Published:Updated:

பளிச் வருமானம் தரும் திருபுவனம் பட்டுப்புடவை!

ஜி.ஐ பிசினஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜி.ஐ பிசினஸ்

ஜி.ஐ பிசினஸ்

பளிச் வருமானம் தரும் திருபுவனம் பட்டுப்புடவை!

ஜி.ஐ பிசினஸ்

Published:Updated:
ஜி.ஐ பிசினஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜி.ஐ பிசினஸ்

ஆன்மிக நகரமான கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் என்றதுமே பளிச்சென எல்லோரது ஞாபகத்துக்கும் வருவது பட்டுப்புடவைதான். திருபுவனம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுப்புடவைகள் உயர்ரகம், மினுமினுப்பு, தரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கையாலேயே நெய்யப்படுகிறது. கும்பகோணம் பி.எஸ்.ஆர் பெரிய கடைவீதியில் வி.சுவாமிநாத அய்யர் என்ற பெயரில் திருபுவனம் பட்டுக்கென்றே தனிக் கடையை நடத்தி வருகிறார் சிவபிரகாஷ். 85 வருடங்களுக்கும் மேல் செயல்பட்டு வரும் பாரம்பர்யமான கடை என்ற பெயரையும் பெற்றுள்ளது இவரது கடை. சிவபிரகாஷிடம் பேசினோம்.

சிவபிரகாஷ்
சிவபிரகாஷ்

‘‘பட்டுப்பூச்சிகள் மல்பெரி என்ற இலையைச் சாப்பிட்டு வளரும். சிலந்தி வலை பின்னுவது போலவே, பட்டுப்பூச்சியும் தனது எச்சத்தில் நூலெடுத்து அந்த நூலைக்கொண்டே கூடு கட்டும். அந்த நூலை எடுத்து லேசான சூட்டில் இருக்கக்கூடிய சட்டியில் சூடு செய்வார்கள். பின்னர் பாவு, ஊடை என இரண்டு விதமாக நூல் பிரித்து எடுக்கப்படும். அதன் பின்னர் தறி நெய்பவர்களுக்கு அந்தப் பட்டு நூல் வந்து சேரும். தறி நெய்பவர்கள் என்ன கலரில் பட்டுப்புடவை வேண்டுமோ, அந்த கலர் சாயத்தில் நனைத்து சாயம் போட்ட பிறகு பட்டுப்புடவை நெய்வார்கள். பல உற்பத்தி யாளர்கள் புடவை தரமாக வேண்டும் என்பதற்காக நூலில் சாயம் ஏற்றி தறிக்காரர்களிடம் கொடுத்து, புடவை தயார் செய்து, அவர்களிடமிருந்து வாங்கி விற்பனை செய்வார்கள். தரமான பட்டு நூல், உயர் ரகமான ஜரிகையைக் கொண்டு தயார் செய்யப்படுவது மட்டுமன்றி, முழுமையாக கைத்தறியின் மூலம் கையாலேயே நெய்யப்படுவதே திருபுவனம் பட்டுப்புடவை. சாதாரணமான டிசைன் அல்லது டிசைன் அதிகமாகக் கொண்ட புடவைகள் தறி நெய்வதற்கு 5 நாள் முதல் 25 நாள் வரை ஆகும். ரூ.6,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை விலையில் புடவைகள் உள்ளன. அதைவிட அதிக விலையில் வேண்டும் எனில், ஆர்டர் கொடுத்தால் செய்து தருவோம். திருபுவனத்தில் தயாராகும் பட்டுப்புடவைகள் தமிழகம் மற்றும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மும்பை, சண்டிகர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் விற்பனைக்குச் செல்கிறது.

பளிச் வருமானம் தரும் திருபுவனம் பட்டுப்புடவை!

சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. பல வெளிநாட்டினர் திருபுவனத்துக்கே வந்து புடவை எடுத்துச் செல்வார்கள். அதே போல, தங்களுக்குத் தேவையான டிசைனைக் காட்டி அதே போல் புடவை வேண்டும் எனக் கேட்பார்கள் திருபுவனம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கஞ்சனூர், துகிலி, ஆடுதுறை, திருநாகேஸ்வரம், திருவிடைமருதூர் என இருபதுக்கும் மேற்பட்ட ஊர்களில் பட்டுப்புடவை செய்வதற்கான 300-க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் இருக்கிறார்கள். ஆண், பெண் தொழிலாளர்கள் என 5,000 குடும்பங்கள் திருபுவனம் பட்டுபுடவை உற்பத்தியில் ஈடுபட்டு வருவதுடன் அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வருகின்றனர். ‘திகோ சில்க்ஸ்’ என அழைக்கப்படும் திருபுவனம் பட்டுக் கூட்டுறவு சொசைட்டியில் மட்டும் 2,000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். பட்டுப்புடவை விற்பனைக்கென்றே திருபுவனத்தில் மட்டுமே நூறு கடைகள் உள்ளன. அத்துடன் கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பெரிய ஊர்களிலும் கடைகள் உள்ளன.

கும்பகோணம் பகுதியில் ஒரு மாதத்தில் திருபுவனம் பட்டுப்புடவை மூலம் மட்டும் ரூ.3 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. திருபுவனத்தைச் சுற்றியுள்ள பல கிராம மக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்வதால், 1955-ல் திருபுவனம் பட்டுக் கூட்டுறவு சொசைட்டி தொடங்கப்பட்டது. அதன் மூலம் திருபுவனம் பட்டுப்புடவையின் பெருமையை உலகறியச் செய்யும் வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன; வர்த்தகமும் மேம்படுத்தப்பட்டது. கண்காட்சி நடத்தி புடவைகளை டிஸ்பிளே செய்வோம். தொழிலில் புதிதாக என்ன டிசைன் வந்தாலும் அதை உடனுக்குடன் உற்பத்தியில் ஈடுபடுபவர்களுக்கு தெரிவிப் போம். இதனால் உற்பத்தி யாளர்கள் அப்டேட்டாக இருப் பதற்கு உதவியாக இருக்கிறது.

வாடிக்கையாளர்கள் வருகை, வர்த்தகம் ஆகியவற்றை அதிகரிக்கச் செய்வதற்கான செயல்களையும் செய்து எங்களை ஊக்கப்படுத்துவதிலும் முக்கியமான பங்காற்றி செயல் பட்டுவருகிறது திருபுவனம் பட்டுக் கூட்டுறவு சொசைட்டி.

ஒரு கிலோ ரூ.3,500-க்கு விற்கப் பட்ட பட்டு நூல் தற்போது ரூ.6,000-க்கும் மேல் விற்கிறது. விலைவாசி உயர்வால் புடவை உற்பத்தியாளர்கள் பல சிரமங் களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, புடவையைத் தயார் செய்து ஸ்டாக் வைக்க முடிய வில்லை. மேலும், புடவை உற்பத்தியும் குறைந்துவிட்டது. அரசு இதில் உரிய கவனம் செலுத்தி மூலப்பொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண் டும். இதன் மூலம் உற்பத்தி மட்டு மல்ல வர்த்தகமும் அதிகரிக்கும். திருபுவனம் பட்டுப்புடவை உற்பத்தியை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உத்வேகத்துடன் இதில் ஈடுபடுவார்கள்’’ என்றார்.

தமிழர் கலாசாரத்தின் பெயர் சொல்லும் இந்தப் பட்டுப் புடவையை இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு மக்கள் பயன் படுத்த வேண்டும்!