Published:Updated:

`60% இந்திய ஊழியர்கள் லேஃஆப்’ - 50% வருவாயை இழக்கத் துணிந்த ஹுவாய்!

ஹூவாய்
News
ஹூவாய்

இந்த ஆண்டு இந்தியாவில் ஹுவாயின் வருவாய் இலக்கு 350 - 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள். ஆனால், இதற்கு முந்தைய ஆண்டுகளில் அதன் இலக்கு 700 - 800 மில்லியன் டாலர்களாக இருந்தது.

Published:Updated:

`60% இந்திய ஊழியர்கள் லேஃஆப்’ - 50% வருவாயை இழக்கத் துணிந்த ஹுவாய்!

இந்த ஆண்டு இந்தியாவில் ஹுவாயின் வருவாய் இலக்கு 350 - 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள். ஆனால், இதற்கு முந்தைய ஆண்டுகளில் அதன் இலக்கு 700 - 800 மில்லியன் டாலர்களாக இருந்தது.

ஹூவாய்
News
ஹூவாய்

சீன தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவாய், இந்தியாவில் அதன் 2020-ம் ஆண்டுக்கான வருவாய் இலக்கை 50 சதவிகிதம் குறைத்துக்கொண்டது. ஹுவாய், இந்தியாவில் உள்ள அதன் யூனிட்டில் ரிசர்ச் அன் டெவலப்மென்ட் மற்றும் குளோபல் சர்வீஸில் இருக்கும் ஊழியர்கள் தவிர மற்ற 60 - 70 சதவிகித ஊழியர்களைத் தற்காலிகமாக வேலையைவிட்டு (லேஃஆப்) நிறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஹூவாய்
ஹூவாய்

இந்த ஆண்டு இந்தியாவில் ஹுவாயின் வருவாய் இலக்கு 350 - 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள். ஆனால், இதற்கு முந்தைய ஆண்டுகளில் அதன் இலக்கு 700 - 800 மில்லியன் டாலர்களாக இருந்தது. எனவே, அதன் டார்கெட்டை 50 சதவிகிதம் குறைத்துவிட்டதாகத் தெரிகிறது.

சீன ராணுவம் இந்திய எல்லைப் பகுதியில் 20 ராணுவ வீரர்களின் உயிரைப் பறித்த நிகழ்வுக்குப் பிறகு இந்தியாவில், சீன தயாரிப்புகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற பிரசாரம் வலுப்பெற்று வருகிறது. இந்தப் போராட்டத்துக்கு இடையே இப்படி ஒரு செய்தியும் வெளிவந்துள்ளது. ஹுவாய், இச்செய்தி உண்மையல்ல எனக் கூறியுள்ளது. ஆனால், வேறு விளக்கம் எதுவும் வழங்கவில்லை.

இதைப்பற்றி ஹுவாய் இந்திய யூனிட் தரப்பில், ``நாங்கள் தொடர்ந்து எங்கள் சேவைகளை வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு இணங்க வழங்குவோம். இந்தியாவில் எங்கள் செயல்பாடுகள், இங்குள்ள திறமையான ஊழியர்கள் உதவியோடு எல்லா வாடிக்கையாளர்களையும் திருப்திபடுத்தும்படி நடைபெறும்" என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இந்தியாவின் அரசின் இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களையும், 4ஜி நெட்வொர்க் மேம்பாட்டுக்காக சீன உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.