நடப்பு
Published:Updated:

தீவிர நோய்களுக்கான காப்பீடு: ஏன் வேண்டும் க்ரிட்டிக்கல் இல்னஸ்?

சா.ராஜசேகரன், நிதி ஆலோசகர், புதுச்சேரி.

புற்றுநோய், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஒருவருக்கு வந்தால், அது நோயாளியை மட்டும் பாதிக்காமல், அவரைச் சார்ந்திருக்கும் குடும்பத்தையும் பொருளாதார ரீதியாக சரிவில் தள்ளிவிடும். இந்த அபாயகரமான பாதிப்புகள் / நோய்கள் வயது வரம்பின்றி அனைவருக்கும் வந்துவிடுகிறது. இந்தப் பாதிப்புகளைக் குணப்படுத்த, சிகிச்சை அளிக்க நவீன வசதிகள் இருந்தும், அதற்கான நிதி ஆதாரம் இல்லாததால், தங்கள் உடைமைகளையும், சேமிப்பினை யும், சொத்தினையும் விற்கும் சூழ்நிலை பல குடும்பத்துக்கு ஏற்பட்டுவிடுகிறது. இதனைத் தவிர்க்க ஒரே வழி, க்ரிட்டிக்கல் இல்னஸ் பாலிசி (Critical illness Policy) என்கிற தீவிர நோய் பாதிப்புக்கான பாலிசியை எடுத்துக்கொள்வதுதான்.

 தீவிர நோய்களுக்கான காப்பீடு!

பொதுக் காப்பீட்டு துறையைச் சேர்ந்த தனியார் மற்றும் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் ஏராளமான பாலிசிகளை இந்தப் பிரிவின் கீழ் அறிமுகப்படுத்தியுள்ளன. இந்தக் காப்பீட்டின் கீழ் குறிப்பிட்ட சில நோய்களுக்கான மருத்துவச் செலவுக்கு (சில விதிமுறைகளுக்கு உட்பட்டு) காப்பீடு கிடைக்கும்.

தீவிர நோய்த் தாக்கம் வருவதற்கு பல காரணங்களைச் சொல்கிறார்கள். மதுப்பழக்கம், உடற்பயிற்சி செய்யாமை, நேரம் தவறி உண்பது, சுகாதாரமற்ற உணவு, உடம்பு ஏற்றுக்கொள்ளாத உணவு, ஓய்வின்றி வேலை செய்தல், மன உளைச்சல். இவையாவும் தீவிர நோய் வருவதற்கு முக்கிய காரணங்களாகும்.

தீவிர நோய் காப்பீடு பற்றிய முக்கிய விவரங்களை இனி பார்ப்போம்.

தீவிர நோய்களுக்கான காப்பீடு: ஏன் வேண்டும் க்ரிட்டிக்கல் இல்னஸ்?

பாலிசியின் தன்மையைப் பொறுத்து பராமரிப்பு மற்றும் முக்கிய நோய் களுக்கான சிகிச்சை செலவு, நோயைக் குணப்படுத்தும் சாதனங்கள் வாங்குவ தற்கான செலவுகள் போன்றவற்றுக்கு இந்தத் தொகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தீவிர நோய் பாதுகாப்புக்கான பாலிசி கவரேஜ் தொகை ரூ.2 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை இருக்கிறது. இந்தக் காப்பீட்டுத் தொகை நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும்.

பொதுவாக, 18 வயதிலிருந்து 65 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். 2 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் தங்கள் பெற்றோருடன் இணைந்து இந்தக் காப்பீட்டின் மூலம் பயன் பெறலாம்.

 பாலிசி எடுக்க 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை தேவைப்படாது. 46 முதல் 65 வயதுக்குட்பட்டவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைத் தேவைப்படும்.

எதற்கெல்லாம் க்ளைம் கிடைக்கும்?

