Published:Updated:

How to: Online-ல் ஆதார் PVC கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி? | How to apply for Aadhaar Card?

ஸ்மார்ட் ஆதார் கார்டு
News
ஸ்மார்ட் ஆதார் கார்டு

அரசால் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு அடையாள அட்டையுடன், கைரேகை, புகைப்படத்துடன் தனித்துவமான ஆதார் அட்டைதான் இந்தியாவின் பல இடங்களிலும் மக்களில் அடையாளத்துக்காகத் தற்போது கேட்கப்படுகிறது.

Published:Updated:

How to: Online-ல் ஆதார் PVC கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி? | How to apply for Aadhaar Card?

அரசால் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு அடையாள அட்டையுடன், கைரேகை, புகைப்படத்துடன் தனித்துவமான ஆதார் அட்டைதான் இந்தியாவின் பல இடங்களிலும் மக்களில் அடையாளத்துக்காகத் தற்போது கேட்கப்படுகிறது.

ஸ்மார்ட் ஆதார் கார்டு
News
ஸ்மார்ட் ஆதார் கார்டு

2009-ம் ஆண்டு முதல் இந்திய அரசின் ஆட்சிப் பகுதியில் வாழும் இந்திய மக்கள் அனைவருக்கும் தனித்தனியாக ஒரு எண்ணைக் கொண்ட அடையாள அட்டையாக இருப்பது ஆதார் அட்டை. அரசால் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு அடையாள அட்டையுடன், கைரேகை, புகைப்படத்துடன் தனித்துவமான இந்த ஆதார் அட்டைதான் இந்தியாவின் பல இடங்களிலும் மக்களின் அடையாளத்துக்காகத் தற்போது கேட்கப்படுகிறது.

ஆதார் கார்டு
ஆதார் கார்டு

அரசால் வழங்கப்படும் ஆதார் அட்டையில் நார்மல் அட்டை, ஸ்மார்ட் கார்ட் என வகைகள் உள்ளன. இதில் ஸ்மார்ட் கார்டுக்காக ஆன்லைனில் எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது குறித்த விளக்கம் இதோ.

ஸ்மார்ட் ஆதார் கார்டுக்காக ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்:

ஸ்டெப் 1:

- இன்டர்நெட் வசதியுள்ள கணினியில் முதலில் தேடுபொறியில் சென்று UIDAI என்ற போர்டலை ஓப்பன் செய்துகொள்ள வேண்டும்.

ஸ்டெப் 2:

- UIDAI போர்டல் ஓப்பன் ஆனதும், அதில் மை ஆதார் (my aadhar) என்ற பகுதியை திறந்திட வேண்டும். அதில் `ஆர்டர் ஆதார் பிவிசி' (order aadhar PVC card) என்ற பிரிவை கிளிக் செய்து உள் நுழைந்திட வேண்டும்.

ஸ்டேப் 3:

- அதன்பின் லாகின் (Login) பக்கம் ஒன்று திரையில் தோன்றும். அதில் முதலில் உங்களுடைய 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். பின் கொடுக்கப்பட்டிருக்கும் கேப்ட்சா கோட் ஒன்றை சரியாக உள்ளிட வேண்டும். அதன்பின் `send OTP' என்ற இடத்தை கிளிக் செய்திட வேண்டும்.

ஆதார் கார்டு
ஆதார் கார்டு

சில மணித்துளிகளில் நமது மொபைல் நம்பருக்கு OTP வந்துவிடும், அதைக் கேட்கப்பட்ட இடத்தில் நிரப்பிவிட்டு நிபந்தனைகள் (terms and condition) என்ற பகுதியை க்ளிக் செய்துவிட்டு submit பட்டனைத் தட்டினால் அடுத்த பக்கம் ஒன்று இருக்கும். அதில் நம் ஆதார் அட்டையைக் காட்டும். ஒருவேளை நம்முடைய ஆதார் அட்டையில் இணைக்கப்பட்டுள்ள எண்ணை தற்போது உள்ளிடாமல் இருந்தால் அவ்வாறு ஆதார் அட்டையை காட்டாது. நம்முடைய ஆதார அட்டை தானா என உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 4:

- ஆதார் அட்டையை உறுதிப் படுத்திக்கொண்ட பிறகு, பணம் செலுத்த வேண்டும். அதற்குப் பின் make payment என்று இருக்கும் கட்டத்தைத் தட்டி பண பரிவர்த்தனை செய்ய வேண்டும். அவ்வாறு செய்த பின் அதில் கிரெடிட் கார்ட், டெபிட் கார்டு, அல்லது மொபைல் பணவர்த்தனை எனப் பல முறைகள் இருக்கும். அதில் நமக்கு ஏற்ற முறையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அதற்கேற்ற முறையில் 50 ரூபாயை செலுத்த வேண்டும்.

பணம் செலுத்திய பின் பணம் செலுத்தியதற்கான ரசீது திரையில் காட்டப்படும். அதைக் கண்டிப்பாகப் பதிவிறக்கம் செய்து வைத்து கொள்ளவும்.