
நிகழ்ச்சி
ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸின் `சேம்பர் டே’ கடந்த 23-ம் தேதி சென்னை யில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று, விருது வழங்கினார். ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸின் தலைவர் வ.நாகப்பன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
2023-ம் ஆண்டுக்கான பிசினஸ் எக்ஸலன்ஸ் ஃபார் அவுட்ஸ்டாண்டிங் அச்சீவ்மென்ட்ஸ் விருது ஏ2பி நிறுவனத்துக்கு (அடையார் ஆனந்த பவன் உணவகம்) வழங்கப்பட்டது.

விருதைப் பெற்றுக்கொண்ட ஏ2பி-யின் இயக்குநர் கே.டி.ஶ்ரீனிவாச ராஜா, ``ஏ2பி-யின் வெற்றிக்கு மக்கள் அளித்த ஆதரவும் பணியாளர்கள் தந்த ஒத்துழைப்புமே காரணம். தற்போது உலக அளவில் 160 கிளைகளைக் கொண்ட நிறுவனமாக ஏ2பி விளங்கி வருகிறது. இந்த விருதை தமிழக மக்களுக்கும் எங்கள் நிறுவனத்தின் பணியாளர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்’’ என்று பேசினார்.
அடுத்து, `தி சாம்பியன் ஆஃப் ஹிமானிட்டி அவார்டு ஃபார் சோஷியல் சர்வீஸ்’ விருது சோல் ஃப்ரீ டிரஸ்ட்க்கு வழங்கப்பட்டது.
விருதைப் பெற்றுக்கொண்ட இந்த டிரஸ்ட்டின் நிறுவனர் ப்ரீத்தி ஶ்ரீனிவாசன், ``விபத்தில் சிக்கி, உடல் உறுப்புகள் பாதிக்கப் பட்டவர்களை எந்த வகையிலும் குறைவாக எண்ண வேண்டாம்; இவர்களுக்கான வீல் சேர், யூரினரி கார்டிகல்ஸ், ஹாஸ்பிடல் பெட் போன்றவற்றுக்கு வரி விதிக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும்’’ என்று வேண்டுகோள் வைத்தார்.
விருதுகளை அளித்த பின் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் தமிழகத்தில் சிறு தொழில் நிறுவனங்களின் முன்னேற்றத்துக்காக அரசு செய்துவரும் நடவடிக்கைகள், திட்டங்கள் பற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னார்.
இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள் பலர் கலந்துகொண்டனர்!