தீவிர நோய் காப்பீட்டின் கீழ் கவரேஜ் கிடைக்கும் முக்கியப் பட்டியல் வருமாறு:

1. மாரடைப்புச் சிகிச்சை, 2. இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை,
3. புற்றுநோய், 4. சிறுநீரகச் செயலிழப்பு, 5.முக்கிய உறுப்புகள் மாற்றம்,
6. பக்கவாதம், 7. முதன்மை நுரையீரல் மாற்றம், 8. உயர் ரத்த அழுத்த பாதிப்பு, 9. இருதய வால்வு மாற்றம், 10. மூளையில் கட்டி, 11. கண்பார்வை இழத்தல் ஆகிய நோய்களின் அறிகுறி தென்பட்டால் அதற்கான சிகிச்சை செலவினை, பாலிசியின் வரம்புக்குட்பட்டு காப்பீட்டு நிறுவனம், இழப்பீடாகக் கொடுக்கும்.

தீவிர நோய்களுக்கான காப்பீடு: ஏன் வேண்டும் க்ரிட்டிக்கல் இல்னஸ்?

 காப்பீடு விலக்குகள்:

போர் அல்லது அதைச் சார்ந்த மருத்துவச் செலவுகள்

சட்ட விரோதச் செயல்

தற்கொலை முயற்சி புகையிலை, மருந்து மற்றும் மது தொடர்பான சிக்கல்கள், ஹெச்ஐவி பாதிப்பு மகப்பேறு அல்லது அதனைச் சார்ந்த உபாதைகள் (தனி பாலிசி மூலம் கவரேஜ் பெறலாம்)\ஏற்கெனவே உள்ள நோய்களுக்கு (குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு).

 க்ளைம் பெறுவது எப்படி?

நோய் உறுதிப்பட்ட விஷயத்தை இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குத் தெரிவித்து, பட்டியலில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து கேஷ்லெஸ் வசதி மூலம் சிசிச்சை பெற்றுக்கொள்ள முடியும். அப்படி செய்யும்போது, காப்பீட்டுத் தொகை வரைக்கும் இப்படி சிசிச்சை எடுத்துக்கொள்ள முடியும். அதற்கு மேற்பட்ட தொகையை கையிலிருந்து போட வேண்டி இருக்கும்.

தீவிர நோய்களுக்கான காப்பீடு: ஏன் வேண்டும் க்ரிட்டிக்கல் இல்னஸ்?

பாலிசியின் தன்மையைப் பொறுத்து, தீவிர நோய் பாதிப்பு உறுதிபட்டதற்கான மருத்துவ ஆதாரத்தை அளித்தால், கவரேஜ் தொகை கொடுப்பதும் இருக்கிறது. பாலிசி எடுக்கும்போதே இந்த க்ளைம்

தீவிர நோய்களுக்கான காப்பீடு: ஏன் வேண்டும் க்ரிட்டிக்கல் இல்னஸ்?

விவரத்தைத் தெரிந்துவைத்துக் கொள்வது நல்லது.
 
மேலும், நோய் கண்டறிந்த நாளிலிருந்து 30 நாட்கள் வரை, காப்பீடு செய்தவர் உயிருடன் இருக்க வேண்டியது அவசியமாகும். இல்லை என்றால் க்ளைம் கிடையாது.

பாலிசி எடுத்த நாளிலிருந்து 90 நாட்கள் வரை எந்த க்ளைமும் பெற முடியாது. பாலிசியைத் தொடர்ச்சியாகத் தக்க நேரத்தில் புதுப்பித்தல் அவசியமாகும். அல்லது பாலிசி செயலிழந்துவிடும்.

தீவிர நோய்களுக்கான காப்பீட்டை எடுப்பதன் மூலம் சில ஆயிரம் ரூபாய் பிரீமியம் கட்டி, சில  லட்சம் ரூபாய் மருத்துவச் செலவை மிக எளிதாகக் குறைக்க முடியும் என்பதே உண்மை. இதனால் நம் வாழ்க்கையில் தேவையைக் குறைக்காமல், முன்போல (நோய் வருவதற்கு முன்) சீராக, நிலையாக வாழ முடியும்.