Published:Updated:

திறன் பழகு; திறமை மேம்படுத்து! - வேலைவாய்ப்பில் இண்டஸ்ட்ரி 4.0

திறன் பழகு; திறமை மேம்படுத்து! - வேலைவாய்ப்பில் இண்டஸ்ட்ரி 4.0
பிரீமியம் ஸ்டோரி
திறன் பழகு; திறமை மேம்படுத்து! - வேலைவாய்ப்பில் இண்டஸ்ட்ரி 4.0

ரீஸ்கில்லிங் பற்றிய புதிய தொடர் - 3சு.ராமச்சந்திரன், தொழில்நுட்ப ஆலோசகர், Infosys Knowledge Institute

திறன் பழகு; திறமை மேம்படுத்து! - வேலைவாய்ப்பில் இண்டஸ்ட்ரி 4.0

ரீஸ்கில்லிங் பற்றிய புதிய தொடர் - 3சு.ராமச்சந்திரன், தொழில்நுட்ப ஆலோசகர், Infosys Knowledge Institute

Published:Updated:
திறன் பழகு; திறமை மேம்படுத்து! - வேலைவாய்ப்பில் இண்டஸ்ட்ரி 4.0
பிரீமியம் ஸ்டோரி
திறன் பழகு; திறமை மேம்படுத்து! - வேலைவாய்ப்பில் இண்டஸ்ட்ரி 4.0

னித இனம் பல புரட்சிகளைச் சந்தித்திருக்கிறது. அந்த வகையில் இந்த‌ நூற்றாண்டில் பெரிய ஒரு புரட்சியாகச் சொல்லப்படுவது  டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் இப்போது நடந்துவரும் புரட்சி.

திறன் பழகு; திறமை மேம்படுத்து! - வேலைவாய்ப்பில் இண்டஸ்ட்ரி 4.0

நீராவியைக் கொண்டு இயந்திரங்களை ஓட்டியபோது உருவானது முதல் புரட்சி. மின்சாரம் கொண்டு மோட்டார்களை இயக்கி தொழிற்சாலையில் பொருள்களைத் தயாரித்தது இரண்டாம் புரட்சி. மின்னணு (Electronics), மென்பொருள்மூலம் இயந்திரங்களை இயக்கியது (NC machine, robot) மூன்றாவது புரட்சி. 

ஒவ்வொரு புரட்சியும் சமுதாயத்தில் உற்பத்தித்திறனைப் பல மடங்கு பெருக்கியது. வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியது. உணவு, துணிமணிகள், வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் லட்சக்கணக்கில் தயாராகி, மலிவான விலையில் சந்தையில் கிடைத்தன. பழைய வர்த்தகங்கள், வேலைகள் காணாமல்போய், புதிய வேலைவாய்ப்பு உருவானது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திறன் பழகு; திறமை மேம்படுத்து! - வேலைவாய்ப்பில் இண்டஸ்ட்ரி 4.0நான்காம் தொழில் புரட்சி

மனித வரலாற்றில் முதலில் நடந்த மூன்று தொழில் புரட்சிகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடந்தன. வளர்ந்துவந்த இந்தியா போன்ற நாடுகள் இந்தப் புரட்சிகளினால் அதிக‌ பயன் எதையும் அடையவில்லை. ஆனால், இப்போது நிகழும் நான்காம் புரட்சியை அதாவது, இண்டஸ்ட்ரி 4.0 புரட்சியை எந்தக் காரணம் கொண்டும் நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட முடியாது. உலகப் பொருளாதாரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற‌ இந்தப் புரட்சியில் நாம் பங்கெடுப்பது மிகவும் அவசியம்.

இந்தியாவில் குறிப்பாக, வாகனத் தொழிற்சாலைகளில் ரோபோக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது.‍ 10,000 ஊழியர்களுக்கு வெறும் 85 ரோபோக்களே உள்ளன. ஆனால், சீனாவில் இந்த எண்ணிக்கை 500-க்குமேல். 

