரணமான டிசைன்

விலை


* ரூ.55,000 முதல் கிடைக்கிறது

கேட்ஜெட்!

சென்ஹெய்சர் HD 2.10 (Sennheiser HD 2.10)

மியூஸிக் பிரியர்களின் பிரியமான பிராண்ட் சென்ஹெய்சர். இந்த நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்திருக்கும் புதிய ஆன் இயர் ஹெட்போன்தான் இந்த HD 2.10. சரியாக உங்களின் காது மடல்களின் மேல்பகுதியில் அமர்ந்துகொள்ளும் ஆன் இயர் டைப் ஹெட்போன் இது.

குளோஸ்டு பேக் டிசைன், 18-லிருந்து 18,000 வரை ஹெர்ட்ஸ் ஃப்ரிகென்சி ரெஸ்பான்ஸ், 26 ஓம் இம்பெடன்ஸ், 1.4 மீட்டர் நீளம் கொண்ட கேபிள் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது இந்த சென்ஹெய்சர் HD 2.10. காதுகளின் மேல் கச்சிதமாகப் பொருந்துவதால், நாம் ஜாக்கிங் செய்யும்போதுகூட ஆடாமல் இருக்கும். மேலும், இசையின் ஒலியை அதிகளவில் வெளியே அனுப்பாமல் துல்லியமாக செவிக்குள் கடத்துகிறது.

ஒலியின் தரத்தில் கொஞ்சமும் குறைவைக்காமல் பணி செய்கிறது இந்த ஹெட்போன். நல்ல இசை அனுபவத்துக்கும், தரத்தின் மூலம் கேரன்டி தருகிறது சென்ஹெய்சர். எங்கேயும் எடுத்துச் செல்வதற்கு எளிதாக, இதனை மடித்து வைத்துக் கொள்ளலாம். பயன்படுத்த நன்றாக இருந்தாலும், இந்திய மார்க்கெட்டைப் பொறுத்தவரை, இதன் விலைதான் கொஞ்சம் அதிகம்.

பிளஸ்

* இசையின் துல்லியம்

* காதுகளுக்கு அசௌகர்யம் அளிக்காத டிசைன் மற்றும் எடை

மைனஸ்

* விலை அதிகம்

* ஹெட்போன் எடுத்துச் செல்வதற்கான  பவுச் இதனுடன் கிடைப்பதில்லை

விலை

* ரூ.3,990 முதல் கிடைக்கிறது