நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

தொழிலில் திடீர் சரிவு வந்தால், நஷ்டப்படாமல் தப்பிக்க ஈஸி வழி!

எஸ்.எம்.இ இன்ஷூரன்ஸ் விழிப்புணர்வு...
பிரீமியம் ஸ்டோரி
News
எஸ்.எம்.இ இன்ஷூரன்ஸ் விழிப்புணர்வு...

எஸ்.எம்.இ இன்ஷூரன்ஸ்

நிவேதா. நா

இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் பெரும்பங்கு ஆற்றுபவர்கள் எம்.எஸ்.எம்.இ என்று சொல்லப்படுகிற சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்முனை வோர்கள்தாம். ஆனால், அவர்கள் தங்கள் தொழிலைக் கவனிப்பதுபோல, குடும்பத்தைக் கவனிப்பதில்லை என்பது கசப்பான உண்மை. நன்றாக நடந்துவரும் தொழிலானது ஏதோ ஒரு காரணத்தில் திடீரென முடங்கிப் போனால், தன்னையே நம்பியிருக்கும் குடும்ப உறுப் பினர்கள் என்ன ஆவார்கள் என்பதை நினைத்துப் பார்ப்பதே இல்லை. தொழிலில் இருக்கும் நெருக்கடியானது அவர்கள் தொழிலைத் தவிர வேறு எது பற்றியும் யோசிக்க விடுவதில்லை.

இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு என்பதை எடுத்துச் சொல்லும் ஒரு கருத்தரங்கம் சென்னையில் உள்ள ஆந்திரா சாம்பர் ஆஃப் காமர்ஸில் (Andhra Chamber of Commerce) கடந்த 13-ம் தேதி அன்று நடந்தது. ‘ஃபைனான்ஷியல் புரட்டக்‌ஷன் டு ஆன்ட்ரபிரனர் அண்ட் ஃபேமிலி’ (Financial Protection to Entrepreneurs and Family) என்ற தலைப்பில் நடந்த இந்தக் கூட்டத்தில், சிறுதொழில் முனைவோர்கள் மற்றும் அவர்களின் குடும்பப் பொருளா தாரத்துக்கு பாதுகாப்பு அளிக்கும் பல்வேறு விஷயங்கள் எடுத்துச் சொல்லப்பட்டன.

இந்தக் கருத்தரங்கில் முதலில் பேசினார் கோட்டக் மஹிந்திரா வங்கியின் துணைத் தலைவர் நாகராஜ் கிருஷ்ணமூர்த்தி.

தொழிலில் திடீர் சரிவு வந்தால், 
நஷ்டப்படாமல் தப்பிக்க ஈஸி வழி!

‘‘இந்தக் கருத்தரங்கத்தின் முக்கிய நோக்கமே தொழில் முனைவோருக்கான இன்ஷூரன்ஸ் பாலிசியான எம்பிளாயர் - எம்பிளாயி பெனிஃபிட் (employer- employee benefit), கீமேன் இன்ஷூரன்ஸ் (Keyman Insurance), பாட்னர்ஷிப் இன்ஷூரன்ஸ் (Partnership Insurance), ஹெச்.யு.எஃப் (HUF) மற்றும் எம்.டபிள்யூ.பி.ஏ. (MWPA) திட்டங்களைப் பற்றி எடுத்துச் சொல்வதற்குத்தான்.

ஒரு நிறுவனத்தின் ஊழியர்களை ஃபிரன்ட்லைன் ஊழியர்கள், மிடில்லைன் ஊழியர்கள் மற்றும் அப்பர்மிடில் லைன் ஊழியர்கள் என மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். ஒரு நிறுவனத்தில் பெரும்பாலும் மிடில்லைன் மற்றும் அப்பர் மிடில்லைன் ஊழியர்களுக்கே முக்கியத்துவம் தரப்படும். ஏனெனில், அவர்கள்தாம் மேனேஜர் போன்ற பதவிகளில் இருக்கும் நிறுவனத்தின் நிரந்தர ஊழியர்கள் ஆவர்.

ஆனால், ஃபிரன்ட்லைன் ஊழியர்கள் எப்போது வேண்டு மானாலும் அந்த நிறுவனத்தின் வேலையை விட்டுவிட்டு, வேறு நிறுவன வேலைக்குச் செல்லலாம். அதனால் ஃபிரன்ட் லைன் தொழிலாளர்களைவிட மற்ற இரு தொழிலாளர்களுக்கு இன்ஷூரன்ஸ் கவரேஜை அதிகமாக நிறுவனங்கள் எடுக்கும்.

இந்த இன்ஷூரன்ஸ் பாலிசிக்கான செக்கை 25-க்கும் மேற்பட்ட நிரந்தரப் பணியாளர்களுக்காக நிறுவனம் தரும்பட்சத்தில் பிரிவு 32(1)-கீழ் அந்த நிறுவனம் கட்டும் வருடப் பிரீமியத்துக்கான வரி முழுவது மாக ரத்து செய்யப்படும்.

சில நிறுவனங்கள் ஐந்து வருடத்துக்குமேல் பணிபுரியும் ஊழியர்களுக்கு இன்ஷூ ரன்ஸுக்கான பிரீமியம் கட்டி வரும். அந்த ஊழியர் திடீரென வேலையை விட்டு, வெளியேறும்போது அந்த பிரீமியம் தொகையை லாபக் கணக்கில் இருந்து கழித்துவிட்டு, மீதமுள்ள தற்கு மட்டும் வரி கட்டினால் போதும்.

இந்த பாலிசியை நிறுவனத்தின் தலைவரும் தன்னை நிறுவனத் தின் ஊழியராகச் சேர்த்துக் கொண்டு எடுக்கலாம். உதாரண மாக, ஒரு நிறுவனத்தில் நான்கு இயக்குநர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இவர்கள் தலா ரூ.10 லட்சம் என பிரீமியம் கட்டுகிறார்கள். இந்த நிறுவனத்துக்கு ரூ.3 கோடி லாபம் வருகிறது எனில், ரூ.3 கோடி லாபத்தில் ரூ.40 லட்சத்தைக் கழித்துவிட்டு, மீதமுள்ள ரூ.2.6 கோடிக்கு மட்டும் வரி செலுத்தினால் போதும். இது மட்டும் இல்லாமல், ரூ.10 லட்சம் பிரீமியம் கட்டும்போது, பாலிசியைப் பொறுத்து ரூ.1 கோடி முதல் ரூ.1.5 கோடி வரை அவர்களுக்கு கவரேஜ் கிடைக்கும்.

ஒரு நிறுவனத்தை இரண்டு பார்ட்னர்கள் சேர்ந்து நடத்து கிறார்கள்; பிறகு, ஏதோ ஒரு காரணத்துக்காக ஒரு பார்ட்னர் தொழிலில் இருந்து விலகுகிறார். பார்ட்னர்களின் எண்ணிக்கை குறையும்போது அந்த நிறுவனத்தின் நிலைத்தன்மை ஆட்டம்காணும். மேலும், எஞ்சி இருக்கும் பார்ட்னர் மீதே அனைத்து சுமைகளும் வந்துவிழும்.

இந்தச் சூழ்நிலையில்தான் ‘பார்ட்னர்ஷிப் இன்ஷூரன்ஸ்’ தேவைப்படுகிறது. இதில் இரண்டு பார்ட்னர்களுக்குமே அவரவர் முதலீடுகள், வருட லாபம் மற்றும் வருட டேர்ன்ஓவரைக் கணக்கிட்டு, பார்ட்னர்ஷிப் இன்ஷூரன்ஸ் வழங்கப்படும். ஒரு பார்ட்னர் இல்லாமல் போகும் பட்சத்தில், நிறுவனம் தடுமாறாமல் செயல்பட, இந்த பார்ட்னர்ஷிப் இன்ஷூரன்ஸ் நிச்சயம் உதவும்” என்றார்.

