இலங்கையின் மத்திய வங்கியான (CBSL) இந்திய ரூபாயை (INR) வெளிநாட்டு நாணயமாக நியமிப்பதற்காக இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) ஒப்புதலுக்கு காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வோஸ்ட்ரோ கணக்குகள் எனப்படும் சிறப்பு ரூபாய் வர்த்தக கணக்குகளை திறந்துள்ளனர். சார்க் பிராந்தியத்திற்கு உட்பட்ட 8 நாடுகளிலும் சுற்றுலா மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்த இலங்கை, இந்திய ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை வைத்துள்ளது.

இலங்கையின் இந்திய ரூபாயின் ஆர்வம் ஏன்?
சமீபத்தில் கடுமையான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது இலங்கை. டாலர் கையிருப்பு இல்லாததால் கச்சா எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க டாலருக்கு பதிலாக இந்திய ரூபாய்களை பயன்படுத்துவதன் மூலம் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியும் என்று எண்ணுகிறது இலங்கை. இதன் மூலம் நாட்டுக்கு தேவையான பணப்புழக்கத்தை அதிகப்படுத்த முடியும்.
இதன் விளைவாக இலங்கை மற்றும் இந்திய மக்கள் சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு அமெரிக்க டாலர்களுக்கு பதிலாக இந்திய ரூபாயை பயன்படுத்தலாம். அதாவது $10,000 (INR 8,26,823) வடிவத்தில் வைத்திருக்க முடியும்.

கடந்த ஜூலை மாதம் முதல், டாலரின் பற்றாக்குறை உள்ள நாடுகளை ரூபாய் முறைக்கு கொண்டு வர இந்திய அரசு முயன்று வருகிறது. இந்த முயற்சிகளின் மூலம் இந்திய ரூபாய் சர்வதேசமயமாகும். இதுவரை, இந்திய மத்திய வங்கி ரஷ்யாவுடன் ரூபாய் வர்த்தகத்திற்கு 12 வோஸ்ட்ரோ கணக்குகளை திறக்க வங்கிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது .
இந்திய நிதி அமைச்சகம், இந்திய வங்கிகள் சங்கம் (IBA), ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு (FIEO) ஆகியவற்றை சர்வதேச ரூபாய் வர்த்தகம் குறித்த விழிப்புணர்வை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளது.