பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

உலகக் கவனத்தை ஈர்க்கும் தமிழ்நாடு மாடல்!

இந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் கூட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
இந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் கூட்டம்

பிசினஸ்

இந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் தன் 76-வது ஆண்டுக் கூட்டத்தை சென்னையில் நடத்தியது. இந்தக் கூட்டத்தில் இந்துஸ் தான் சேம்பர் ஆஃப் காமர்ஸின் புதிய தலைவராகத் தேர்வாகி இருக்கும் முதலீட்டு நிபுணர் வ.நாகப்பன் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

பின்னர் பேசிய பொன்ப்யூர் கெமிக்கல்ஸ் நிறுவனத் தலைவர் எம்.பொன்னுசாமி, இனிவரும் காலங்களில் இந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் எதிலெல்லாம் கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் எடுத்துச் சொன்னார். “தமிழகம் தற்போது முதலீடு செய்வ தற்கு சிறந்த இடமாக மாறி யிருக்கிறது. பல மாநிலங்கள் தமிழகத்தைப் பார்த்து அதிசயிக்கும் அளவுக்குப் பல அறிவிப்புகளை வெளி யிட்டுக்கொண்டிருக்கின்றன. 2030-க்குள் ஒரு பில்லியன் டாலர் என்ற இலக்கும், 100 மில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. தற்போது தமிழகத்தின் ஏற்றுமதி 35 மில்லியன் டாலராக உள்ளது. தமிழகத்தின் ஜி.டி.பி 10 சதவிகிதமாக உள்ளது. இதை மேலும் வளர்த்தெடுக்கும் வகையில் தமிழகத் தொழில் துறை செயல்பட வேண்டும். ஜி.டி.பி-யை உயர்த்தும் அதே நேரம் தனிநபர் வருமானத்தை உயர்த்துவதிலும் வளர்ச்சி இருக்க வேண்டும்.

உலகக் கவனத்தை  ஈர்க்கும் தமிழ்நாடு மாடல்!

தமிழகத்தின் செயல் பாடுகள் உலக முதலீட்டாளர் களின் கவனத்தை ஈர்க்கிறது. தமிழகத்தில் தொழில் செய்ய சிறப்பான ஆதரவு கிடைக் கிறது; தொடர்ந்து விரிவாக்கம் செய்வதற்குத் தயாராக இருக்கிறோம் என்று முதலீட் டாளர்கள் கூறுவதைப் பார்க்க முடிகிறது. இங்கு நிலமும் குறைந்த விலையில் கிடைக்கிறது. அத்துடன் மனிதவளமும் தொழில் செய்ய ஏதுவாக இருக்கிறது. பெண் ஊழியர்கள் அதிக முள்ள மாநிலமாகவும் தமிழ்நாடு உள்ளது. இந்தியா வில் வேகமாக வளர்ந்து வரும் முதல் 5 மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.

தமிழ்நாடு தொழில் செய்வ தற்கேற்ற மாநிலம் என்ற பட்டியலில் 18-ம் இடத்தில் இருந்து 3-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. இது தமிழகத்தின் சிறு, குறு தொழில் துறை ஆணையத்தின் முயற்சியாலும், தமிழ்நாடு கைடன்ஸ் திட்டத்தின் நடவடிக்கைகளாலும் நடந் திருக்கிறது. ‘‘எந்த பிரச்னை என்றாலும் எங்களிடம் விட்டுவிடுங்கள், நீங்கள் பிசினஸைக் கவனியுங்கள்’’ என்று சொல்லும் அரசாக தற்போது தமிழக அரசு உள்ளது” என்றார்.

அடுத்து பேசிய யுனை டெட் இந்தியா இன்ஷூ ரன்ஸின் தலைவர் சத்யஜித் திரிபாதி, “ஒரு காலத்தில் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை விற்பனை செய்ய படாதபாடு பட வேண்டியிருக்கும். ஆனால், இப்போது அனைவருமே அறிந்து எடுக்கிறார்கள். இதற்கு, கொரோனாவுக்குத்தான் நாம் நன்றி சொல்ல வேண்டும். தொழில்துறையினருக்கும் பல வகையான காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளன. தொழில்துறையினர் இதைப் பயன்படுத்தி, முன்னேற்றம் காண வேண்டும்’’ என்றார்.

பின்னர் பேசிய முதன்மை விருந்தினரும், எம்.எஸ்.எம்.இ துறை செயலாளருமான அருண் ராய், “மாநிலத்தின் வளர்ச்சியில் அரசுடனும் அரசு அமைப்புகளுடனும் தொழில்துறை கூட்டமைப்புகள் கொண்டுள்ள நட்புறவுக்கு எப்போதுமே மிக முக்கியப் பங்குண்டு. சரியான நேரத்தில் தேவையான முயற்சிகளை எடுக்க தொழில் கூட்டமைப்புகளின் பரிந்துரையும் வழிகாட்டுதலும் அரசுக்கு மிகவும் உறுதுணையாக இருந்திருக்கின்றன.

வ.நாகப்பன்
வ.நாகப்பன்

கொரோனாவுக்குப் பிறகு, தொழில்துறை கூட்டமைப்புகளின் செயல்பாடுகளுக்கு அதிக தேவை உருவாகியுள்ளது. கொரோனாவுக்குப் பிறகு தொழில்துறையும், தொழில் நிறுவனங்களும் பல சவால்களைச் சந்தித்து வருகின்றன. அந்த சவால்களை எதிர்கொண்டு வளர்ச்சியின் பாதையில் மாநிலத்தைக் கொண்டுசெல்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதைச் சாத்தியாமாக்குவதில்தான் அரசும் தொழில் கூட்டமைப்புகளும் கைகோத்து செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது. அதன்மூலம் தான் தமிழகம் தொடர்ந்து மற்ற மாநிலங்களைவிட சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டுவருகிறது.

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் குறித்த டேட்டாக்களை உருவாக்க அனைத்து தொழில் அமைப்புகளும் முயற்சி எடுக்க வேண்டும்’’ என்று பேசி முடித்தார்.

இந்துஸ்தான் சேம்பர் ஆஃப் நிறுவனத்தின் புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கும் வ.நாகப்பன் நன்றி கூற, இந்தக் கூட்டம் நிறைவுபெற்றது.