பிரீமியம் ஸ்டோரி

ம் உடல்நலன் பாதிப்படைவதற்கு ஒரு முக்கியமான காரணம், இயந்திரத்தனமாக மாறிவிட்ட நம் வாழ்க்கைதான். அலுவலக வேலைப்பளு, பணியால் உண்டாகும் மன அழுத்தம், நேரமின்மை போன்றவற்றினால் தினசரி நம் உடலுக்குத் தேவைப்படும் நீர், உணவு, உடற்பயிற்சி போன்றவற்றைக்கூட நம்மால் சரியாகப் பூர்த்தி செய்யமுடியாமல் போகிறது. இதற்குத் தீர்வளிக்கும் விதமான பணியோடு இணைந்து உடல்நலன்மீதும் அக்கறை செலுத்த உதவும் இரண்டு ஆப்ஸ் இங்கே....      

ஆரோக்கிய ஆப்ஸ்!

வாட்டர் ட்ரிங்க் ரிமைண்டர் (Water Drink Reminder)

தினசரி நம் உடலுக்கு உணவானது எப்படித் தேவையோ, அதைப்போலவே நீரும் அதிமுக்கியம்.  ஆனால், பணிச்சூழல் காரணமாக பலரும் சரியான இடைவெளியில் போதிய அளவுக்குத் தண்ணீர் குடிப்பதில்லை. இந்தப் பிரச்னைக்குக் கைகொடுக்கும் ஆப்தான் இந்த வாட்டர் ட்ரிங்க் ரிமைண்டர்.

ஒவ்வொருமுறை நீர் அருந்தும்போதும், நீரின் அளவை இதில் உள்ளீடு செய்ய வேண்டும். இதை வைத்து நீர் அருந்திய பிறகு எத்தனை நேர இடைவெளியில் அடுத்தமுறை நீர் அருந்தவேண்டும் என்பதையும் நினைவுபடுத்துகிறது இந்த ஆப். ஒவ்வொருமுறை இது நினைவுபடுத்தும்போதும் இருக்கையைவிட்டு எழுந்து சென்று, தேவையான தண்ணீரை மறக்காமல் குடிப்பது அவசியம்.  

ஆரோக்கிய ஆப்ஸ்!

இதனால் நம் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து கிடைப்பதோடு, நீர்ச்சத்து குறைவதினால் ஏற்படும் உடல்ரீதியான பிரச்னைகளும் தவிர்க்கப்படும். இந்த ஆப்பினை இன்ஸ்டால் செய்துவிட்டு, இணையம் இல்லாமலே இதனைப் பயன்படுத்தலாம். தினசரி எவ்வளவு தண்ணீர் அருந்துகிறோம், எத்தனை மணி நேர இடைவெளியில் தண்ணீர் அருந்துகிறோம், எவ்வளவு குறைவாக தண்ணீர் அருந்துகிறோம் என்பது போன்ற விவரங்களையும் இதில் பார்க்க முடியும். அளவுகளைப் பதிவு செய்வதிலிருந்து, நீர் அருந்த நினைவுபடுத்துவது வரை மிக எளிமையாகச் செயல்படுகிறது இந்த ஆப். டெஸ்க் ஜாப்பில் இருப்பவர்கள், மொபைலில் நிச்சயம் வைத்திருக்க வேண்டிய ஒரு ஆப் இது.

டவுன்லோடு செய்ய : https://play.google.com/store/apps/details?id=com.northpark.drinkwater

ஆரோக்கிய ஆப்ஸ்!

யோகா போஸஸ்  (Yoga Poses)

மிகவும் மினிமலிஸ்ட்டிக்கான மற்றும் எளிமையான ஆண்ட்ராய்டு யோகா மாஸ்டர்தான் இந்த யோகா போஸஸ். பலருக்கும் யோகா கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசை. ஆனால், அதை எப்படி செய்வது என்ற தயக்கம், எங்கே சென்று கற்றுக்கொள்வது என்ற கேள்வி போன்ற அனைத்தும் மனதுக்குள் இருக்கும். ஆனால், இன்றைக்கு இருக்கும் டிஜிட்டல் உலகில் நிறைய ஆப்ஸ் மற்றும் யூ டியூப் சானல்கள் யோகாவை தெளிவாகச் சொல்லித் தருகின்றன. எனவே, யோகா ஆசிரியர் கிடைக்காதவர்கள் இந்த டிஜிட்டல் வாத்தியாரை நாடலாம்.

80-க்கும் மேலான ஆசனங்கள், அவற்றை எப்படி செய்வது என்பதற்கான வீடியோக்கள் என முழுமையான ஒரு துணைவனாக இருக்கிறது இந்த ஆப். எளிதான ஆசனங்கள், கடினமான ஆசனங்கள், பொதுவான ஆசனங்கள் என ஆசனங்கள் தெளிவாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆசனத்துக்கும் அதன் பெயர், அதன் பயன், எப்படிச் செய்வது, படிப்படியான விளக்கம் மற்றும் வீடியோ என இந்த ஆப் கலக்கலாக இருக்கிறது.

வீடியோவுக்கு மட்டும்தான் இணைய வசதி தேவை. மற்ற வசதிகளை ஆஃப்லைனிலேயே பயன்படுத்த முடியும். ஆப் டிசைன் முதல் விளக்கங்கள் வரை தெளிவாகவும், புரியும்படியும் இருப்பது இதன் சிறப்பு. பயிற்சிகள் எளிமையான ஆங்கிலத்திலேயே விளக்கப்பட்டு உள்ளன. இடையிடையே வரும் விளம்பரங்கள் மட்டும்தான் சின்ன இடைஞ்சல்.

டவுன்லோடு செய்ய : https://play.google.com/store/apps/details?id=com.azazqureshi.yoga

- ஞா.சுதாகர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு