Published:Updated:

"சந்தோஷமும், இனிப்பும் வேறுவேறு இல்லீங்க".. சாத்தூர் காரச்சேவு ரகசியம்!

சாத்தூர் காரச்சேவு
News
சாத்தூர் காரச்சேவு ( ஆர்.எம்.முத்துராஜ் )

அந்தக் காலத்துலேயே சாத்தூர் காரச்சேவுக்கு நல்ல பேரு உண்டு. அதனால பெருந்தலைவர் காமராஜர், அண்ணா முதல் தற்போது உள்ள அரசியல்வாதிகள் வரைக்கும் எல்லாருக்குமே சாத்தூர் காரச்சேவு மேல தனி பிரியம் இருக்கு. காரணம், இப்பவும் இந்த காரச்சேவை பாரம்பரிய முறைப்படி கையால் தயாரிக்கிறது தான்.

"சந்தோஷமும், இனிப்பும் வேறுவேறு இல்லீங்க".. சாத்தூர் காரச்சேவு ரகசியம்!

அந்தக் காலத்துலேயே சாத்தூர் காரச்சேவுக்கு நல்ல பேரு உண்டு. அதனால பெருந்தலைவர் காமராஜர், அண்ணா முதல் தற்போது உள்ள அரசியல்வாதிகள் வரைக்கும் எல்லாருக்குமே சாத்தூர் காரச்சேவு மேல தனி பிரியம் இருக்கு. காரணம், இப்பவும் இந்த காரச்சேவை பாரம்பரிய முறைப்படி கையால் தயாரிக்கிறது தான்.

Published:Updated:
சாத்தூர் காரச்சேவு
News
சாத்தூர் காரச்சேவு ( ஆர்.எம்.முத்துராஜ் )

விருதுநகர் மாவட்டத்திற்குப பல்வேறு சிறப்புகள் இருந்தாலும் "சாத்தூர் சேவு"க்கென தமிழகத்தில் தனி இடமுண்டு. தலைமுறை கடந்து சாத்தூர் சேவு நாவுக்கு ருசியூட்டும் தனிச்சிறப்பு குறித்து என்.ஆர்.கே.பேக்கரி உரிமையாளர் கருப்பசாமியிடம் பேசினோம்.

என்.ஆர்.கே.பேக்கரி உரிமையாளர் கருப்பசாமி
என்.ஆர்.கே.பேக்கரி உரிமையாளர் கருப்பசாமி
ஆர்.எம்.முத்துராஜ்

"1914-ம் ஆண்டிலேயே சாத்தூரில் சேவு உற்பத்தி தொடங்கிட்டு. சின்ன, சின்னதா ரீடெய்ல் சேல், ஹோல்சேல்னு வியாபாரம் நடக்கும். 1989-லதான்‌ நாங்க பிசினஸ்குள்ள வந்தோம். வந்த புதுசுல 50 காசுக்கு லட்டு குடுத்தோம். அதிலிருந்து என்னை எல்லாரும் 'லட்டு கருப்பசாமி'னுதான் கூப்பிடுவாங்க. பின்னாளில் அதுவே எனக்கான பெயரா எல்லாப் பக்கமும் பரவிடுச்சு. லட்டை ரீடெய்ல் பிசினஸ்க்கு எடுத்துட்டு போகும்போதுதான் எல்லாரும் 'சேவு' இருக்கானு கேட்டாங்க. அதுக்கப்புறம்தான்‌ காரச்சேவு செஞ்சு விற்பனைக்குக் கொண்டு வந்தோம். அந்த சமயத்துல சந்தையில சேவுக்கு நல்ல டிமாண்ட் இருந்துச்சு. அதனால லட்டு விற்பனையிலிருந்து, காரசேவுக்கு மாறினது எங்களுக்கு பெருசா எந்த கஷ்டமும் தரல.

அந்தக் காலத்துலேயே சாத்தூர் காரச்சேவுக்கு நல்ல பேரு உண்டு. அதனால பெருந்தலைவர் காமராஜர், அண்ணா முதல் தற்போது உள்ள அரசியல்வாதிகள் வரைக்கும் எல்லாருக்குமே சாத்தூர் காரச்சேவு மேல தனி பிரியம் இருக்கு. இது எல்லாத்துக்கும் காரணம் இப்பவும் இந்த காரச்சேவையைப் பாரம்பரிய முறைப்படி கையால் தயாரிக்கிறதுதான்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கையால் செய்றதுதான் தனி ருசி!

வசதி வந்துட்டு, தொழில் பெருசாகிட்டு, டிமாண்ட் அதிகமாகிட்டுங்கிறதுக்காக எதையும் நாங்க மிஷின் வச்சு பண்றதில்ல. இந்த ஊர்ல பலரும் மிஷின்‌மூலமா காரச்சேவு செஞ்சி விற்பனை செய்றாங்க. ஆனா, அதோட ருசி, கையால் செய்ற காரச்சேவு ருசிக்கு ஈடுகொடுக்க முடியாது. மிஷினுங்கறது பிரஷர் கொடுத்து மாவு பிசையும். ஆனா, கையால் செய்றது மாவை நைஸாக தேய்ச்சு எடுத்து செய்றது. அதனால இப்பவும், நாங்க கையாலதான் காரச்சேவு உற்பத்தி செய்றோம்.

எந்த வகையிலும், தரத்திலும், ருசியிலும் சமரசம் செய்யக் கூடாதுங்கிறதுல நான் உறுதியா இருக்கேன். அதுக்காக முதல்தர கடலை மாவு, கடலை எண்ணெய், கொடைக்கானல் வெள்ளைப்பூண்டு அல்லது கோத்தகிரி வெள்ளைப்பூண்டு விருதுநகர் மாவட்ட மானாவாரி பகுதியில் கிடைக்கும் மிளகாய் வற்றல், பெருங்காயம், நல்ல மிளகு இதை எல்லாம் பார்த்து பார்த்து பர்ச்சேஸ் பண்றோம். காரச்சேவு தயாரிக்கிறதுக்காக ஒருமுறை பயன்படுத்தின எண்ணெயை மறுமுறை பயன்படுத்த மாட்டோம்.

சாத்தூர் காரச்சேவு
சாத்தூர் காரச்சேவு
ஆர்.எம்.முத்துராஜ்

ஓலைப்பெட்டி முதல்..

ஆரம்பக் காலத்துல ரீடெய்ல் சேல்ஸ்ல 50 கிராம், 100 கிராம்னு பேப்பர்ல மடக்கிவிற்ற காலத்திலிருந்து இப்பவரைக்கும் இந்த பார்முலாவைத்தான் கடைப்பிடிக்கிறேன். சாத்தூர் சேவுத் தொழில் வெறுமனே இந்த ஊரிலுள்ள மக்களுக்கு மட்டுமான தொழில் கிடையாது. இது ஒரு கூட்டுத்தொழிலாத்தான் அந்தக் காலத்துல நடந்துச்சு. சாத்தூர், இருக்கன்குடி பகுதிகளில் பனைமரம் அதிகம் உண்டு. அந்தக் காலத்துல ஓலைப்பெட்டி, கொட்டான்கள் ரொம்ப பிரபலம். அதனால, சேவு விற்பனைக்கு பேப்பர் பொட்டலத்துக்கு பதிலா ஓலை கொட்டான்கள் முடைஞ்சி அதுல காரச்சேவு அடைச்சி விற்பனை செஞ்சோம்.

ஓலைக்கொட்டான்களில் விற்பனை செய்யுறப் பொருள் ரொம்ப நாளைக்கு மொறுமொறுப்போடும், ருசியோடையும் இருக்கும். சீக்கிரத்துல கெட்டுப்போகாது. அதனால சேவு விற்பனைக்கு ஓலைக்கொட்டான்கள் முடைஞ்சி கொடுக்குறதே சாத்தூர்ல தனிப்பெரும் தொழிலா நடந்துச்சு. கொட்டான் முடையுறதுக்கே சாத்தூரில் ஓலைக்கொட்டான் தெருனு தனி தெருவே உருவாச்சு. ஆனா, காலப்போக்குல கொட்டான்களை மறந்து எல்லாம் பாலீத்தீனுக்கும் மாறிப்போயாச்சு.

5 வெரைட்டிஸ் காரச்சேவு

கடந்தவந்த பாதையிலிருந்து நான் ஒரு விஷயத்தை மட்டும் நல்லா புரிஞ்சிக்கிட்டேன். அது என்னான்னா, மக்களுக்கு ஒரு பொருளைத் தரத்தோடையும், ருசியோடையும் கொடுத்தா கண்டிப்பா அவங்க நம்மள ஏமாத்த மாட்டாங்க. லாபத்துக்காக நாம் மக்களை ஏமாத்தா நினைச்சா, மக்கள் நம்மளை விட்டு விலகிப்போய்டுவாங்க. ஏன்னா மக்கள் யாரும் முட்டாள் கிடையாது. இதை தெளிவா புரிஞ்சிக்கிட்டேன். என்னோட எல்லா நிலையிலும் என்னை கைவிடமா கூடவே வந்தது வாடிக்கையாளர்கள்தான்.

சாத்தூர் காரச்சேவு
சாத்தூர் காரச்சேவு
ஆர்.எம்.முத்துராஜ்

உதாரணமாக, நான் தொழிலுக்கு வர்றப்போ ஒரு கிலோ காரச்சேவு 40 ரூபாய்க்கு விற்றோம். இப்போ ஒரு கிலோ 320-க்கு விற்கிறோம். மூலப்பொருளோட விலையேற்றம் தான் காரச்சேவு விலை உயர்வுக்கு முக்கியக் காரணம். அதேசமயம், லேபர் கூலி உயர்வு. முன்னாளில் இரண்டு பேர் பார்த்த வேலையை இப்போ அஞ்சு பேர் வச்சுத்தான் பார்க்கமுடியுது. அதனால அவங்களுக்கு தர்ற கூலி, இதெல்லாம்தான் விலையேற்றுத்துக்கு காரணமாகிடுது. ஆனாலும், பொருளின் தரம், சுவை, இரண்டும் விலையேற்றத்தை சமாளிச்சி மக்களோட ஆதரவை தக்கவச்சிது.

ஒரே மாதிரியான சரக்குகளையும் மக்கள் ரொம்ப காலத்துக்கு ரசிக்க மாட்டாங்க. அதனால காரச்சேவுலேயே ஓமம் போட்டு செய்ற நடப்புச்சேவு, நயம் சேவு, சீனிச்சேவு, கருப்பட்டிச்சேவு, மிளகுச்சேவுனு ஐந்து வெரைட்டிஸ் தயார் செய்றோம். இதுல நயம் சேவுக்கு எப்போதும் டிமாண்ட் தான்.

பாரம்பர்ய முறையில் கைப்பக்குவம்

காரச்சேவு தவிர, அரிசி மாவு, கைச்சுத்தல், தேன்குழல், கம்பு, தினை, கேழ்வரகு, கறிவேப்பிலை, மல்லி, பூண்டு, சீரகம் உள்பட 23 வகையில் முருக்கு, ஸ்வீட்ஸ், பால் தயாரிப்புகள் எல்லாம் தயார் செய்றோம். இதுயெல்லாம் தயார் செய்றது பாரம்பர்ய முறையில் தான். வீட்டிலுள்ள பெரியவங்க வழிகாட்டுதலோட ஆரம்பத்துல எப்படி கைப்பக்குவமா எல்லாம் செஞ்சி விற்க ஆரம்பிச்சமோ அதேபோலதான் இப்பவும் நடைமுறை இருக்கு.

ஆரம்பக்காலத்துல அப்பா கணேசனுக்கு உறுதுணையா அம்மா நாகரத்தினம் தான் இருந்து உதவி பண்ணுவாங்க. அப்போ நான் 8-ம்வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். அந்தசமயம் அப்பா பிசினஸ்க்கு ஆள் தேவைப்படுதுனு நானே படிப்பைவிட்டுட்டு வியாபாரத்துக்கு வந்துட்டேன்.

