Published:Updated:

முதல் காலாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி 13.5% ஆக உயர்வு: என்ன காரணம்?

ஜி.டி.பி வளர்ச்சி விகிதம்
News
ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் ( vikatan )

இப்படி சந்தையின் கணிப்பை விட குறைவான ஜி.எஸ்.டி வளர்ச்சி விகிதமானது பதிவாகியுள்ளதால் கோல்டுமேன் சாக்ஸ் தரகு நிறுவனம் 2022-ம் ஆண்டுக்கான இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதத்தை முன்பு கணித்த 7.6%-லிருந்து 7%-ஆக குறைத்துள்ளது.

முதல் காலாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி 13.5% ஆக உயர்வு: என்ன காரணம்?

இப்படி சந்தையின் கணிப்பை விட குறைவான ஜி.எஸ்.டி வளர்ச்சி விகிதமானது பதிவாகியுள்ளதால் கோல்டுமேன் சாக்ஸ் தரகு நிறுவனம் 2022-ம் ஆண்டுக்கான இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதத்தை முன்பு கணித்த 7.6%-லிருந்து 7%-ஆக குறைத்துள்ளது.

Published:Updated:
ஜி.டி.பி வளர்ச்சி விகிதம்
News
ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் ( vikatan )

இந்திய நாட்டின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் 13.5% வளர்ச்சி அடைந்துள்ளது என்று என்.எஸ்.ஓ தெரிவித்துள்ளது. கடந்த 4 காலாண்டுகளில் இதுதான் அதிகபட்ச வளர்ச்சியாகும். வேளாண்மை, சேவைத் துறை சிறப்பாகச் செயல்பட்டதையடுத்து, இந்த வளர்ச்சி கிடைத்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

GDP
GDP

ஆனால்,இந்தியாவின் நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சியான 13.5% என்பது ரிசர்வ் வங்கி கணித்த அளவைவிட குறைவு. ரிசர்வ் வங்கி, முதல் காலாண்டில் ஜி.டி.பி 16.4% வளர்ச்சி பெறும் எனக் கணித்திருந்தது. இப்படி சந்தையின் கணிப்பை விட குறைவான ஜி.எஸ்.டி வளர்ச்சி விகிதமானது பதிவாகியுள்ளதால் கோல்டுமேன் சாக்ஸ் தரகு நிறுவனம் 2022-ம் ஆண்டுக்கான இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதத்தை முன்பு கணித்த 7.6%-லிருந்து 7%-ஆக குறைத்துள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2021-22ம்ஆண்டு முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 20.1% வளர்ச்சி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 2021-ம் ஆண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் ஜிடிபி 8.4%, அக்டோபர்-டிசம்பரில் 5.4%, 2022 ஜனவரி-மார்ச்சில் 4.1% வளர்ச்சிஅடைந்திருந்தது.

பொருளாதாரம்
பொருளாதாரம்

மூடிஸ் தரகு நிறுவனமும் 2023-ம் ஆண்டுக்கான முன்பு கணித்த ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் 5.4%-லிருந்து 5.2%-ஆக குறைத்துள்ளது. 2022-ம் ஆண்டுக்கான முன்பு கணித்த ஜி.டி.பி வளர்ச்சி விகிதத்தை 8.3% -லிருந்து 7.7%-ஆக குறைத்துள்ளது.