Published:Updated:

``நாகர்கோவில்... வரி வருவாய் 35% வளர்ச்சி!" தமிழ்நாடு வருமான வரி முதன்மை ஆணையர் தகவல்!

வருமானவரி அலுவலகம் திறப்புவிழா

``தமிழ்நாட்டில் 74 லட்சம் மக்கள் வரி செலுத்துகிறார்கள். அகில இந்திய அளவில் வரி செலுத்துவதில் நான்காவது இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது." - தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரி முதன்மை ஆணையர் ரவிச்சந்திரன் ராமசாமி

Published:Updated:

``நாகர்கோவில்... வரி வருவாய் 35% வளர்ச்சி!" தமிழ்நாடு வருமான வரி முதன்மை ஆணையர் தகவல்!

``தமிழ்நாட்டில் 74 லட்சம் மக்கள் வரி செலுத்துகிறார்கள். அகில இந்திய அளவில் வரி செலுத்துவதில் நான்காவது இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது." - தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரி முதன்மை ஆணையர் ரவிச்சந்திரன் ராமசாமி

வருமானவரி அலுவலகம் திறப்புவிழா

நாகர்கோவிலில் வருமான வரி புதிய அலுவலகம் கட்டப்பட்டு, அதன் திறப்புவிழா இன்று நடந்தது. டெல்லி வருமான வரி மற்றும் வருவாய் உறுப்பினர் சங்கீதாசிங் குத்துவிளக்கேற்றி புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு, புதுச்சேரி வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் ராமசாமி, மதுரை வருமான வரி தலைமை ஆணையர் சீமாராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

பின்னர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரி முதன்மை ஆணையர் ரவிச்சந்திரன் ராமசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில்,

``வருமான வரி அலுவலகத்துக்கு நிறைய இடவசதியை ஏற்படுத்த வேண்டும் எனத் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம். புதிய அலுவலகங்கள் நிறைய திறந்துகொண்டிருக்கிறோம். ஈரோடு, திருப்பூரில் புதிய அலுவலகம் வேலை நடந்துகொண்டிருக்கிறது. திருவண்ணாமலையில் சமீபத்தில் ஓர் அலுவலகம் திறந்துள்ளோம். அதைத் தொடர்ந்து நாகர்கோவிலிலும் 13,000 சதுர அடியில் அலுவலகம் திறந்துள்ளோம்.

டெல்லி வருமானவரி மற்றும் வருவாய் உறுப்பினர் சங்கீதாசிங் பேசும் போது..
டெல்லி வருமானவரி மற்றும் வருவாய் உறுப்பினர் சங்கீதாசிங் பேசும் போது..

இந்த மண்டலத்தில் ரூ.230 கோடி வரி வருவாய் வருகிறது. வருடம்தோறும் வருவாய் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 23% வரி வருமான வருவாய் அதிகரித்துள்ளது. நாகர்கோவிலைப் பொறுத்தவரை 35% வருவாய் வளர்ச்சி வந்துள்ளது. இது தமிழ்நாட்டின் வரி வளர்ச்சியைவிட அதிகமாக இருக்கிறது.

வருவாய் அதிகமாக இருப்பதால் மக்களும் அதிகமாக வரி கட்டுகிறார்கள். அவர்களின் வசதிக்காக ஆஸ்க் (ASK) என்கிற வரி தொடர்பான தகவல்களைத் தெரிந்துகொள்ளும் மையத்தைத் திறந்திருக்கிறோம். வருமான வரி தாக்கல் செய்தல், ரிட்டன்ஸ் போன்றவற்றில் எந்த பிரச்னையாக இருந்தாலும் மக்கள் இந்த மையத்தை அணுகலாம்.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வரி வருவாய் எதிர்பார்ப்பு, ரூ.1,08,800 கோடி. அதில் ரூ.1,08,500 கோடி வசூலித்திருக்கிறோம். வரி வருவாய் ஒவ்வொரு வருடமும் 10% அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் 12% அதிகரித்து வருகிறது.

தமிழ்நாட்டில் 74 லட்சம் மக்கள் வரி செலுத்துகிறார்கள். அகில இந்திய அளவில் வரி செலுத்துவதில் நான்காவது இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. நிறையபேர் டி.டி.எஸ் செலுத்தி வருகிறார்கள்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரி முதன்மை ஆணையர் ரவீந்திரன் ராமசாமி பேசும் போது..
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரி முதன்மை ஆணையர் ரவீந்திரன் ராமசாமி பேசும் போது..

எல்லாவற்றையும் எளிமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். எளிதில் வருமான வரி ஃபைல் பண்ண வசதி செய்துள்ளோம். ரீஃபண்டும் மூன்று மணி நேரத்தில் வந்துவிடுகிறது.

இந்த வருடம் அதிகபட்சமான ரீஃபண்ட் கொடுத்திருக்கிறோம். முந்தைய காலத்தில் கொடுக்காத ரீஃபண்ட் எல்லாம் இப்போது கொடுத்திருக்கிறோம். கடந்த ஆண்டைவிட 40% அதிகமாக ரீஃபண்ட் கொடுத்துள்ளோம்.

வரி செலுத்துபவர்கள் எளிமையாக வருமான வரி ஃபைல் செய்ய வேண்டும். புதிய வருமான வரித் திட்டம் எளிமையானதுதான். வருமானவரி கட்டாதவர்கள் குறித்த தகவல்களை சேகரித்து வருகிறோம். வருமான வரி செலுத்தாதவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், கோர்ட் மூலமாக சட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்" என்றார்.