மத்திய அரசு அஞ்சலகங்களில் உள்ள சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை ஒவ்வொரு காலாண்டுக்கும் மாற்றி அமைக்கும். இதன்படி, அடுத்த காலாண்டுக்கான (2023-ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை) சிறுசேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்களை மத்திய அரசு நேற்று அறிவித்தது.

மத்திய அரசு மேலே குறிப்பிடுள்ள சிறுசேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதத்தை கடந்த செப்டம்பர் மாதம் 10 - 30 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது.
இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்படி, இந்த சிறுசேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்கள் அரசுப் பத்திரங்களின் வருவாய் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன.

அரசு பத்திரங்களின் வருவாய் குறைவாக இருந்தாலும், இப்போது மத்திய அரசு சிறுசேமிப்புத் திட்டங்களுக்கு அதிக வட்டி விகிதங்களை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள காலாண்டு அறிவிப்பின்படி, சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் 1.1% உயர்த்தப்பட்டிருக்கிறது.