பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

சீனியர்ஸ் சிந்திக்க...

சாலமன் பாப்பையா
பிரீமியம் ஸ்டோரி
News
சாலமன் பாப்பையா

விகடன் நடத்திய ‘ஹலோ சீனியர்ஸ்’ நிகழ்ச்சி.

60 வயதுக்கு மேல் வாழ்க்கையை உற்சாக மாகவும், நம்பிக்கையுடனும் வாழ்வது எப்படி என்று வாசகர்களுக்கு வழிகாட்டியது, சமீபத்தில் விகடன் நடத்திய ‘ஹலோ சீனியர்ஸ்’ நிகழ்ச்சி. விகடன் குழுமமும், ஈரோடு மாவட்டக் காவல் துறையும் இணைந்து செப்டம்பர் 7-ம் தேதி, ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் இந்நிகழ்ச்சியை நடத்தியது. இதில் சாலமன் பாப்பையா, முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜன், மேற்கு மண்டல ஐ.ஜி பெரியய்யா மற்றும் ஈரோட்டு எஸ்.பி சக்தி கணேசன் எனப் பலரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.

தள்ளாத வயதிலும் குறையாத உற்சாகத்தோடு நிகழ்ச்சிக்கு வந்து ஆச்சர்யப்படுத்தினர் நூற்றுக்கணக்கான 60 ப்ளஸ் இளைஞர்கள்.

டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் களுக்கான உணவு, உடல்நலம், உடற்பயிற்சி போன்றவற்றை எளிமையாக எடுத்துரைத்தார். ‘முதியோர்களுக்கு நாங்கள் இருக்கிறோம்’ என நம்பிக்கை தந்தார் மேற்கு மண்டல ஐ.ஜி பெரியய்யா.

சீனியர்ஸ் சிந்திக்க...

ஈரோடு மாவட்டத்தில் முதியோர்களுக்கான திட்டங்களைச் சிறப்பாக நடத்திவரும் எஸ்.பி சக்தி கணேசன், “முதியோர்களின் பிரச்னைகளைத் தனிக்கவனம் எடுத்துத் தீர்க்கும் வகையில், பிரத்யேகமான செல்போன் எண் ஒன்றைக் கொடுத்து, இதுவரை 800-க்கும் மேற்பட்ட முதியோர்களின் பிரச்னைகளைத் தீர்த்திருக்கிறோம்” என்றார்.

முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜன், “எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொண்டு, நம்பிக்கை யுடனும் உற்சாகத்துடனும் வாழ்ந்தால் அறுபதுக்கு மேலேயும் வாழ்க்கை இனிப்பானதாக இருக்கும்” என்றார்.

சீனியர்ஸ் சிந்திக்க...

“மனதிலுள்ள சுமைகளை உதறிவிட்டு மகிழ்ச்சியாக வாழுங்கள். நீங்கள் ஆனந்தமாக வாழ்ந்தாலே உங்களுடைய ஆயுள் பெருகும்” என்று பேசி, கலகலப்பை ஊட்டினார் சாலமன் பாப்பையா.

இது 60களுக்கான அட்வைஸ் மட்டுமல்ல; இருபதுகளுக்கும் ஏற்றதுதான்!