Published:Updated:

சின்ன வயது பெரிய லட்சியம்!

தேடல்

சின்ன வயது பெரிய லட்சியம்!

சமீபத்தில் நாணயம் விகடன் இ-மெயில் முகவரிக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார் திருச்சியைச் சேர்ந்த விஷாலி. ''நான் பத்தாவது படித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு சிறுவயது முதலே சேமிப்புப் பழக்கம் இருக்கிறது. தற்போதுகூட மாதம் 2,000-த்திலிருந்து 2,500 ரூபாய் வரை சேமிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

சின்ன வயது பெரிய லட்சியம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ந்தப் பணத்தை எதில் முதலீடு செய்யலாம்? மேலும் நான் கல்லூரி படிக்கும் காலத்தில் சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

இதற்கு தகுந்த ஆலோசனைகளை நீங்கள்தான் தரவேண்டும்?'' என்று அந்த இ-மெயிலில் சொல்லி இருந்தார் விஷாலி.

பள்ளிப் பருவத்தில் எல்லாக் குழந்தைகளும் கிரிக்கெட், சினிமா என தன் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருக்க, எதிர்கால வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் விஷாலி கொஞ்சம் வித்தியாசமானவராகவே நமக்குப்பட, உடனே அவரை தேடிப் போனோம்.

##~##
திருச்சியின் மையப் பகுதியில் இருக்கிறது விஷாலியின் வீடு. அப்பா சேகர், பேப்பர் பிஸினஸ் செய்கிறார். அம்மா, ஜெய்மீனா குடும்பத்தலைவி. ''எங்கள் குடும்பத்தில் எல்லோருமே அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள். நான் மட்டும்தான் துணிந்து பிஸினஸில் இறங்கினேன். வருமானம் ஓகோ என்று இல்லாவிட்டாலும், இதுவரையில் நஷ்டமில்லை'' என்கிறார் விஷாலியின் அப்பா சேகர். திட்டமிட்டு வாழ்க்கை நடத்துவதால் பிரச்னை இல்லாமல் வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது என்றவர், அந்த விஷயத்தை தனது மகளுக்கும் சொல்லித் தந்திருக்கிறார்.

''சின்ன வயசிலிருந்தே சேமிப்பின் அவசியம் குறித்து அப்பா சொல்லித் தருவார்.  தொழிலில் உள்ள ஏற்ற இறக்கங்கள், முதலீடுகள், பங்குச் சந்தை போன்ற விஷயங்களை பத்தியும் பேசுவார். அதுதான் எனக்கு உத்வேகம் தந்துச்சு’ என்று குதூகலமாக சொன்னார் விஷாலி.

சின்ன வயது பெரிய லட்சியம்!

ஒன்றாம் வகுப்பு படிக்கும்போது உண்டியல் மூலம் சேமிக்க ஆரம்பித்துள்ளார் விஷாலி. எட்டாம் வகுப்பு படிக்கும் வரையிலும் அவர் மொத்தமாக சேமித்தது ஒரு லட்ச ரூபாய். இதை விஷாலியின் பெயரிலேயே மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்திருக்கிறார் சேகர். இந்த வருடம் ஜனவரி முதல் விஷாலி சேமித்துள்ள தொகை பதிமூன்றாயிரம் ரூபாய்!

'கல்லூரி படிப்பு முடிப்பதற்குள் சொந்தமாக ஒரு தொழில் தொடங்க வேண்டும்; அதுவும் தனக்குப் பிடித்த சாக்லேட் தொடர்பான தொழில் செய்ய வேண்டும்’ என்று சொன்ன விஷாலிக்கு பிஸினஸ் தொடங்குவது தொடர்பாக ஆலோசனை பெற்றுத் தர முடிவு செய்தோம். பிஸினஸ் கன்சல்டன்ட் எஸ்.எல்.வி.மூர்த்தி, விஷாலியுடன் பேசி ஆலோசனை தந்தார்.

''விஷாலி, நீங்கள் பள்ளியில் படிக்கும்போதே பல படிகள் தாண்டிவிட்டீர்கள். சாக்லேட் தொடர்பான துறையில் பிஸினஸ் தொடங்க வேண்டும் என்கிற இலக்கு, மாதாமாதம் சேமிக்கும் பழக்கம், அதை முதலீடு செய்து சேமிப்பைப் பெருக்கும் பழக்கம் பிஸினஸில் ஜெயிப்பதற்கு வேண்டிய குணங்கள் உங்களிடம் நிறையவே இருக்கின்றன.

சாக்லேட், சாக்லேட் தொடர்பான உணவுகளில் பிஸினஸ் தொடங்கும் உங்களது சிந்தனை அருமை. ஏன் தெரியுமா? சாக்லேட் இன்று மட்டுமல்ல, நான்காயிரம் ஆண்டுகளாகவே, எல்லோருக்கும் பிடித்த உணவு. குழந்தைகள் முதல் குடுகுடு கிழவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த உணவு.

சின்ன வயது பெரிய லட்சியம்!