சாத்தூர் காரச்சேவு
சாத்தூர் காரச்சேவு
ஆர்.எம்.முத்துராஜ்

பிறகு என் காலத்துல என்னோட பிள்ளைகளையும் இந்தத் தொழிலுக்கு வருவாங்கனு நான் நினைச்சு பாக்கல. ஆனா, என் பசங்க இரண்டு பேரும் அவங்களாகவே முன்வந்து இந்த தொழிலை எடுத்து வெற்றிக்கரமாக நடத்திட்டு வர்றாங்க. இத்தனைக்கும் என்னோட பசங்க இரண்டு பேரையுமே அவங்க விருப்பப்படியே பெங்களூருல காலேஜ்ல நல்ல படிக்க வச்சேன். முதல் பையன் கணேஷ்ராஜ் பி.ஏ.பொலிட்டிக்கல் சயின்ஸ்-ம், இரண்டாவது பையன் ரத்தன் பாபா இளங்கலை புள்ளியியல் பட்டப்படிப்பும் முடிச்சிருக்காங்க. ஆனாலும் அவங்க தொழில் நடத்த விரும்புறேன்னு சொன்னப்போ அதுக்கு நான் தடையா நிக்கல.

தாத்தா சொல்லிக் கொடுத்த கடுமையான உழைப்பு..

தொழிலைப் பொறுத்தவரை, மார்க்கெட்டிங், புது வெரைட்டிஸ் சேர்கிறது எல்லாம் என்னோட தம்பி பார்த்துப் பார். நிர்வாகம் மற்ற விஷயங்களை என்னோட பசங்க பார்த்துகிறாங்க. நான், புரடக்‌ஷன் தரம், சுவை குறையாம பாத்துப்பேன். எங்களைப் பொறுத்தவரை, 'சந்தோஷமும் இனிப்பும் வேறுவேறல்ல.. ' இதுதான் எங்க தாரக மந்திரம். சின்ன இடத்திலிருந்து இப்போ ஓரளவு நல்ல நிலைமைக்கு வந்துருக்கோம்னா அதுக்கு எங்க தாத்தா சொல்லிக் கொடுத்த கடுமையான உழைப்புத்தான் காரணம். எங்கக்கிட்ட தொழில் செய்ய ஆலோசனை கேட்கிறவங்களுக்கும் எல்லாம் சொல்லித்தர்றோம். அவங்களும், எல்லாம் கத்துக்கிட்டு புதுசா தொழில் ஆரம்பிக்கறப்போ சாத்தூர் சேவு, லட்டுனு விற்கும்போது ஊர் பேரு நாலு திக்கும் பரவுதுங்கிற சந்தோசம் இருக்கு.

இந்த தொழிலை எங்க தாத்தா, அப்பான்னு இரண்டு பேருதான் ஆரம்பிச்சாங்க. இப்போ, எங்களுக்கு நாலு அவுட்லெட் இருக்கு; 50 பேருக்கு வேலை கொடுக்குற அளவுக்கு வளர்ந்திருக்கோம். எங்க தயாரிப்புகளை வெளியூர்ல ஊர் பெயரை பெருமைப்படுத்தனும்னு 'சாத்தூர் ஸ்நாக்ஸ்'னு மார்க்கெட்டிங் செய்றோம். இந்த அத்தனை பெருமைக்கும் எங்களுக்கான மக்கள் ஆதரவும், எங்கள் பணியாளர்களின் அர்ப்பணிப்பு உணர்வுடனான வேலையும்தான் காரணம்.

சாத்தூர் காரச்சேவு
சாத்தூர் காரச்சேவு
ஆர்.எம்.முத்துராஜ்

ஒருநாளைக்கு 200 கிலோ சரக்கு விற்பனைக்கு தயாராகும். பர்ச்சேஸ்காக மாதம் ரூ.15 லட்சம் முதலீடு தேவைப்படுது. பணியாளர்களுக்கு தினக்கூலி போக அவங்களுக்கு காலை டிபன், மதிய உணவு, தேநீர்ன்னு எல்லாம் தர்றோம். இதையெல்லாம் சமாளிக்க சரியான அளவுக்கு ரிட்டர்ன்ஸ் எடுக்குறதும் பிசினஸ்ல ரொம்ப முக்கியம்'' என்றார் ஆனந்தத்துடன்.

வெற்றிப் பயணங்கள் தொடரும்.