திறன் பழகு; திறமை மேம்படுத்து! - வேலைவாய்ப்பில் இண்டஸ்ட்ரி 4.0

நம் நாடு விடுதலை பெற்றபிறகு சென்ற‌ நூற்றாண்டின் நடுவில் அடிப்படை வசதிகளை வளர்ப்பதில் கவனம் செலுத்தினோம்; அதனால் தொழில்மயமாவதில் பின்தங்கினோம். ஆனால், இந்த நூற்றாண்டில் இதுபோன்ற காரணம் எதையும் நாம் சொல்ல வாய்ப்பு தராமல், நான்காம் புரட்சியில் நாம் பங்கேற்க வேண்டும்.  ‌

இண்டஸ்ட்ரி 4.0-வும் வளரும் தொழில்நுட்பங்களும்

இந்தப் புரட்சியில் அனைத்துப் பொருள்களும் ஒன்றோடு ஒன்று இணைந்தே இருக்கும் (Internet of Things - IoT). இதனால் தொலை விலிருந்தே தொழிற்சாலையில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். இதில் உருவாகும் ஏராளமான தகவலை வடிகட்டி, தேவையில்லாத குப்பையைத் தூக்கி எறிந்துவிட்டு, தேவையான மிகவும் மதிப்புமிக்க உண்மைகளை (Insights) மட்டும் வெளியே கொண்டுவருவது ஓர் அறிவுத்திறன் (Analytics). விதவிதமான இடங்களிலிருந்து, வெவ்வேறு வடிவங்களில் வேகமாகவரும் அதிகத் தகவல்களைச் சமாளிக்க பிக் டேட்டா திறன் தேவைப்படுகிறது.

இந்தத் தகவலையும் உண்மைகளையும் வைத்து மனித ஈடுபாடு இல்லாமல், ஓர் இயந்திரம் தான் இருக்கும் நிலையை உணர்ந்து சுயமாக முடிவெடுப்பது இந்தப் பயணத்தில் அடுத்த படிநிலையாகும். இதற்குத் தேவை செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence). இவை அனைத்திற்கும் தேவையான கணினித் திறனைத் தொழிற்சாலையில் வைக்காமல், எங்கோ இருக்கும் டேட்டா சென்டரில் க்ளவுட் என்னும் தொழில்நுட்பம் கொண்டு நிர்வகிக்கலாம்.

திறன் பழகு; திறமை மேம்படுத்து! - வேலைவாய்ப்பில் இண்டஸ்ட்ரி 4.0

பல முக்கியமான பாகங்கள் பட்டறையில் (workshop – casting, forging, machine shop) தயாரிக்காமல், குளுகுளு அறையில் 3டி பிரின்டிங் கொண்டு, தேவைக்கேற்ப தயாராகிக் கொண்டிருக்கின்றன.

ஐ.ஓ.டி, அனலிடிக்ஸ், க்ளவுட் போன்ற தொழில்நுட்பங்கள் அனைத்தும் இன்னும் பல ஆண்டுகளுக்கு வேலைவாய்ப்பைத் தரக்கூடியவை. வல்லுநர்களின் கணிப்பின்படி, அடுத்த சில வருடங்களில் இந்தியாவில் உருவாகப்போகும் பல‌ வேலைகள் என்னென்ன என்று இன்றைக்கு யாருக்கும் தெரியவே தெரியாது என்பதே.

இண்டஸ்ட்ரி 4.0 என்பது புதிய தொழில்நுட்பங்களைச் செயல் படுத்துவது மட்டுமல்ல, நிறுவனங்கள் தங்கள் பாரம்ப‌ர்யமான வழிகளை விட்டுவிட்டு வேறு பல புதிய முறைகளைக் கடைப்பிடிப்பதும் ஆகும்.

உதாரணத்திற்கு,  பொருள்களைத் தயாரித்து லாபத்திற்கு விற்பது பழைய முறை. லாபம் அதிகம் இல்லாவிட்டாலும் விற்றுவிட்டு பயன்பாட்டிற்கேற்ப வசூலிப்பது புதிய முறை (pay-per-use). விமானம், அதிலுள்ள இன்ஜின் போன்ற துறைகளில் இதுபோன்ற வழிமுறைகள் பல ஆண்டுகாலமாக‌ நடைமுறையில் உள்ளன. இது போன்ற புதிய உத்திகளைக் கையாள‌ தொழில்நுட்பம் உதவி செய்கிறது.