அடுத்து பேச ஆரம்பித்தார் கோட்டக் மஹிந்திரா வங்கியின் சீனியர் டெபிட்டி வைஸ் பிரசிடென்ட் ஜி.பாலமுருகன். கீ பெர்சன் இன்ஷூரன்ஸ் பாலிசி பற்றி அவர் பேசினார்.

‘‘கீ பெர்சன் இன்ஷூரன்ஸ் பாலிசி’ என்பது நிறுவனத்தின் முக்கிய நபர் மீது எடுக்கப் படுவதாகும். ஒரு நிறுவனத்தின் ‘கீ பெர்சன்’ என்பது அந்த நிறுவனத்தின் சேர்மன், மேனேஜிங் டைரக்டர், சி.இ.ஓ போன்றோர்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ஒரு ஹோட்டலில் ‘கீ பெர்சன்’ என்பது தலைமை சமையல்காரராகக்கூட இருக்கலாம். அவர் இல்லாமல் போகும் நேரத்தில் அந்தத் தருணத்தைச் சமாளிக்க இந்த பாலிசி நிறுவனத்துக்குப் பெரிய உதவியாகச் செயல்படும்.

தொழிலில் திடீர் சரிவு வந்தால், 
நஷ்டப்படாமல் தப்பிக்க ஈஸி வழி!

‘மேரிட் வுமன் பிராபர்ட்டி ரைட்’ என்பது இன்னொரு அருமையான இன்ஷூரன்ஸ் திட்ட மாகும். இந்தத் திட்டத்தைத் திருமணமான ஒரு பெண் எடுத்திருந்தால், அவர் கணவர் நடத்தும் நிறுவனத்துக்கோ, அதன் நிறுவனருக்கோ ஏதாவது அசம்பாவிதம் நிகழும்பட்சத்தில் இந்த பாலிசியின் மூலம் இழப்பீடு கிடைக்கும். இந்த இழப்பீட்டின் மூலம் கிடைக்கும் பணத்தை நீதிமன்றத்தால்கூட ஜப்தி செய்ய இயலாது. நடிகர் அமிதாப் பச்சனின் ஏ.பி.சி நிறுவனம் சரிந்தபோது, இந்த பாலிசியின் மூலம் தன் மனைவிக்கு கிடைத்த பணத்தைக் கொண்டுதான் அமிதாப் மீண்டு வந்தார் என்பது பலருக்கும் தெரியாத உண்மை.

அடுத்து, ஹெச்.யு.எஃப் என சுருக்கமாகச் சொல்லப் படுகிற ‘ஹிந்து அண்டிவிடண்ட் ஃபேமிலி’ ஆகும். தொழில்முனைவோர்கள் இந்த ஹெச்.யு.எஃப் மூலம் கணிசமான வரிச் சலுகையைப் பெற முடியும். பொதுவாக, பான் கார்டு வைத்திருப்பவர் ரூ.1.5 லட்சம் ரூபாய் வரைக்கும் வரி கட்ட தேவையில்லை. ‘ஹிந்து அண்டிவிடண்ட் ஃபேமிலி’யின் படி, பான் கார்டு வைத்திருப்பவர் மேலும் ரூ.1.5 லட்சத்துக்கு வரி கட்டத் தேவை இல்லை. இதில் கர்த்தாவாக குடும்பத்தின் மூத்த நபர் இருப்பார்’’ என்று பேசி முடித்தார்.

இந்தக் கருத்தரங்கில் வரவேற்புரை நிகழ்த்தினார் சிறுதொழில்முனை வோர்களுக்கு ஆலோசகரான ஆனந்த். சிறுதொழில்முனைவோர்கள் தங்கள் தொழிலுக்கும் குடும்ப உறுப்பினர் களுக்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடு களைச் செய்துகொள்ளத் தயங்கக் கூடாது என்றார். சிறுதொழில் முனைவோர்கள் அவசியம் எடுக்க வேண்டிய இன்ஷூரன்ஸ் பாலிசிகள் பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்வதாக அமைந்திருந்தது இந்த நிகழ்ச்சி.