இந்தியாவில் சாக்லேட் பிரபலமாக இருந்தபோதும், உலக நாடுகளோடு ஒப்பிடும்போது, நாம் மிகக் குறைவாகவே சாக்லேட் சாப்பிடுகிறோம். ஐரோப்பிய நாடுகளில், சராசரியாக ஒரு மனிதர் வருடத்துக்கு ஒன்பது கிலோ சாக்லேட் சாப்பிடுகிறார். அமெரிக்காவில் 4.7 கிலோ சாக்லேட் சாப்பிடுகிறார்கள். இந்தியாவில் நாம் சாப்பிடுவது சராசரியாக 200 கிராம் மட்டுமே. மக்களின் வாழ்க்கைத்தரம் உயர, உயர சாக்லேட் சாப்பிடுவதும் அதிகரிக்கிறது. இதனால், சாக்லேட் பொருட்களின் விற்பனை கணிசமாகத் தொடர்ந்து வளரும். எனவே, நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் துறை நல்ல துறை.

சின்ன வயது பெரிய லட்சியம்!

சாக்லேட் என்பது பரந்து விரிந்த ஒரு துறை. வித்தியாசமாகச் சிந்தித்து, தனித்துவமான பொருட்கள் தயாரித்து முத்திரை பதிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. சாக்லேட்-உடன் வேறு என்னென்ன தயாரிக்க முடியும் என்பதை விஷாலி யோசிப்பது நல்லது. இதற்கு ஒரு சுலபமான வழி சொல்லித் தருகிறேன். ஒரு பேப்பர் எடுத்துக் கொள்ளுங்கள். நடுவில் ஒரு கோடு போடுங்கள். மேலே உள்ளபடி பட்டியல் போடுங்கள்.

இப்படி பல பொருட்கள் உங்கள் மனதில் தோன்றும். இதில் உங்களால் எதைச் செய்ய முடியும், எதை செய்தால் போணி ஆகாது என்று வடிகட்டுங்கள். ஒருசிலவற்றைத் தயாரியுங்கள். சிறிய அளவில் செய்து, பொதுமக்களிடம் சோதனை செய்து பாருங்கள். எந்தப் பொருட்கள் ஜெயிக்கும் என்று தெரியும்.

இணையதளங்களில் சாக்லேட் தொடர்பான சமாசாரங்களைப் படிப்பது நல்லது. சாக்லேட் பொருட்களைத் தயாரிக்க பலரும் பயிற்சி தருகிறார்கள். இவை உங்கள் உற்பத்தித் திறமையைப் பட்டை தீட்டும். இதெல்லாம் முடித்தபிறகு சொல்லுங்கள், நீங்கள் தயார் செய்த பொருளை   எப்படி மார்க்கெட்டிங் செய்வது, எப்படி நிதி நிர்வாகம் பண்ணுவது என்பதைச் சொல்கிறேன்'' என்றார் எஸ்.எல்.வி. மூர்த்தி.

சரி, பிஸினஸ் தொடங்குவதற்காக விஷாலி சேமித்து வரும் பணத்தை எதில் முதலீடு செய்து வைப்பது என ஃபண்ட்ஸ் இந்தியா டாட் காமைச் சேர்ந்த முதலீட்டு ஆலோசகர் ஸ்ரீகாந்த் மீனாட்சி சொன்னார்...

சின்ன வயது பெரிய லட்சியம்!

சுதாகர், உதவி ஆணையர், சைபர் கிரைம்.

''உலகப் பொருளாதாரத்தை நம் மக்களுக்கு புரிய வைத்ததில் நாணயம் விகடனின் பங்கு மகத்தானது. மேலும் நிதித்துறையின் புதிய தொழில்நுட்பங்களை கற்றுத் தருவதிலும், நிதித்துறை முறைகேடுகளைச் சுட்டிக்காட்டுவதிலும் நாணயம் விகடன்தான் முன்னோடி.''

''ஒன்பதாம் வகுப்பு குழந்தைக்கு நான் முதலீட்டு ஆலோசனை சொல்வது இதுவே முதல்முறை. உங்களை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது. நீங்கள் ஒரு ஆரம்ப நிலை முதலீட்டாளர். பிஸினஸ் தொடங்கும் உயரிய நோக்கத்திற்காக நீங்கள் பணத்தைச் சேமிக்கப் போவதால், ரிஸ்க் இல்லாத முதலீட்டில் உங்கள் பணத்தைப் போட வேண்டும். இதற்கு பேங்க் ஆர்.டி-தான் சரி. அடுத்த நான்கு ஆண்டுகளில் ஒவ்வொரு மாதமும் 1,000 ரூபாய்  வீதம் முதலீடு செய்து, அதற்கு சுமார் 8.5% வட்டி கிடைக்கும் எனில், உங்களுக்கு கிடைக்கும் தொகை சுமார் 67,198 ரூபாய். இதே நான்கு ஆண்டுகளில் மாதம் 1,500 ரூபாய் வீதம் முதலீடு செய்தால், 1,00,297 ரூபாய் கிடைக்கும்.

1000 ரூபாய் அல்லது 1,500 ரூபாய் வங்கி ஆர்.டி-யில் சேமிக்கும் அதே நேரத்தில், மீதமுள்ள பணத்தை கடன் சார்ந்த பேலன்ஸ்டு ஃபண்டில் எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்தால், நீங்கள் சேமிக்கும் பணத்திற்கு ஓரளவு லாபமும் கிடைக்கும், பணமும் பத்திரமாக இருக்கும்'' என்றார்.

விஷாலி எதிர்காலத்தில் பெரிய பிஸினஸ்மேன் ஆக நாணயம் விகடனின் வாழ்த்துக்கள்!

- நீரை.மகேந்திரன்,
படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்