Published:Updated:

ஆன்லைன் பர்சேஸ் - கூகுள் பார்வையிலிருந்து நீங்கள் தப்ப முடியாது! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆன்லைன் பர்சேஸ் - கூகுள் பார்வையிலிருந்து நீங்கள் தப்ப முடியாது! 
ஆன்லைன் பர்சேஸ் - கூகுள் பார்வையிலிருந்து நீங்கள் தப்ப முடியாது! 

ஆன்லைன் பர்சேஸ் - கூகுள் பார்வையிலிருந்து நீங்கள் தப்ப முடியாது! 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ன்லைன் மூலம் நீங்கள் என்னென்ன பொருள்களையெல்லாம் வாங்குகிறீர்கள் என்பதை இணையத் தேடு பொறியான கூகுள், தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அதனிடமிருந்து எதையும் மறைக்க முடியாது என்றும் செய்தி வெளியாகியுள்ளது. 

ஆன்லைன் பர்சேஸ் - கூகுள் பார்வையிலிருந்து நீங்கள் தப்ப முடியாது! 

பொதுவாகவே இணையதள பயன்பாட்டுக்குள் நுழைந்துவிட்டாலே நமது நடவடிக்கைகள் ஏதோ ஒரு வகையில், யாரோ சிலராலோ அல்லது பலராலோ கண்காணிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கும். இந்த நிலையில், தற்போது ஆன்லைன் மூலம் பொருள்கள் வாங்குவது அதிகரித்து வரும் நிலையில், ஒவ்வொருவரும் எந்தெந்தப் பொருள்களை, எந்தெந்த நிறுவனங்களிலிருந்து வாங்குகிறார்கள் என்பதை அவர்களது `பர்சேஸ் ஹிஸ்டரி'யை (purchase history) வைத்தே இணையத் தேடு பொறியான கூகுள் சுலபமாகக் கண்டறிந்து விடும் என்றும் கூறப்படுகிறது. 

இதற்கென்றே பிரத்யேகமாக இருக்கும் `பிரைவேட் வெப் டூல்' (private web tool) மூலம் இந்தத் தகவல்களை அறிய முடியும். மேலும், ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருளை வாங்கிய பின்னர், சம்பந்தப்பட்டவர்களின் கூகுள் மெயிலுக்கு வரும் பொருள்களை வாங்கியதற்கான ரசீதுகளும் (purchase receipts) இந்தத் தகவலைக் கண்டறிய உதவுகின்றன. 

அதேசமயம் இந்தத் தகவல்களைத் தனிப்பட்ட விளம்பரப் பயன்பாட்டுக்காகப் பயன்படுத்துவதில்லை என்று மறுத்துள்ள கூகுள்,  ஜிமெயில் தகவல்கள் மூலம் பெறப்படும் டேட்டாக்களை விளம்பரப் பயன்பாட்டுக்காக உபயோகிப்பதை 2017-ம் ஆண்டு முதலே நிறுத்திவிட்டதாகத் தெரிவித்துள்ளது. 

`` ஆன்லைன் மூலம் நீங்கள் வாங்க நினைக்கும் பொருள்களை எளிதாகக் கண்டறியத்தான், உங்களது பர்சேஸ்கள், புக்கிங்குகள் மற்றும் சந்தாக்களை (subscriptions) கண்காணித்து, உங்களுக்காக உருவாக்கப்பட்ட தனிப்பட்ட இடத்தில் அந்தத் தகவல்களைச் சேமிக்கிறோம். இவற்றை நீங்கள் மட்டுமே பார்க்க முடியும்.

ஆன்லைன் பர்சேஸ் - கூகுள் பார்வையிலிருந்து நீங்கள் தப்ப முடியாது! 

நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இந்தத் தகவல்களை அழிக்க முடியும். உங்களிடத்தில் விளம்பரங்களைக் கொண்டு வருவதற்காக உங்களது ஜிமெயில் தகவல்கள் எதையும் நாங்கள் பயன்படுத்துவதில்லை. இதில், மெயில் மூலம் உங்களுக்கு அனுப்பப்படும் ரசீதுகள் மற்றும் நீங்கள் பர்சேஸ் பக்கத்தில், பொருளை நீங்கள் பெற்றுக்கொண்டதை உறுதிப்படுத்துவதைக் காட்டும் தகவலும் (confirmations) அடங்கும் " என கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேசமயம், இவ்வாறு நமது ஆன்லைன் பர்சேஸ் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் இந்த வெப் டூல் எவ்வளவு காலத்துக்குப் பயன்பாட்டில் இருக்கும் என்பதை கூகுள் தெரிவிக்கவில்லை. இதனிடையே கடந்த 14-ம் தேதி முதல் தனது மொபைல் ஆப்பின் முகப்பு பக்கத்தில், விளம்பரங்கள் தெரிவதை கூகுள் அனுமதித்துள்ளது. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு