Published:Updated:

உலக முதலீட்டாளர்கள் வாரம்: சரியாக முதலீடு செய்ய செபி சேர்மன் கொடுத்த டிப்ஸ்கள்..!

செபி சேர்மன்
News
செபி சேர்மன்

முதலீடுகளை பிரித்து பல்வேறு சொத்து பிரிவுகளில் (ரியல் எஸ்டேட், தங்கம், பங்குச் சந்தை, கடன் பத்திரங்கள்) டைவர்சிஃபைட் முறையில் முதலீடு செய்வது நல்ல லாபத்தை தரும்

உலக முதலீட்டாளர்கள் வாரம்: சரியாக முதலீடு செய்ய செபி சேர்மன் கொடுத்த டிப்ஸ்கள்..!

முதலீடுகளை பிரித்து பல்வேறு சொத்து பிரிவுகளில் (ரியல் எஸ்டேட், தங்கம், பங்குச் சந்தை, கடன் பத்திரங்கள்) டைவர்சிஃபைட் முறையில் முதலீடு செய்வது நல்ல லாபத்தை தரும்

Published:Updated:
செபி சேர்மன்
News
செபி சேர்மன்

உலக முதலீட்டாளர்கள் வாரம் (World Investors Week) அக்டோபர் 10 முதல் அக்டோபர் 17 வரை கடைபிடிக்கப்படுகிறது. இந்த வாரத்தில் பொதுவாக முதலீட்டாளர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் கட்டுப்பாட்டு அமைப்பான செபி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அதில் ஒரு பகுதியாக செபி அமைப்பின் சேர்மன் மதாபி பூரி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

முதலீடு
முதலீடு

அதில் முதலீட்டாளர்கள் தமது முதலீட்டு முடிவுகளை சரியான முறையில் தேர்ந்தெடுத்து முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

 வதந்திகளை நம்பக் கூடாது..!

வதந்திகளை நம்பி முதலீட்டு முடிவுகளை எடுப்பதை முதலீட்டாளர்கள் கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

 செபி அமைப்பின் அங்கீகரிக்கப்பட்ட வழிகளில் மட்டுமே முதலீட்டாளர்கள் முதலீட்டினை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் முதலீடுகளை பிரித்து பல்வேறு சொத்து பிரிவுகளில் (ரியல் எஸ்டேட், தங்கம், பங்குச் சந்தை, கடன் பத்திரங்கள்)  டைவர்சிஃபைட்  முறையில் முதலீடு செய்வது நல்ல லாபத்தை தரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 செபி அமைப்பு நாட்டின் வளர்ச்சிக்கு கடந்த காலங்களில் முக்கிய பங்களிப்பை செய்திருக்கிறது. தற்போது நமது நாட்டில் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதை மொத்த டிமேட் கணக்குகள் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதனால் முதலீட்டாளர்கள் தமது முதலீட்டு முடிவுகளை எடுக்கும் பொழுது நன்கு ஆராய்ந்து தக்க நிதி நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

செபி
செபி

 செபி அமைப்பு உலக முதலீட்டாளர்கள் வாரத்தை உலக நாடுகளுடன் சேர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் கொண்டாடி வருகிறது. பங்குச் சந்தையில் ஒரு சிலர் நல்ல லாபத்தை பார்த்தாலும் பெரும்பாலான மக்கள் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் தவறான பங்குகளில் முதலீடு செய்து பெரும் நஷ்டத்தை சந்திக்கின்றனர். மேலும் பங்கு சந்தை என்றால் சூதாட்டம் என்பது போன்ற தவறான கருத்துக்களும் ஒரு சில மக்களிடம் உள்ளது.

நமது நாட்டில் பங்கு சந்தையில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கினாலும் வளர்ந்த நாடுகளை ஒப்பிட்டால் நமது நாட்டில் பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து உள்ளது. அதற்கு பங்கு சந்தை குறித்தான போதிய அறிவு முதலீட்டாளர்களிடம் இல்லாமல் இருப்பதே காரணமாகும். மேலும் பங்கு சந்தை சார்ந்து நடக்கும் பித்தலாட்டங்களும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அதனால் முதலீட்டாளர்களிடம் சரியான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் செபி அமைப்பு இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.