Published:Updated:

கின்னஸ் சாதனை படைத்த எலான் மஸ்க்... எதற்கு என காரணம் தெரியுமா?

எலான்  மஸ்க்
News
எலான் மஸ்க்

அதிக பணம் வைத்திருப்பவர் என்ற பட்டியலில் கின்னஸ் சாதனை படைத்திருக்கலாம் என நீங்கள் நினைக்கலாம். அதுதான் இல்லை; வரலாற்றிலேயே மிகப்பெரிய தனிப்பட்ட செல்வத்தை இழந்தவர்களின் சாதனையை (Largest loss of personal fortune) இவர் முறியடித்து இருக்கிறார்.

திறமையானவர்களையும், தனித்த சிறப்பியல்புகளோடு உள்ளவர்களையும் கின்னஸ் உலக சாதனை தொடர்ந்து அங்கீகரித்து வருகிறது. அந்த வகையில் தொழில்நுட்ப உலகத்தில் டாக் ஆஃப் த டவுனாக இருக்கும் எலான் மஸ்க் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

கின்னஸ் 
உலக சாதனை
கின்னஸ் உலக சாதனை

அதிக பணம் வைத்திருப்பவர் என்ற பட்டியலில் கின்னஸ் சாதனை படைத்திருக்கலாம் என நீங்கள் நினைக்கலாம். அதுதான் இல்லை; வரலாற்றிலேயே மிகப்பெரிய தனிப்பட்ட செல்வத்தை இழந்தவர்களின் சாதனையை (Largest loss of personal fortune) இவர் முறியடித்து இருக்கிறார். 

தன்னுடைய செல்வத்தில் இருந்து, நவம்பர் 2021 முதல் சுமார் 182 பில்லியன் அமெரிக்க டாலரைக் குறுகிய காலத்திலேயே இழந்தார். ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட ஆய்வுத் தகவலின் படி, 2021-ல் 320 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த எலான் மஸ்கின் சொத்து மதிப்பு, 2023 ஜனவரியில் 138 பில்லியன் அமெரிக்க டாலராகக் குறைந்தது.

டெஸ்லாவின் பங்குகள் சரியாகச் செயல்படாதது, ட்விட்டரை வாங்க டெஸ்லாவின் பங்குகளை விற்றது இவரின் சொத்து மதிப்பு குறைந்ததற்கு மிகப்பெரிய காரணமாகக் கருதப்படுகிறது.

தொடர் துரதிர்ஷ்டம் இவரை உலகின் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்குத் தள்ளியது. முதலிடத்தை லூயிஸ் வூய்ட்டன் நிறுவனத் தலைவரான பெர்னார்ட் அர்னால்ட் குடும்பம் பிடித்தது. 

ஜப்பானிய தொழில்நுட்ப முதலீட்டாளர் மசயோஷி சன் 58.6 பில்லியன் அமெரிக்க டாலரை இழந்து 2000-ல் இந்த சாதனையை படைத்திருந்த நிலையில், எலான் மஸ்க் தற்போது அந்த சாதனையை முறியடித்து இருக்கிறார். ஆனால் இது எதற்கும் அசராதவராகத்தான் எலான் மஸ்க் இருக்கிறார். `இன்னும் என்னென்ன செய்ய காத்திருக்கானோ' என்பது போல தான் இவரின் செயல்கள் உள்ளன.