Published:Updated:

2022-23-ல் புதிய சாதனை: இந்தியாவில் மின்சார உற்பத்தி 30 ஆண்டுகளைவிட உயர்வு!

மின் வாரியம்

கடுமையான கோடை வெப்பம், வழக்கத்தைவிட வட இந்தியாவில் குளிர்காலத்தில் அதிகம் குளிர்வது, கொரோனாவுக்குப் பிறகு பொருளாதாரத்தில் மீண்டு வருவது ஆகியவை மின்சார தேவையை அதிகரித்துள்ளது.

Published:Updated:

2022-23-ல் புதிய சாதனை: இந்தியாவில் மின்சார உற்பத்தி 30 ஆண்டுகளைவிட உயர்வு!

கடுமையான கோடை வெப்பம், வழக்கத்தைவிட வட இந்தியாவில் குளிர்காலத்தில் அதிகம் குளிர்வது, கொரோனாவுக்குப் பிறகு பொருளாதாரத்தில் மீண்டு வருவது ஆகியவை மின்சார தேவையை அதிகரித்துள்ளது.

மின் வாரியம்

இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2022-23 நிதியாண்டில் மின்சாரம் அதிகம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்று ஆய்வறிக்கை கூறுகிறது.

ராய்ட்டர்ஸ் என்னும் செய்தி நிறுவனம் இந்தியாவின் மின்சாரம் உற்பத்தி குறித்து அரசின் தரவுகள் வைத்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, 2022-23 நிதியாண்டில் 1,591.11 பில்லியன் கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது 11.5% உயர்வாகும். மேலும் 1990-ம் ஆண்டுக்குப் பிறகு, இது மிகப்பெரிய மின்சார உற்பத்தி வளர்ச்சி ஆகும்.

நெய்வேலி அனல் மின் நிலையம்
நெய்வேலி அனல் மின் நிலையம்
எஸ்.தேவராஜன்

புதைப்படிவ எரிபொருள்களில் இயங்கும் ஆலைகள் 11.2% அதிக மின்சாரமும், நிலக்கரி மின்சார ஆலைகள் 12.4% அதிக மின்சாரமும் உற்பத்தி செய்து வருகிறது. உலக அளவில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் திரவ இயற்கை எரிவாயுவான LNG-யின் விலை அதிகரித்துள்ளதால், தற்போது எரிவாயு மின்சார உற்பத்தி ஆலைகளில் மின்சார உற்பத்தி 28.7% குறைந்துள்ளது.

கடுமையான கோடை வெப்பம், வழக்கத்தைவிட வட இந்தியாவில் குளிர்காலத்தில் அதிகம் குளிர், கொரோனாவுக்குப் பிறகு, பொருளாதாரத்தில் மீண்டு வருவது ஆகியவை மின்சார தேவையை அதிகரித்துள்ளது. ஆகையால், மின்வெட்டுகளை தவிர்ப்பதற்காக நிலக்கரி ஆலைகள் மற்றும் சோலார் பண்ணைகளில் அதிக மின்சார உற்பத்தி செய்ய வேண்டியதாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2023-24 நிதியாண்டில் இந்தியாவில் மின்சார உற்பத்திக்காக 8% அதிக நிலக்கரி பயன்படுத்தப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.