Published:Updated:

`கடனே வேணாம்!' - `அப்டேட் ஆர்வலர்' முகேஷ் அம்பானி சொல்லும் செய்தி!

ரிலையன்ஸ் ரீடெய்ல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் அடுத்த ஐந்தாண்டுகளில் பங்குச் சந்தையில் தனியாகப் பட்டியலிடப்படும் என்றும் அம்பானி அறிவித்திருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

காலத்துக்கேற்ப மாற்றம் காணும் தொழில்கள்தான் என்றைக்கும் நிலைத்து நிற்கும். காலத்தின் தேவைக்கேற்ப நிறுவனத்தையும் நிறுவனத்தின் தயாரிப்புகளையும் மாற்றியமைக்கிற நிறுவனமே லாபத்தைச் சம்பாதிக்கக்கூடிய நிறுவனமாக இருக்கும். இதை யார் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறார்களோ இல்லையோ, ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மிகச் சரியாகவே புரிந்துகொண்டிருக்கிறார் என்பது கடந்த 11-ம் தேதி நடந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் 42-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் தெளிவாகத் தெரிந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே புதிய தொழிலில் களம் இறங்குவது, வாடிக்கையாளர்களுக்குப் பல சலுகைகள் வழங்குவது என்பதாகவே ரிலையன்ஸின் ஏ.ஜி.எம் கூட்டம் இருந்தது. https://bit.ly/2KHFEdi

செல்போன் சந்தையைத் தலைகீழாக மாற்றியமைத்த ரிலையன்ஸ் ஜியோ, தற்போது பிராட்பேண்ட் துறையிலும் களமிறங்குகிறது. வருகிற செப்டம்பர் 5 முதல் ஜியோ ஃபைபர் செயல்பாட்டுக்கு வரும் என அம்பானி தெரிவித்திருக்கிறார். 100 எம்.பி.பி.எஸ் வேகமுள்ள பிராட்பேண்ட் மாதத்துக்கு ரூ.700 கட்டணத்தில் கிடைக்கும். அதிகபட்சம் ரூ.10,000 வரையில் திட்டங்கள் உள்ளன. முழுக் கட்டண விவரம் திட்டம் அமல்படுத்தும்போது வெளியிடப்படும் எனக் கூறினார்.

வழக்கமான பொதுக்கூட்டமாக அல்லாமல் காலத்தின் தேவைக்கேற்ப இந்தக் கூட்டத்தை நடத்தி இருக்கிறார் முகேஷ்

இந்த பிராட்பேண்ட் இணைப்பில் லேண்ட்லைன் அழைப்புகள் இலவசமாகும். இதில் ஓ.டி.டி (overthetop) சேவைகளும் வழங்கப்படும். ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு ஹெச்.டி செட்டாப் பாக்ஸ் அல்லது டிவி வழங்கப்படும். தியேட்டரில் படம் வெளியாகும் நாளிலேயே ஜிஃபைபர் வாடிக்கையாளர்கள் தங்களது இல்லங்களில் அந்தப் படத்தைப் பார்க்கலாம். இந்த வசதி அடுத்த ஆண்டு மத்தியில் அறிமுகமாகுமாம்.

மேலும், ரிலையன்ஸ் ரீடெய்ல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் அடுத்த ஐந்தாண்டுகளில் பங்குச் சந்தையில் தனியாகப் பட்டியலிடப்படும் என்றும் அம்பானி அறிவித்திருக்கிறார். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் 10 ஆண்டுகள் இணைய ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இதன்மூலம் மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் மற்றும் ஆஸ்யூர் ஆகிய புராடக்ட்டுகளை ஜியோ மூலம் வழங்கத் திட்டமிட்டிருக்கிறது. ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டத்தில் மைக்ரோசாஃப்ட் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெள்ளாவும் வீடியோ கான்ஃபரன்ஸில் பேசியது சிறப்பம்சம். வழக்கமான பொதுக்கூட்டமாக அல்லாமல் காலத்தின் தேவைக்கேற்ப இந்தக் கூட்டத்தை நடத்தி இருக்கிறார் முகேஷ். எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும், கடன் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான் முகேஷ் சொல்லும் செய்தி!

Ambani
Ambani

- இந்தக் கூட்டத்தில், தற்போது நிறுவனத்தின் நிதி நிலைமையை மேம்படுத்துவதற்குத் தேவையான பல முக்கியமான அறிவிப்புகளை முகேஷ் அம்பானி வெளியிட்டிருக்கிறார். இதனால் கடந்த செவ்வாய்க்கிழமை பங்கு வர்த்தகத்தில் சென்செக்ஸ் 623 புள்ளிகள் சரிந்திருந்தாலும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலை 10 சதவிகிதத்துக்குமேல் உயர்ந்தது. இதனால் அந்தக் குழுமத்தின் மொத்தச் சந்தை மதிப்பு மீண்டும் ரூ.8 லட்சம் கோடியைத் தாண்டியது.

குறிப்பாக, ரிலையன்ஸின் பங்கு விலை உயர்வுக்கு முக்கியமான காரணம், அந்த நிறுவனத்தின் ஆயில் மற்றும் கெமிக்கல் பிரிவைத் தனியாகப் பிரிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதுதான். சவுதி அரம்கோ நிறுவனம் ரூ.1.03 லட்சம் கோடியை முதலீடு செய்து, ரிலையன்ஸ் நிறுவனத்தின் 20% பங்குகளை வாங்கவிருக்கிறது. அதுகுறித்த விரிவான பின்னணியுடன் வாசு கார்த்தி எழுதியுள்ள முழு அலசலை நாணயம் விகடன் இதழில் வாசிக்க > கச்சா எண்ணெய் To தகவல் பரிமாற்றம்... காலத்துக்கேற்ப மாறும் முகேஷ் அம்பானி! https://www.vikatan.com/news/general-news/business-strategy-of-mukesh-ambani

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு