Published:Updated:

நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி! தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்தது...

தங்கம்
News
தங்கம்

இந்த வார தொடக்கத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்தது, வாடிக்கையாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் கடந்த இரண்டு நாள்களாக தங்கத்தின் விலை குறைந்து வருவது வாடிக்கையாளர்களுக்கு ஆறுதலையும் மகிழ்ச்சியையும் தந்துள்ளது.

இந்திய மக்கள் அதிக அளவில் முதலீடு செய்வதும், விரும்பி அணியும் அணிகலனாகவும் தங்கம் உள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்கம்
தங்கம்
EquityPandit

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. ஜூலையில், மத்திய அரசு தங்கத்துக்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் உயர்ந்தது. பின்னர், ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

இந்த வாரத் தொடக்கத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை திடீரென உயர்ந்தது, டிசம்பர் 2-ம் தேதி தங்கம் விலை ஒரு சவரன் 40,000-ஐ தாண்டியது. வாடிக்கையாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் கடந்த இரண்டு நாள்களாக தங்கத்தின் விலை குறைந்து வருவது வாடிக்கையாளர்களுக்கு ஆறுதலையும் மகிழ்ச்சியையும் தந்துள்ளது.

இந்நிலையில், இன்று (டிச. 6-ம் தேதி) காலை நிலவரப்படி ஒரு சவரன் ரூ.280 குறைந்து, ரூ.40.080-க்கு விற்பனையாகிறது. கிராம் ஒன்றுக்கு ரூ.35 குறைந்து ரூ.5010 ஆக விற்பனையாகிறது.

நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி!  தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்தது...

இன்று வெள்ளியும் கிலோவுக்கு ரூ.1,700 குறைந்து ரூ.70,800-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1.70 காசுகள் குறைந்து ரூ.70.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய ( 6.12-2.022) நிலவரப்படி

தங்கம் கிராம் ரூ.5,010-க்கும்,

தங்கம் ஒரு சவரன் ரூ.40,080-க்கும்,

வெள்ளி கிராம் 70.80-க்கும்,

ஒரு கிலோ வெள்ளி ரூ.70,800-க்கும் விற்பனையாகிறது.