சில மாதங்களுக்குமுன் பிரதமர் மோடி இண்டஸ்ட்ரி 4.0 ஆய்வகத்தைத் திறந்து வைத்துப் பேசியபோது, ‘‘இண்டஸ்ட்ரி 4.0-வில் இந்தியாவின் பங்களிப்பு உலகே ஆச்சர்யப்படும் படியாக இருக்கும்’’ என்று கூறினார். இது நிறைவேற வன்பொருள், மென் பொருளில் ஆர்வமுள்ள‌ இளைஞர்களும் அனுபவம் உள்ளவர்களும் தேவைப் படும் திறனை மேம்ப‌டுத்தி இந்தத் துறையை வளர்க்க முன்வர வேண்டும்; வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இண்டஸ்ட்ரி 4.0 என்பது ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பம் கிடையாது. அது பல துறைகள் ஒன்று சேர்ந்ததே ஆகும். லாப‌நோக்கம் இல்லாத அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவை இதில் முதலீடு செய்கின்றன; புது யோசனைகளை வ‌ரவேற்கவும் செய்கின்றன. உலக அளவில் இண்டஸ்ட்ரி 4.0-வின் பயன்க‌ளை நிறுவனங்கள் முழுமையாக அடைய முடியாமல் தவிப்ப‌தற்கு இந்தத் துறையில் திறமையான ஊழியர்கள் இல்லாததே ஒரு முக்கியமான காரணம்.

திறன் பழகு; திறமை மேம்படுத்து! - வேலைவாய்ப்பில் இண்டஸ்ட்ரி 4.0

ஐக்கிய நாடுகள் (United Nations), டபிள்யூ.இ.எஃப் (WEF - World Economic Forum) போன்ற அமைப்புகள் இண்டஸ்ட்ரி 4.0 தொழில்நுட்பங்களை  இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகள் பயனுள்ள வகையில் செயல்படுத்த தங்களால் இயன்ற உதவியைச் செய்து வருகின்றன.

தொழில்துறையை வளர்க்கும் யூனிடோ-வின் (UNIDO) அதிகாரி, “இந்தியாவில் இண்டஸ்ட்ரி 4.0 செய்யும் விதமானது, வளர்ந்த நாடுகள் செய்ததன் நகலாக இருக்கக்கூடாது” என்ற ஆலோசனையைக் கூறியுள்ளார். “இந்தியாவின் இண்டஸ்ட்ரி 4.0 வடிவமைப்பு மற்றும் செயல்பாடு நம் நாட்டு நிலைமையை வைத்தே இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக சிறு, நடுத்தர நிறுவனங்கள் தங்க‌ள் செயல்முறைகளைச் சீர்செய்த பின்னரே டிஜிட்டல் முயற்சிகளை எடுக்க வேண்டும்” என்றும் டெல்லியில் அவர் கூறியுள்ளார்.

தொழில், வணிகத் தலைவர்கள் மட்டும் அல்லாமல் இன்று அரசியல் தலைவர்களும் இண்டஸ்ட்ரி பற்றி பேச முக்கியக் காரணம் வேலைவாய்ப்பு. புதிதாகக் கட்டப்படும் தொழிற் சாலைகளில் ஆட்டோமேஷன் அதிகமாக உள்ளதால், பல இயந்திரங்களும் மனித உதவி இல்லாமல் தானே இயங்கக் கூடியவையாக‌ இருப்பதே இதற்கு மூலகாரணம். ஒரு நாட்டின் ஜி.டி.பி-யின் வளர்ச்சி ஆரோக்கியமாக‌ இருந்தாலும் அதற்குத் தகுந்த நேரடி வேலைவாய்ப்பு இல்லாததற்கு இதுவே காரணம்.

மனித சமுதாயத்தில் புரட்சிகள் வந்துகொண்டே தான் இருக்கும். ஒவ்வொரு புரட்சியிலும் ஒரு சிலர் மட்டுமே பயன்படாமல், அனைவரும் பயனடைய ஒரு முக்கியமான பாதை, திறன் வளர்ப்பே. தொலைநோக்குப் பார்வையுடன் நாளை தேவைப்படும் திறனை இன்றே கணித்து, அதை வளர்த்தெடுப்பதில் முனைப்புடன் செயல்படும் நாடுகள், நிறுவனங்கள், தனிப்பட்ட மனிதர்கள் எப்போதும் இந்தப் போட்டியில் ஜெயிப்பார்கள்!

(திறன் வளரும்) 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism